என் மலர்
நீங்கள் தேடியது "charmi"
- பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர்.
- லைகர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியானது.
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார்.

லைகர்
மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் தோல்வி குறித்து நடிகை சார்மி பேசியதாவது, "ரசிகர்கள், வீட்டில் இருந்தவாறே நல்ல கதைகள் கொண்ட படங்களையும் பெரிய பட்ஜெட் படங்களையும் ஒரே கிளிக்கில் பார்க்கும் நிலை இருக்கிறது. அவர்களை உற்சாகப்படுத்தும் படங்கள் வந்தால்தான் தியேட்டருக்கு வருவார்கள்.

லைகர்
தெலுங்கில் வெளியான 'பிம்பிசாரா', 'சீதா ராமம்', 'கார்த்திகேயா 2' படங்கள் ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றன. இந்தப் படங்கள் ரூ.150 கோடியில் இருந்து ரூ.175 கோடி வரை வசூலித்துள்ளன. தென்னிந்தியாவில் முன்பை போல இப்போதும் சினிமா மோகம் இருப்பதாகத் தெரியவில்லை.
கொரோனாவால் இந்தப் படத்தை உருவாக்க 3 வருடம் ஆகிவிட்டது. பல கஷ்டங்களுக்குப் பிறகே படத்தைத் தயாரித்தோம். ஆனால், ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது" இவ்வாறு பேசினார்.