search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central BJP"

    • பல கணக்குகள், பதிவுகளை தற்காலிகமாக முடக்குவதாக X நிறுவனம் தெரிவித்துள்ளது.
    • முடக்கப்பட்ட பல கணக்குகள் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடையவை

    இந்திய அரசின் உத்தரவுகளை ஏற்று, இந்தியாவிற்குள் அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட சில கணக்குகள், பதிவுகளை தற்காலிகமாக முடக்குவதாக X நிறுவனம் தெரிவித்துள்ளது.

    "இந்திய அரசின் உத்தரவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இந்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து நாங்கள் தாக்கல் செய்த ரிட் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், விதிமுறைகளால் அரசின் உத்தரவை இங்கு வெளியிட முடியவில்லை என்றாலும், அதன் வெளிப்படைத்தன்மை தேவை என்பதால் இதனை பொதுவெளியில் தெரியப்படுத்துகிறோம்" என X நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    X நிறுவனத்தால் முடக்கப்பட்ட பல கணக்குகள் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடையவை என 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' தெரிவித்துள்ளது. 

    • மகளிர் காங்கிரஸ் குற்றச்சாட்டு
    • காங்கிரஸ் மகளிர் அணி போராட தயங்காது.

    புதுச்சேரி:

    புதுவை மகளிர் காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    விளையாட்டில் வெற்றிகளை குவித்து நாட்டுக்கு பெருமை சேர்க்கும் மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு விசாரணைக்குக்கூட பா.ஜனதா முன்வராதது அதிர்ச்சியளிக்கிறது.

    பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தது ஏற்கத்தக்கதல்ல. இதன் மூலம் பெண்களுக்கு உரிய மரியாதை, பாதுகாப்பு இல்லை என்பதை இச்சம்பவம் காட்டுகிறது. மல்யுத்த வீராங்கணை களுக்கு உரிய நீதி கிடைக்கா விட்டால், காங்கிரஸ் மகளிர் அணி போராட தயங்காது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்தியில் பா.ஜனதாவுக்கு எதிர்பார்த்ததைவிட ஆதரவு பெருகி வருகிறது என்று இல.கணேசன் கூறியுள்ளார். #Ganesan #BJP #ilaganesan

    சென்னை:

    பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தமிழக தேர்தல் களத்தில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?

    பதில்:- எதிர்பார்த்ததை விட அதிகமான அளவில் ஆதரவு பெருகி வருகிறது.

    கேள்வி:- எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கும் போது ஆதரவு பெருகி வருவதாக எப்படி சொல்கிறீர்கள்?

    பதில்:- உண்மைதான். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத்தான் இப்போது பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம். மோடி ஆட்சியின் சாதனைகளை சொன்னால் போதும். அதுவே பா.ஜனதாவுக்கு சாதகமாக இருக்கும்.

    கேள்வி:- நீங்கள் சாதனை என்பதையெல்லாம் வேதனையாக அல்லவா எதிர்க்கட்சிகள் கூறுகின்றன?

     


    பதில்:- எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரும் போது சிறிது காலம் சிரமம் ஏற்படத்தான் செய்யும். அது மக்களுக்கும் தெரியும்.

    இந்த தலைமுறைக்கு தெரிந்து இராத ஒரு வி‌ஷயம். அணாவில் இருந்து நயா பைசாவாக மாறியபோதும் நீண்ட நாட்கள் பிரச்சினை இருந்தது. அதன் பிறகு அணா, பைசா நினைவு இல்லை.

    தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்டபோது ‘டைவர்சன்’ என்று மாற்றி மாற்றி விட்டு சிரமம் ஏற்பட்டது. அலைய விடுகிறார்களே என்றுதான் தோன்றியது. சாலை அமைந்த பிறகு அந்த சிரமத்தை மறந்து விடுவோம். ஒரு நன்மைக்காக சிறு கஷ்டங்கள் ஏற்படத்தான் செய்யும். அதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். எதிர்க்கட்சிகளுக்குத்தான் அதை பொறுக்க முடிய வில்லை.

    மோடி 5 ஆண்டுகள்தான் பிரதமராக இருந்துள்ளார். இந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தார்? 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்ன செய்தது? அப்போது ஏற்படாத மாற்றம் இப்போது ஏற்பட்டு இருக்கிறதா? இல்லையா? இதெல்லாம் மக்களுக்கு தெரியும். ஆனால் எதிர்க்கட்சிகள் வாக்குக்காக அவர்களை திசை திருப்ப பார்க்கிறார்கள்.

    கேள்வி:- சிரமங்களை தாங்கி மக்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்களா?

    பதில்:- நிச்சயமாக. மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. ஆனால் பாதிப்பு இல்லை. எனவே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவரது நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் மட்டுமே எதிர்க்கிறார்கள்.

    கேள்வி:- மி‌ஷன் சக்தி அறிவிப்பு மூலம் ராணுவ ரகசியத்தை மோடி வெளியே தெரிவித்து விட்டதாக ப.சிதம்பரம் குறை கூறி உள்ளாரே?

    பதில்:- மிகப்பெருமையான ஒரு நிகழ்வை பிரதமர் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். மி‌ஷன் சக்தியின் மூலம் உலகின் 4-வது நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. இதை தேச பக்தர்கள் அனைவரும் வர வேற்பார்கள்.

    கேள்வி:- அப்படியானால் ப.சிதம்பரம் தேச பக்தி இல்லாதவரா?

    பதில்:- அதுபற்றி எனக்கு தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Ganesan #BJP #ilaganesan

    ×