என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chathuragiri"
- கோவில் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வர். இந்த சூழலில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை 4 நாட்கள் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவில் பகுதிகளில் மழை பெய்து வருவதால், நாளை முதல் முதல் 18-ம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு மலையேறி செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.
- 21 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜை நடைபெற்றது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனி மாத பிரதோஷம், அமாவாசயை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி முதல் நாளை (6-ந் தேதி) வரை 4 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று ஆனி மாத அமாவாசையொட்டி நள்ளிரவு முதல் சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.
தொடர்ந்து கூட்டம் அதிகரித்ததையடுத்து காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்னர். வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் ஆர்வத்துடன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகா லிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவ லர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தாணிப்பாறைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கூட்டத்திற்கு ஏற்றவாறு மருத்துவக் குழுவினர் இல்லாததால் உடல்நலம் பாதிக்கப்பட்டோர் அவதி அடைந்தனர்.
- 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி.
- குறைந்த அளவிலான பக்தர்களே வருகை தந்திருந்தனர்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குாட தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோ ஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த 4-ந்தேதியில் இருந்து நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட் டுள்ளது.
இன்று வைகாசி மாத அமாவாசை தினத்தை யொட்டி சென்னை, கோவை, நெல்லை, தூத்துக் குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் நள்ளிரவு முதல் வருகை தந்து தாணிப்பாறை வனத்துறை கேட்பு முன்பு குவிந்தனர்.
இன்று காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்து அனுப்பினர்.
காலையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பக்தர்கள் வெயில் தெரியாத நிலையில் சாமி தரிசனம் செய்ய சென்றனர். இன்று மழை பெய்தால் அனுமதி வழங்கப்படாது என்று முன்கூட்டியே அறிவிப்பு வெளியாகி இருந்தது. எனவே தாணிப்பாறை வரை சென்று கோவிலுக்கு செல்ல முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இன்று குறைந்த அளவிலான பக்தர்களே வருகை தந்திருந்தனர்.
வைகாசி அமாவாசை ஒட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத் தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்தி ருந்தனர். பக்தர்கள் பல முறை தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் தற்போது வரை மருத்துவக்கு ழுவினர் நியமிக்கப்படாதது அனைத்து தரப்பினருக்கும் ஒரு குறையாகவே இருந்து வருகிறது.
- அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
- காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. அமாவாசை மற்றும் பவுர் ணமி தினங்களை யொட்டி தலா மூன்று நாட்களும், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்களும் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
கடந்த இரண்டு மாதங்களாக கனமழை பெய்ததின் காரணமாக பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடை, சங்கிலி பாறை ஓடை, எலும்பு ஓடை, மாங்கனி ஓடை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வந்தது. அதோடு பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, உள்ளிட்ட விசேஷ நாட்களின் போது மட்டும் கனமழை பெய்து வந்ததால் பக்தர்கள் நலன் கருதி கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதிக்கவில்லை.
இதில் மார்கழி 1-ந்தேதி மட்டும் நீதிமன்ற உத்தரவுப்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் மழை காரணமாக அனுமதிக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.
வருகிற 23-ந்தேதி தை மாத பிரதோஷ விழா நடைபெற உள்ளது. எனவே அன்று மாலையில் சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
25-ந்தேதி தை மாத பவுர்ணமி தினத்துடன், அன்றைய தினம் தைப்பூசம் என்பதால் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. 26-ந்தேதியுடன் நான்கு நாட்கள் அனுமதி முடிவடைய உள்ளது.
தைப் பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த இரண்டு மாதங்களாக மழையின் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த 4 நாட்களிலும் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
அதோடு பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது, ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது, பாலித்தீன் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரிய சாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர். மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சதுரகிரி மலையில் கழிவுகளை அகற்றுவதில் வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.
- மேலும் தொடர்ந்து குப்பைகளை அகற்றும் பணி தொடரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
திருமங்கலம்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேக மலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சிவகிரி, விஷ்ணு, பிரம்மகிரி, சித்தகிரி ஆகிய 4 மலைகளுக்கு நடுவே சஞ்சீவீகிரி எனும் சதுரகிரி மலை உள்ளது. பஞ்ச பூத லிங்க தலமாக போற்றப்படும் இங்கு பிரசித்தி பெற்ற சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
சுந்தர மகாலிங்கம், இரட்டை லிங்கம் ஆகியவை சுயம்புலிங்கமாகவும், சுந்தரமூர்த்தி ஆரிட லிங்கமாகவும், சந்தன மகாலிங்கம் தைவீக தெய்வீ கமாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பா லிக்கின்றனர்.
18 சித்தர்களும் சதுரகிரி யில் வந்து வழிபாடு நடத்துவதாக நம்பிக்கையாக உள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் வரும் அமாவாசை, பவுர்ண மியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 16-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு 12-ந்தேதி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப் பட்டனர். 6 நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் முதல் நாளில் இருந்தே பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு 15, 16, 17-ந்தேதிகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 3.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பக்தர்கள் அடி வாரத்தில் இருந்து அனு மதிக்கப்பட்டனர்.
பக்தர்களின் உடைமை களை சோதனை செய்த துடன், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட் கள், பிளாஸ்டிக் பாட்டில் கள் உள்ளிட்ட வற்றை கொண்டு செல்லக்கூடாது என கண்டிப்புடன் தெரி விக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சென்றதால் மலை பாதைகள் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் சேர்ந்தது. அது மட்டுமின்றி தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த கடைகள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டதால் அதனால் சேர்ந்த கழிவு களும் சதுரகிரி மலையில் குவிந்தன.
17-ந்தேதி வரையுடன் அனுமதி முடிந்த நிலையில் மறுநாள் 18-ந்தேதியில் இருந்து வனப்பகுதியில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணியை வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மூடை மூடையாக சேர்க்கப்பட்ட குப்பைகளை அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். இருப்பினும் இன்னும் மலைப்பகுதியில் குப்பைகள் பல்வேறு இடங்களில் குவிந்து கிடக்கிறது. அதனை அகற்று வதில் வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.
சாப்டூர் வனச்சரகர் செல்லமணி தலைமையில், வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், மலைப்பாதை பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றினர். மேலும் தொடர்ந்து குப்பைகளை அகற்றும் பணி தொடரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
சதுரகிரியில் கழிவுகளை முழுவதுமாக அகற்ற ஒரு வாரம் காலம் ஆகும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்