என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "chain snatched"
- தனியார் மருத்துவ மனையில் பகலிலும், கடற்கரை சாலையில் தனியார் நர்சிங் ஹோமில் இரவிலும் நர்சாக வேலை செய்து வருகிறார்.
- போலீசார் வழக்குப் பதிந்து செயின்பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் லெனின் நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ராஜேஸ்வரி (35).
கருத்துவேறுபாடு காரண மாக ராஜேஸ்வரி கணவரை பிரிந்து 9 ஆண்டாக தனியாக வசித்து வருகிறார். டிப்ளமோ நர்சிங் முடித்துள்ள ராஜேஸ்வரி, புதுவை சின்னமணிக்கூண்டு அருகில் தனியார் மருத்துவ மனையில் பகலிலும், கடற்கரை சாலையில் தனியார் நர்சிங் ஹோமில் இரவிலும் நர்சாக வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு 7.50 மணியளவில் காந்திவீதி வழியாக கடற்கரை சாலையில் உள்ள நர்சிங் ஹோமிற்கு ஸ்கூட்ட ரில் சென்று கொண்டி ருந்தார்.
அப்பகுதியில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர் அருகே வலதுபக்கம் ஒரே பைக்கில் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். பின்னால் வந்த நபர் திடீரென ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தார்.
திடுக்கிட்ட ராஜேஸ்வரி, செயினை கையால் கெட்டியாக பிடித்துக் கொண்டார். ஆனாலும்
பைக்கில் வந்த வர்கள் வேகமாக இழுத்த தில் செயின் இரண்டாக அறுந்தது. 6 தங்க காசுடன் ஒரு பகுதி செயினை திருடர்கள் பறித்து சென்று விட்டனர். பறிபோன 3½ பவுன் செயினின் மதிப்பு ரூ.1.½ லட்சமாகும்.
இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசில் ராஜேஸ்வரி புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து செயின்பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.
- மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
- முகவரி கேட்பது போல் நடித்து
பெரம்பலூர்:
குன்னம் அருகே உள்ள இலுப்பைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு. இவரது மனைவி அகிலாண்டம் (வயது 65). இவர் நேற்று முன்தினம் மாலை இலுப்பைக்குடி-சாத்தனூர் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற மர்ம ஆசாமி ஒருவர், மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கு தயாராக இருந்த தனது கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி அகிலாண்டம் அளித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நகை கடைக்கு சென்றார்.
- மர்மநபரை தேடி வருகிறார்கள்.
கோவை,
வடகோவை அருகே உள்ள ராமசாமி ரோட்டை சேர்ந்தவர் கட்டபொம்மன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 69).
சம்பவத்தன்று இவர் உக்கடத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்றார்.
அப்போது சரஸ்வதி தான் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை கழற்றி தனது கைப்பையில் வைத்து இருந்தார். கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர் சரஸ்வதியின் கைப்பையில் இருந்த 3 பவுன் செயினை திருடி சென்றனர்.
இது குறித்து அவர் பெரியக்கடை வீதி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியின் கைப்பையில் இருந்த 3 பவுன் தங்க செயினை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
பெரியகுழியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி கவிதாமணி (41). சம்பவத்தன்று இவர் தனது மகளுடன் பெரியக்கடை வீதியில் உள்ள நகை கடைக்கு சென்றார்.
பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக பிரகாசம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது யாரோ மர்மநபர் கவிதாமணி கழுத்தில் அணிந்து இருந்த 3½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
இதில் அதிர்ச்சியடைந்த கவிதாமணி இது குறித்து பெரியக்கடை வீதி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
- வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
- டவுசர் கொள்ளையர்கள் அட்டூழியம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சிலுவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (எ) ராஜசேகரன் (35) ஓட்டுநர். இவரது மனைவி ஜெயா (33). மகள் சுபாஷினி (11). சம்பவத்தன்று ராஜசேகரன் வேலைக்கு சென்றுவிட்டார். இரவு ஜெயா தனது மகளுடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் தூங்கிக்கொண்டிருந்த ஜெயா கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்துள்ளனர். இதில் திடீக்கிட்டு எழுந்த ஜெயா தனது அருகில் முகத்தை மூடியவாறு 4 பேர் டவுசருடன் நின்றிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே சத்தம் போட டவுசர் கொள்ளையர்கள் ஜெயாவின் வாயை பொத்தி பிடித்து அவரது கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை அறுத்துக் கொண்டு முன்பக்க வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.
முன்னதாக அதே பகுதியில் தனியார் கூரியர் ஓட்டுநர் கமலகாந்தன் என்பவரின் மனைவி பணிமலர் (37) மகள் சிவாணி(4) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவர்களது வீட்டிலும் திருட சென்ற நிலையில் எதுவும் இல்லாததால் ஆத்திரமடைந்த டவுசர் கொள்ளையர்கள் வீட்டில் இருந்த ரேஷன் கார்டு, பேங்க் பாஸ்புக், செக் புக் உள்ளிட்ட முக்கிய ஆவனங்களை தண்ணீரில் முக்கி வெளியில் வீசிவிட்டு சென்று விட்டனர்.
இது குறித்து வந்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டவுசர் கொள்ளையர்கள் திருடுவதற்கு முன்பாக வீட்டில் இருந்த சொம்பில் மதுபானத்தை ஊற்றி குடித்துவிட்டு ஆற அமர திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
- பெண்ணிடம் 4 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- ஸ்கூட்டரில் சென்ற போது சம்பவம்
பெரம்பலூர்
பெரம்பலூர் முத்துலட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி லலிதா (வயது 40). இவர் நேற்று மாலை 4 மணியளவில் பெரம்பலூர்-துறையூர் சாலையில் செஞ்சேரியில் இருந்து செட்டிகுளம் செல்லும் பிரிவு சாலை அருகே உள்ள தனது நிலத்திற்கு ஸ்கூட்டரில் சென்றார். பின்னர் அங்கிருந்து மாலை 6 மணியளவில் வீட்டிற்கு ஸ்கூட்டரில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.
பெரம்பலூர் தனியார் கல்லூரியின் மகளிர் விடுதி அருகே சென்ற போது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் லலிதாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு, மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதில் ஸ்கூட்டரில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லலிதாவுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
- கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
- 1½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றார்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பனிக்கம்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் அபிராமி (வயது 18). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கல்லூரிக்கு சென்று விட்டு தனது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். மொபட் கோட்டையாம்பட்டி - பனிக்கம்பட்டி ரோட்டில் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் கண்இமைக்கும் நேரத்தில் அபிராமி கழுத்தில் அணிந்து இருந்த 1½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றார். இது குறித்து அவர் மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியிடம் செயினை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.
- பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- வலைவீசி தேடி வருகிறார்கள்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்ணன். இவரது மனைவி பானுப்பிரியா (வயது 28). இவர் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை ஜெயங்கொண்டத்தில் வாங்கிவிட்டு பஸ்சில் திரும்பினார். பின்னர் செங்குந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தனது கணவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துவிட்டு புதுக்குடி கிராமத்திற்கு செல்வதற்காக மழையில் நனைந்தவாறு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் பானுப்பிரியாவின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பானுப்பிரியா சத்தம் போட்டார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் அந்த ஆசாமிகளை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பானுப்பிரியா அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்."
- முதலியார்பேட்டையில் நடைபயிற்சி சென்ற ஜிப்மர் பெண் ஊழியரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் செயினை பறித்து சென்றனர்.
- அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென மைதிலி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்தனர்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டையில் நடைபயிற்சி சென்ற ஜிப்மர் பெண் ஊழியரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் செயினை பறித்து சென்றனர்.
புதுவை முதலி யார்பேட்டை உழந்தை கீரப்பாளையம் புவன்கரே வீதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி மைதிலி (வயது47). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சிங் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமணன் இறந்து விட்டார். தினமும் மைதிலி அப்பகுதியில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதுபோல் 8 மணியளவில் நடைபயிற்சி சென்று விட்டு பாரதிதாசன் நகர் வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென மைதிலி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மைதிலி திருடன் திருடன் என அலறல் சத்தம் போட்டு அவர்களிடமிருந்து போராடினார்.
ஆனால் அங்கு யாரும் இல்லாததால் அந்த வாலிபர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மைதிலி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து மைதிலி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து செயினை பறித்து சென்ற மர்மநபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் சென்ற போது பெண்ணிடம் பைக்கில் வந்த மர்மநபர்கள் செயினை பறித்துச்சென்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
வடமதுரை:
மணப்பாறை அருகே கண்ணுடையான் பட்டியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 50). தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
மோர்பட்டி அருகே வந்த போது பின்னால் மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் தனலட்சுமி கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இதில் தனலட்சுமி காயமடைந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்
- வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார்
கரூர்:
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கடைவீதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் மனைவி செல்லம்மாள் (வயது75). இவர் நேற்று அதிகாலை வீட்டு முன் வாசல் தெளித்து, கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நடந்து சென்ற அடையாளம் தெரியாத மர்மநபர், செல்லம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினார். இதுகுறித்து மாயனூர் போலீசில் செல்லம்மாள் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமரா பதிவுகளில் சங்கிலியைப் பறித்து சென்ற நபரின் உருவம் பதிவாகி உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
- தோட்ட வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்ற போது சம்பவம் நடந்துள்ளது.
- செயின் பறிப்பு தொடர்பாக பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணகுடி:
பணகுடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது52).
இவர் நேற்று தோட்ட வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவர் சொக்கலிங்கபுரம் கல்லடி தெருவில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த செயினை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த வள்ளியம்மாள் செயினை இறுக்கமாக பிடித்தவாறு கத்தி கூச்சலிட்டார்.
இதில் செயின் இரண்டாக துண்டானது. இதில் 6 பவுன் நகையுடன் கொள்ளையர்கள் தப்பி சென்றுவிட்டனர். 2½ பவுன் செயின் வள்ளியம்மாளிடம் சிக்கி கொண்டது. இது தொடர்பாக அவர் பணகுடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் யார்? என விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் திடீரென காந்திமதி கழுத்தில் கிடந்த 4 கிராம் நகையை பறித்து சென்றார்.
- செயின் பறிப்பு தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை தியாகராஜநகர் 8-வது வடக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மனைவி காந்திமதி (வயது 58).
இவர் இன்று அதிகாலை வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டு இருந்தார்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் திடீரென காந்திமதி கழுத்தில் கிடந்த 4 கிராம் நகையை பறித்து சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தப்பிசென்றார்.
இதுதொடர்பாக அவர் பெருமாள்புரம் ேபாலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செயினை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்