என் மலர்
நீங்கள் தேடியது "chennai hc"
சென்னையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற இருக்கும் நிலையில், அதற்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. #ChennaiHC
சென்னை:
சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா இன்று மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கென மிகப்பெரிய அளவிலான பிளக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கென அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், பேனர்களை அமைக்க முறையாக அனுமதி வழங்கப்படும் நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 8-ம் தேதி சென்னை மாநகராட்சி காவல்துறை மற்றும் மாநகராட்சி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #ChennaiHC

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெடித்த கலவரம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் கால அவகாசம் வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #ChennaiHC #JallikkattuProtest
சென்னை:
தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் ஊழல் நடைபெற்றதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து இருந்தார். ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் அமைக்கப்பட்டு இருந்த இந்த விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் விசாரணை ஆணையத்தின் செயல்பாடு குறித்து நீதிபதி கடுமையாக கருத்து தெரிவித்து இருந்தார். இதனை கண்டித்து விசாரணை ஆணையத்தின் தலைவர் ரகுபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மேலும், தூத்துக்குடி கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு நியாயமான கால அவகாசம் மட்டுமே வழங்க வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையாக மாறியது குறித்து விசாரிக்கப்பட்ட விசாரணை ஆணையத்துக்கு மூன்று மாதங்களுக்கு மேல் கால அவகாசம் வழங்கக்கூடாது எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #ChennaiHC #JallikkattuProtest

இந்த வழக்கு விசாரணையில் தமிழகத்தில் நிறுவப்பட்ட பல்வேறு விசாரணை ஆணையங்கள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. அதன்படி, ராஜினாமா செய்த நீதிபதி ரகுபதியின் பதவிக்கு புதியதாக யாரை நியமிப்பது என்பது குறித்து வரும் 27-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும், தூத்துக்குடி கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு நியாயமான கால அவகாசம் மட்டுமே வழங்க வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையாக மாறியது குறித்து விசாரிக்கப்பட்ட விசாரணை ஆணையத்துக்கு மூன்று மாதங்களுக்கு மேல் கால அவகாசம் வழங்கக்கூடாது எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #ChennaiHC #JallikkattuProtest
மைலாப்பூர் சிலை கடத்தல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள் அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றவில்லை என தெரிவித்துள்ளனர். #ChennaiHC
சென்னை:
சென்னை மைலாப்பூரில் உள்ள கோவிலில் இருந்து சிலை காணாமல் போனது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து காணாமல் போன மயில் சிலைக்கு பதிலாக புதிய சிலை வைத்து குடமுழுக்கு நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, கோவிலில் சிலைகளை பாதுகாப்பதில் அர்ச்சகர்களுக்கு பொறுப்பு உண்டு என தெரிவித்துள்ளனர்.
மேலும், அர்ச்சகர்கள் தெய்வீக உணர்வுடன் பணியாற்றவில்லை என குற்றம்சாட்டிய நீதிபதிகள், இயந்திரத்தன்மையுடன் செயல்படுவதாக கருத்து தெரிவித்துள்ளனர். #ChennaiHC

நீதிமன்றம் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. #BJP #HRaja #ChennaiHC
சென்னை:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட மெய்யபுரம் என்ற ஊரில் விநாயகர் சிலை அமைத்திருந்தனர்.
அந்த சிலையை நேற்று முன்தினம் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலையில் கரைப்பதற்கு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்தனர்.
விநாயகர் சிலை ஊர்வலத்தைத் தொடங்கி வைப்பதற்கு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை திருமயம் தாலுகா பா.ஜ.க.வினர் அழைத்திருந்தனர். இதையொட்டி மெய்யபுரம் அருகே ஒரு இடத்தில் மேடை அமைக்க இந்து அமைப்பினர் போலீசாரிடம் கடிதம் கொடுத்து அனுமதி கேட்டனர்.
ஆனால் போலீசார் அனுமதி மறுக்கவே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போலீசார் மற்றும் நீதிமன்றத்தை அவதூறாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வழுத்து வருகிறது.
நேற்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்து, 4 வாரங்களுக்குள் எச்.ராஜா பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை நீதிமன்றமே முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
மேலும், வேறு ஏதேனும் புகார்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையத்தை அணுகுமாறும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். #BJP #HRaja #ChennaiHC

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய புகாரை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம், எச்.ராஜாவை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. #HRaja #ChennaiHC
சென்னை:
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இந்து முன்னணி மற்றும் செய்யபுரம் பொது மக்கள் சார்பில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்ற இருந்தனர்.
இதன்படி, அந்த ஊரில் உள்ள மகாமுத்து மாரியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மதியம் விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டது.
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அப்போது, விநாயகர் சிலையை ஊருக்குள் எடுத்துச் செல்ல முயற்சி நடந்தது. அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து போலீசாருடன், எச்.ராஜா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்துக்களுக்கு எதிராக போலீஸ் அதிகாரி செயல்படுவதாக எச்.ராஜா குற்றம் சாட்டினார். ஆனால் அதை மறுத்த போலீசார், ‘‘ஐகோர்ட்டு உத்தரவுப்படி செயல்படுகிறோம்’’ என்றனர்.
இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டையும், போலீசாரையும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி எச்.ராஜா விமர்சனம் செய்தார். இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் நேற்று வைரலாகப் பரவியது.
அந்த வீடியோ பதிவு காட்சிகளை பார்த்தவர்கள், எச்.ராஜாவின் ஆவேச பேச்சை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். நீதித்துறையை அவர் கடுமையாக விமர்சனம் செய்தது அதிர் வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து வக்கீல் ஆர்.சுதா என்பவர், தமிழக டி.ஜி.பி.க்கு புகார் மனுவை அனுப்பினார். இதற்கிடையில், எச்.ராஜா மீது திருமயம் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். எச்.ராஜாவை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் இன்று காலை வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள். அப்போது வக்கீல்கள் ஆர்.சுதா, கனகராஜ், ராஜாமுகமது உள்ளிட்டோர் ஆஜராகி, ‘எச்.ராஜா நீதித்துறையை தரக்குறைவாக பேசியுள்ளார். எனவே, அவர் மீது இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு நீதிபதிகள், ‘எச்.ராஜா மீது போலீஸ் தரப்பில் பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, ஏதாவது புகார் தெரிவிக்க வேண்டும் என்றால், போலீசாரிடம் புகார் மனு கொடுங்கள். எச்.ராஜா மீது தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை நாங்கள் பதிவு செய்ய முடியாது’ என்றனர்.
அதற்கு வக்கீல்கள், ‘போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். இதற்கு முன்பு பல வழக்குகளில் போலீசார் இவ்வாறு செயல்பட்டுள்ளனர். எனவே, எச்.ராஜா மீது ஐகோர்ட்டு தான் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ‘தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்ய முடியாது. வேண்டுமென்றால், எச்.ராஜா மீது நீங்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யுங்கள். அந்த வழக்குகளை நாங்கள் விசாரணைக்கு எடுக்கின்றோம்’ என்றனர்.

சென்னை ஐகோர்ட்டில் மற்றொரு அமர்வில் இருந்த நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.நிர்மல்குமார் இருவரும் எச்.ராஜா தொடர்பான விவகாரத்தை கையில் எடுத்தனர். அவர்கள் இருவரும் முதல் நடவடிக்கையாக ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் கண்ணப்பன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் இருவரையும் நேரில் வரவழைத்தனர்.
அவர்களிடம் நீதிபதிகள், ‘‘திருமயம் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது எச்.ராஜா போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் சமுக வலைத்தளங்களில் பரவி வருவதை பார்த்தீர்களா? என்று கேட்டனர். அதற்கு அவர்கள் இருவரும் கேள்விப்பட்டோம்’’ என்று தெரிவித்தனர்.
உடனே நீதிபதிகள் இருவரும் இந்த விவகாரத்தில் நாங்கள் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்கிறோம் என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக எச்.ராஜா 4 வாரங்களுக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அதற்கேற்ப சம்மன் அனுப்புங்கள் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து தலைமை பதிவாளரும், அட்வகேட் ஜெனரலும் உடனடியாக எச்.ராஜாவுக்கு சம்மன் அனுப்பும் பணியை தொடங்கியுள்ளனர். இதனால் எச்.ராஜா சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வக்கீல்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அடுத்த சில மணி நேரத்துக்குள் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டது.

சென்னை ஐகோர்ட்டில் மற்றொரு அமர்வில் இருந்த நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.நிர்மல்குமார் இருவரும் எச்.ராஜா தொடர்பான விவகாரத்தை கையில் எடுத்தனர். அவர்கள் இருவரும் முதல் நடவடிக்கையாக ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் கண்ணப்பன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் இருவரையும் நேரில் வரவழைத்தனர்.
அவர்களிடம் நீதிபதிகள், ‘‘திருமயம் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது எச்.ராஜா போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் சமுக வலைத்தளங்களில் பரவி வருவதை பார்த்தீர்களா? என்று கேட்டனர். அதற்கு அவர்கள் இருவரும் கேள்விப்பட்டோம்’’ என்று தெரிவித்தனர்.
உடனே நீதிபதிகள் இருவரும் இந்த விவகாரத்தில் நாங்கள் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்கிறோம் என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக எச்.ராஜா 4 வாரங்களுக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அதற்கேற்ப சம்மன் அனுப்புங்கள் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து தலைமை பதிவாளரும், அட்வகேட் ஜெனரலும் உடனடியாக எச்.ராஜாவுக்கு சம்மன் அனுப்பும் பணியை தொடங்கியுள்ளனர். இதனால் எச்.ராஜா சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் மீது இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, முறைகேடு எதுவும் நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. #ChennaiHC
சென்னை:
தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனால், இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நீதிபதி முன்பு கடந்த 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, ‘நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளை உறவினர்களுக்கு வழங்கியதாக முதல்-அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டதா?
அந்த விசாரணை நிலை என்ன?. ஒப்பந்த ஒதுக்கீடு முறைகேடுகள் குறித்த விசாரணையின் நிலை என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ‘1991ம் ஆண்டு முதல் எஸ்.பி.கே. நிறுவனம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியிலும் அவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டச்சத்திரம்-தாராபுரம்-அவினாசி பாளையம் 4 வழிச்சாலை ஒப்பந்த பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அதிகரிப்படவில்லை. முதல்-அமைச்சர் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்த அரசின் முன் அனுமதி பெற வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை வெளிப்படையாக தற்போது கூற முடியாது’ என்று கூறினார்.
இதனையடுத்து இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், தினந்தோறும் நடத்தப்பட்ட விசாரணையின் விரிவான அறிக்கையை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

பின்னர், ‘முதல்-அமைச்சருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் எதுவும் இல்லை. இந்த டெண்டர் வழங்கியதில் எந்த முறைகேடு நடைபெறவில்லை’ என்று அட்வகேட் ஜெனரல் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஒப்பந்த நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்றார். இதற்கு அட்வகேட் ஜெனரல் கால அவகாசம் கேட்டார். இதற்கு அனுமதித்த நீதிபதி, விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #ChennaiHC #EdappadiPalaniswami
தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனால், இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நீதிபதி முன்பு கடந்த 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, ‘நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளை உறவினர்களுக்கு வழங்கியதாக முதல்-அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டதா?
அந்த விசாரணை நிலை என்ன?. ஒப்பந்த ஒதுக்கீடு முறைகேடுகள் குறித்த விசாரணையின் நிலை என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ‘1991ம் ஆண்டு முதல் எஸ்.பி.கே. நிறுவனம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியிலும் அவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டச்சத்திரம்-தாராபுரம்-அவினாசி பாளையம் 4 வழிச்சாலை ஒப்பந்த பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அதிகரிப்படவில்லை. முதல்-அமைச்சர் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்த அரசின் முன் அனுமதி பெற வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை வெளிப்படையாக தற்போது கூற முடியாது’ என்று கூறினார்.
இதனையடுத்து இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், தினந்தோறும் நடத்தப்பட்ட விசாரணையின் விரிவான அறிக்கையை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் புலன் விசாரணை தொடர்பான விவரங்களை கொண்ட ரகசிய அறிக்கையை நீதிபதி முன்பு சமர்பித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஒப்பந்த நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்றார். இதற்கு அட்வகேட் ஜெனரல் கால அவகாசம் கேட்டார். இதற்கு அனுமதித்த நீதிபதி, விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #ChennaiHC #EdappadiPalaniswami
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் உயர்நீதிமன்றத்தை எச்.ராஜா அவதூறாக பேசியதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டுள்ளது. #HRaja #ChennaiHC
சென்னை:
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வாக்குவாதத்தின் போது, சென்னை உயர் நீதிமன்றம் குறித்து அவர் அவதூறாகவும், மிக மோசமாகவும் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.
இதுகுறித்து எச்.ராஜா மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.ராஜசேகர் என்பவர் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுத்தனர்.
மேலும், எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக தொடர்ந்தால் அதுகுறித்து நீதிமன்றம் விசாரிக்க தயார் என்றும், தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொதுவாக நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளை அவதூறாக பேசினால் தாமாக முன்வந்து விசாரிப்பது வழக்கமாக இருந்துவரும் நிலையில், தற்போது நீதிமன்றம் எச்.ராஜா மீதான இந்த முறையீட்டை மறுத்துள்ளதால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. #HRaja #ChennaiHC

மருத்துவ கலந்தாய்வின் போது மாணவர்கள் கட்டாயம் தங்கள் ஆதார் அட்டையை கொண்டுவர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #medicalcouncelling #Aadhaarmandatory #ChennaiHC
சென்னை:
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி அடைபவர்கள் கலந்தாய்வு மூலம் விருப்பப்படும் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம்.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்தாண்டு நடைபெற்ற கலந்தாய்வின் போது பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும், இரட்டை இருப்பிடச் சான்றிதழ் பெற்றவர்கள் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் புதுக்கோட்டை மாணவி விக்னயா உட்பட ஏழு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். மேலும் கடந்தாண்டு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலை ரத்து செய்துவிட்டு புதிய பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்துகொண்ட பிற மாநிலத்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கலந்தாய்வில் கலந்துகொண்ட பிறமாநிலத்தவர்களை கண்டுபிடிப்பதில் சிரமங்கள் உள்ளது. எனவே ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கலந்துகொண்டவர்களின் பட்டியலை விரைவில் தாக்கல் செய்கிறோம் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தாண்டு நடைபெறும் மருத்துவ கலந்தாய்வின் போது மாணவர்கள் கட்டாயம் தங்கள் ஆதார் அட்டையை கொண்டுவர வேண்டும் என நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து மாணவர்களிடையே தகவல்களை பரப்ப சரியான விளம்பரம் செய்யுமாறும் நீதிபதி அறிவுறுத்தினார். #medicalcouncelling #Aadhaarmandatory #ChennaiHC
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #chennaiHC #RajenthraBhalaji
சென்னை:
தமிழகத்தில் தற்போது பால்வளத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ராஜேந்திர பாலாஜி மீது மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் சொத்துக்குவிப்பு புகார் அளித்திருந்தார். அமைச்சர் ஆன பிறகு அதிக அளவில் அவர் சொத்து சேர்த்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரிக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. #chennaiHC #RajenthraBhalaji

அவரது மனுவில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றம் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரிக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. #chennaiHC #RajenthraBhalaji
தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனு பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட உள்ளது. #SterliteProtest #InternetBlocked
சென்னை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த தடியடி கண்ணீர் புகை குண்டு போன்ற வழிகளில் போலீசார் முயற்சித்தனர். இறுதியாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு குறித்து மத்திய அரசும் உள்துறை அமைச்சகமும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், போராட்டம் மீண்டும் தொடர்வதை தவிர்க்க, தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்கி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, இன்று வழக்கறிஞர் சூரியபிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் காயம் பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டும், துப்பாக்கிச்சூட்டின் போது பொதுமக்களை சுட்டவர்களை அடையாளம் காட்ட மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
இந்த வழக்கு இன்று பிற்பகல் அவசர வழக்காக நீதிபதி பவானி சுப்புராயன் தலைமையில் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.#SterliteProtest #InternetBlocked