என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Censor Board"

    • மாமன் திரைப்படம் வரும் மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
    • லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ளனர்.

    கருடன் படத்திற்குப் பிறகு நடிகர் சூரி, 'விலங்கு' இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன் படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ளனர்.

    ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது.

    அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக 'மாமன்' உருவாகி இருக்கிறது.

    இப்படம் மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் மாமன் படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழை வழங்கியுள்ளது. இதுதொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • 'சந்தோஷ்' படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்ட்டது.
    • 'சந்தோஷ்' படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் (CBFC) தடை விதித்துள்ளது.

    பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் 'சந்தோஷ்' . கடந்த ஆண்டு இந்த படம் வெளிநாடுகளில் வெளியானது.

    வட இந்தியாவில் நடக்கும் கதையான இந்தப் படம், கணவன் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. பின்னர் அந்தப் பெண் போலீசிடம் ஒரு தலித் பெண்ணின் கொலை வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை பற்றி இப்படம் பேசுகிறது.

    இங்கிலாந்து சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்ட்ட 'சந்தோஷ்' படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் (CBFC) தடை விதித்துள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் வெளியிட முடியாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் சந்தோஷ் திரைப்படத்தை அனுமதியின்றி வெளியிடுவோம் என்று இயக்குநர் பா. ரஞ்சித் பேசியுள்ளார்.

    இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா. ரஞ்சித், "சந்தோஷ் திரைப்படத்தை வெளியிடுவதற்காக ஜெயிலுக்கு போகவும் தயார்" என்று தெரிவித்தார். 

    • இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • படத்தின் முதல் பாடலான Loading Bazooka நேற்று வெளியானது.

    கடைசியாக கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தை தொடர்ந்து மம்மூட்டி பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆஃப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

    படத்தின் முதல் பாடலான Loading Bazooka நேற்று வெளியானது. இந்நிலையில் இப்படத்துக்கு U/A 13+ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதை படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதன் பொருள் படம் திரையிட தகுதியானது, ஆனால் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோரின் வழிகாட்டுதலின் பேரிலேயே இப்படத்தை காட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    • பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் 'சந்தோஷ்'
    • ஆசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான பட்டத்தையும் ஷஹானா கோஸ்வாமி பெற்றார்.

    பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் 'சந்தோஷ்' . கடந்த ஆண்டு இந்த படம் வெளிநாடுகளில் வெளியானது. 'சந்தோஷ்' படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்ட்டது.

    இந்நிலையில் இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் (CBFC) தடை விதித்துள்ளது.

    கதை என்ன?

    வட இந்தியாவில் நடக்கும் கதையான இந்தப் படம், கணவன் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. பின்னர் அந்தப் பெண் போலீசிடம் ஒரு தலித் பெண்ணின் கொலை வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை பற்றி இப்படம் பேசுகிறது.

    என்ன பிரச்சனை?

    இந்நிலையில் படத்தில் உள்ள கருத்துக்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி பல பகுதிகளை வெட்ட தணிக்கை வாரியம் கோரியுள்ளது. ஆனால் அதற்கு படக்குழு மறுத்துள்ளதால் படத்தை வெளியிட தடை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பேசிய படத்தின் ஹீரோயின் (பெண் போலீஸ் கதாபாத்திரம்) ஷஹானா கோஸ்வாமி. "படத்தை வெளியிடுவதற்குத் தேவையான சில மாற்றங்களின் பட்டியலை சென்சார் வழங்கியுள்ளது.

    எங்கள் முழு குழுவும் அதனுடன் உடன்படவில்லை, ஏனென்றால் அவர்கள் படத்தில் நிறைய மாற்றங்களைச் செய்ய விரும்புகிறார்கள், எனவே, இந்திய திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை.

    இந்தியாவில் வெளியிட இவ்வளவு வெட்டுக்களும் மாற்றங்களும் தேவைப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை அவர் பெற்றிருந்தார்.

    படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான சந்தியா சூரி, சென்சார் குழுவின் முடிவை ஏமாற்றமளிப்பதாகவும் மனதை உடைப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    அவர் கூறியதாவது, "இது எங்கள் அனைவருக்கும் ஆச்சரியமான முடிவு, ஏனென்றால் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் இந்திய சினிமாவுக்குப் புதியவை என்றோ அல்லது இதற்கு முன்பு வேறு படங்களில் எழுப்பப்பட்டதில்லை என்றோ நான் நினைக்கவில்லை. சென்சார் வாரியம் வழங்கிய வெட்டுக்களின் பட்டியலை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார்.

    • படத்தில் இடம்பெறும் 'தீரா' பாடலின் லிரிக் வீடியோ, டிரைலர் சமீபத்தில் வெளியானது.
    • எலக்சன் படத்திற்கான சென்சார் சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

    உறியடி படத்தை இயக்கி அதில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் விஜய்குமார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான "ஃபைட் கிளப்" படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    அதைதொடர்ந்து 'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் அடுத்ததாக இயக்கும் எலக்சன் திரைப்படம் வரும் 17ம் தேதி வெளியாகிறது.

    'எலக்சன்' திரைப்படத்தில் விஜய்குமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

    எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார்.

    படத்தில் இடம்பெறும் 'தீரா' பாடலின் லிரிக் வீடியோ, டிரைலர் சமீபத்தில் வெளியானது.

    இந்நிலையில், எலக்சன் படத்திற்கான சென்சார் சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எலக்சன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

    • பாஜக எம்.பி கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள படம் எமர்ஜென்சி.
    • படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் செல்வேன். நாடு தற்போது உள்ள சூழலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று கங்கனா தெரிவித்திருந்தார்.

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975 ஜூன் 21 ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடமானது 1977 மார்ச் 21 ஆம் தேதி வரை நீடித்தது. இந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை மையாக வைத்து பாஜக எம்.பி கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள படம் எமர்ஜென்சி. இதில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார்.

    வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் சீக்கிய சமூகத்தினரைத் தவறாக சித்தரித்துள்ளதாக எழுந்த சர்சையைத் தொடர்ந்து படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகள் குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அதை நீக்கும்படியும் சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

     

    முன்னதாக இந்திரா காந்தியின் படுகொலை, பஞ்சாப் கலவரங்கள் உள்ளிட்டவற்றை படத்தில் காட்டக்கூடாது என்று அழுத்தம் கொடுக்கப்படுகிறது. படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் செல்வேன். நாடு தற்போது உள்ள சூழலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று கங்கனா தெரிவித்திருந்தார்.  

     சீக்கியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் எமர்ஜென்சி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சிரோன்மணி அகாலிதளம் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தேவரா வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • தேவரா படத்தின் டிரைலர் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியானது.

    நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.

    இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பான் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்துள்ளார்.

    படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    படத்தின் 3 - வது பாடலான தாவூதி பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் டிரைலர் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியானது.

    இந்நிலையில், தேவரா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    படத்தை பார்த்தை சென்சார் அதிகாரிகள் நான்கு காட்சிகளை நீக்குமாறு தெரிவித்துள்ளனராம். அதிகப்படியான வன்முறை காட்சிகள் இடம்பிடித்திருப்பதால் அவற்றை நீக்குமாறு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் என இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தின் டிரைலர் நாளை [அக்டோபர் 2] வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
    • 2 மணி நேரம் 43 நிமிடம் 25 நொடிகள் ரன்னிங் டைம் கொண்டதாக உருவாகியுள்ள வேட்டையன் உருவாகியுள்ளது

    ஜெய்பீம் படத்தின்மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

     

     அனிருத் இசையமைத்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடத்தைப்பெற்ற நிலையில் படத்தின் டீசரும் வெளியாகி கவனம் பெற்றது. வரும் அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் டிரைலர் நாளை [அக்டோபர் 2] வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் வேட்டையன் படத்துக்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 43 நிமிடம்  25 நொடிகள் ரன்னிங் டைம் கொண்டதாக உருவாகியுள்ள வேட்டையன் படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.
    • படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கங்குவா படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கங்குவா திரைப்படம் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் ஓடக்கூடிய யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இதனை படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்

    மெரினா புரட்சி பட விவகாரத்தில் 7 நாட்களுக்குள் முடிவெடுக்க தணிக்கைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MarinaPuratchi #CensorBoard
    2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக 8 நாட்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 'மெரினா புரட்சி' திரைப்படத்திற்கு 100 நாட்களாகியும் தணிக்கை தரப்படவில்லை. காரணம் சொல்லாமல் 2 முறை நிராகரித்துள்ளனர். 

    வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நாச்சியாள் பிலிம்ஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்கள். 

    இந்த சூழ்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், 



    1. இந்த தீர்ப்பு நகல் கிடைத்த 2 நாட்களுக்குள் படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ராஜ் தன்னிடமுள்ள ஆதாரங்கள் விளக்கங்கள், நியாயங்களுடன் ரிவைசிங் கமிட்டி முன்பு ஆஜராக வேண்டும்.

    2. அதிலிருந்து 7 நாட்களுக்குள் தணிக்கைத்துறை, படத்திலுள்ள நல்ல நோக்கங்கள் மற்றும் அதன் தன்மை அடிப்படையில்  முடிவெடுக்க வேண்டும்.

    என உத்தரவிட்டுள்ளார். இதற்கு இப்படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில், கதாநாயகன், வில்லன் என்று பெயர் பெற்ற நடிகர் அரவிந்த் சாமி, சென்சாரில் அரசியல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். #ArvindSwami
    மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தளபதி’ படம் மூலம் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. ரோஜா, பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்தவர் தற்போது ரீ எண்ட்ரியில் வில்லனாக நடித்து வருகிறார். பத்திரிகை நடத்திய மாநாட்டில் நடிகர் அரவிந்த் சாமி கலந்துகொண்டார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

    கேள்வி:- மணிரத்னம் படங்களில் அதிகம் நடித்தது ஏன்?

    பதில் நான் நடிகனாக வேண்டும் என எப்போதும் நினைத்ததில்லை. அது தற்செயலாக நடந்த விபத்து. பணம் கிடைக்கிறதே என விளம்பரப் படங்களில் நடித்து வந்தேன். அதை பார்த்து தளபதி படத்தில் நடிக்க மணிரத்னம் என்னை அழைத்தார். எனக்கு என்ன வரும், வராது என்பது மணிரத்னத்திற்கு நன்றாக தெரியும். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவருடைய படப்பிடிப்பின் போது தளத்தில் ஒரு ஒழுங்கு இருக்கும். அதன் மூலம் தான் நான் நடிக்க கற்றுக்கொண்டேன்.

    கேள்வி:- இன்றைய சினிமாவுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை என்ன?

    பதில்:- சென்சார் போர்டு என்ற அமைப்பு இப்போதும் இருக்கிறது. ஆனால் அவர்கள் வகுத்துள்ள வரையறைகள் இன்றைய கால சூழலுக்கு ஏற்புடையதாக இல்லை.

    தமிழ் சினிமாவில் ஒரு ஆணும் பெண்ணும் முத்தம் கொடுக்கும் காட்சியை வைத்தால் யூ சான்றிதழ் கிடைக்காது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய படங்களுக்கு யூ சான்று கிடையாது. அதேபோல அன்பை வெளிப்படுத்தும் முத்தக்காட்சிக்கும் அனுமதி கிடையாது.



    சென்சாரில் அரசியல் இருக்கிறது. இங்கே நிறைய கோபக்கார கும்பல் இருக்கிறது. நாங்கள் அவர்களுடைய உணர்வுகளை புண்படுத்த மாட்டோம் என அவர்களுக்கு தெரிய வேண்டும். ஒரு நடிகனின் வேலை மற்றவர்களை காயப்படுத்துவது அல்ல, அவர்களை சிந்திக்க வைப்பது. சினிமா வேலை போதிப்பது அல்ல. மக்களை சந்தோ‌ஷப்படுத்துவது. ஆனால் அதேநேரம், படம் பார்த்த ஒருவர், தனது வீட்டிற்கு என்ன எடுத்து செல்கிறார் என்பதும் முக்கியம். அதேபோன்ற சர்ச்சைக்குரிய படங்களில் நான் நடிக்க மாட்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×