என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chamber of Commerce"
- வருமான வரி தணிக்கை அறிக்கையில் பிரிவு 16 மற்றும் 44ல் தேவையான திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும்.
- டி.டி.எஸ்., மற்றும் டி.சி.எஸ்., வரி படிவங்களை எளிய முறையில் மாற்ற வேண்டும்.
உடுமலை :
உடுமலை தொழில் வர்த்தக சபை சார்பில் வரும் 2023ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு நிதித்துறைக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது :- நடப்பு விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கான வருமான வரம்பு அளவுகோலை கருத்தில் கொண்டு வருமான வரி விதிப்பில்ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என நிர்ணயித்து வருமானவரி சதவீதத்தை குறைக்கவும், வருமான வரி தணிக்கை அறிக்கையில் பிரிவு 16 மற்றும் 44ல் தேவையான திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும். வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர், கணக்கு புத்தகங்கள் சரியான முறையில் பராமரிக்க வழிவகுக்கும் சட்டப்பிரிவில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டதால் சிறு தொழில் முனைவோர் மற்றும் வணிகர்களுக்கு உரிய விலக்கு அளிக்க வேண்டும். வருமான வரி சட்டத்தின் கீழ் படிவம் தாக்கல் செய்யும் காலவரம்பை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றி அமைக்க மாத ஊதியம் பெறுவோருக்கு ஜூன் 30 எனவும், வணிகம் செய்பவர்களுக்கு ஆகஸ்டு 1 எனவும், தணிக்கை செய்ய வேண்டிய வணிகர்களுக்கு செப்டம்பர் 30 எனவும் பதிவு செய்யப்பட்ட கம்பெனி மற்றும் அறக்கட்டளைகளுக்கு அக்டோபர் 31 எனவும் நிர்ணயித்தால் கம்ப்யூட்டர் வாயிலாக ஒரே நேரத்தில் படிவம் தாக்கல் செய்வது தவிர்க்கப்படும்.
நிறுவனம் செலுத்த வேண்டிய டி.டி.எஸ்., மற்றும் டி.சி.எஸ்., வரி படிவங்களை எளிய முறையில் மாற்ற வேண்டும். தனி நபர் வருமானம் ரூ.5 லட்சம் தாண்டியவுடன் குறைந்தபட்சம் ரூ.13 ஆயிரம் வரி கட்ட வேண்டி உள்ளது.முன்கூட்டி வரி செலுத்த வேண்டிய பிரிவின் கீழும் வட்டி கட்ட வேண்டியுள்ளது. தனிநபர் அதற்கு குறைவான வருமான வரி கட்டி படிவம் தாக்கல் செய்ய இயலாது. எனவே அந்த சட்டப்பிரிவில் தேவையான மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.சரக்கு மற்றும் சேவை வரிசட்டத்தில் (ஜி.எஸ்.டி.,)யில் தற்போது எழுந்துள்ள சிரமங்களை குறைக்கவும் சட்ட சச்சரவுகளை தவிர்க்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
சமூக நலன் மேம்பாட்டிற்காக நேர்மையாக வரி செலுத்தும் பொதுமக்களுக்கு போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களில் 60 வயதுக்கு மேல் பென்ஷன் பெறுவதாக இருந்தால் அவர்கள் இதுவரை செலுத்திய வரிக்கு ஏற்ப பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.விவசாயத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் இந்திய விவசாயத்தை உலக அளவில் கொண்டு செல்லவும், விவசாய பாடப்பிரிவை அனைத்து கலைக்கல்லூரிகளிலும் ஏற்படுத்த வேண்டும்.ஏழை, எளிய மக்கள் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.600 விலை நிர்ணயிக்கவும், கியாஸ் மானியத்தை வங்கியில் செலுத்த வேண்டும்.
இக்கோரிக்கைகள் மத்திய நிதி அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உடுமலை தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- தமிழ்நாடு அனைத்து வணிகர்களின் சார்பாக கருத்துக்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
- டெஸ்ட் பர்ச்சேஸ் குறித்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
திருப்பூர் :
வணிகவரித்துறையினரால் கடந்த மார்ச் மாதத்தில் சில்லறை கடைகளில் ஆய்வு செய்வது சம்பந்தமாகவும் , டெஸ்ட் பர்சேஸ் செய்வது சம்பந்தமாக அறிவிப்புகள் வெளியிட்ட போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து வணிகர்களின் சார்பாக கருத்துக்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் வணிகவரித்துறை அதிகாரிகள் டெஸ்ட் பர்ச்சேஸ் எனும் பெயரில் சில்லரை வணிகம் செய்யும் வணிகர்களிடம் பொருட்கள் வாங்கி அதனை டெஸ்ட் பர்ச்சேஸ் என குறிப்பிட்டு அதற்கு 20,000 ரூபாய் வரை அபராதம் வசூலிப்பதாகவும், இதனால் சில்லறை வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் டெஸ்ட் பர்ச்சேஸ் குறித்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், டெஸ்ட் பர்ச்சேஸ் முறைக்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் துணை ஆணையரிடம் வணிகர்கள் இன்று மனு அளித்தனர்.
- திண்டுக்கல்லில் வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. மற்றும் தமிழகத்தில் 40 பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சேவை வரி ஆகியவற்றை திரும்பபெற வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் விரைவில் போராட்டம் நடைபெறும்.
அதேபோல் வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க கோரியும், 60 வயதை கடந்த வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும் சில்லரை வியாபாரிகளை நசுக்கி வரும் பெரு வணிக நிறுவனங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்த கோரியும் தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
மின்சார கட்டணம், கட்டிட வரி, ஜி.எஸ்.டி. சேவை வரி போன்றவற்றின் உயர்வு காரணமாகவே பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கும் வணிகர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ரூ.40 லட்சத்திற்கும் மேல் வர்த்தகம் செய்யும் வியாபாரிகள் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். முறையாக வரி செலுத்துவதாக கூறும் பெரு வணிக நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்கின்றனர்.
மேலும் நூதன முறையில் நுகர்வோரை ஏமாற்றும் வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இந்த நிறு வனங்களை கட்டுப்படுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டம் மதுரையில் நடைபெறும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்ம லாசீத்தாராமன் தெரிவித்துள்ளார். அந்த கூட்டம் நடைபெறும் நாளில் மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தொழில் வர்த்தகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரையில் எஸ்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். திண்டுக்கல் - சபரிமலை அகல ரெயில்பாதை திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஸ்மாட் சிட்டி திட்டத்தில் திண்டுக்கல் நகரை பட்டியலில் கொண்டுவர மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மாநகராட்சியாக பல ஆண்டுகள் ஆகியும் எல்லை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளதால் அதனை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிைறவேற்றப்பட்டன.
கூட்டத்தில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மேயர் இளமதி, நாட்டாண்மை காஜாமைதீன், மண்டல தலைவர் கிருபாகரன், மாவட்ட செயலாளர் மங்களம் அழகு, செயல் தலைவர் நடராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்