என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennairain"

    • சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.
    • இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாததை அடுத்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.

    இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாததை அடுத்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ள பாதிப்பை தொடர்ந்து, சினிமா பிரபலங்கள் உள்பட பலர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனம் நிவாரண உதவி வழங்குவதாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    அதன்படி, மிச்சாங் புயலால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ. 3 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

    மேலும், மாநில அரசுடன் இணைந்து இந்த பேரிடரை எதிர்த்து போராடுவோம் எனவும் அறிவித்துள்ளது.

    • மணிக்கு 18 கிமீ வேகத்தில் திரிகோணமலைக்கு தெற்கு- தென்கிழக்கே 450 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
    • முன்னதாக மணிக்கு 30 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது வேகம் குறைந்துள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

    மணிக்கு 18 கிமீ வேகத்தில் திரிகோணமலைக்கு தெற்கு- தென்கிழக்கே 450 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

    முன்னதாக மணிக்கு 30 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது வேகம் குறைந்துள்ளது.

    சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 940 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

    அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வடக்கு- வடமேற்கில் நகர்ந்து இலங்கை, தமிழக கடலோரப் பகுதியில் அடுத்த இரண்டு தினங்களில் நிலக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும்.
    • அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து சென்றது. இது நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு கிழக்கே வந்தடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

    அதன்பின்னர், 23-ந்தேதி (திங்கட்கிழமை) டெல்டா- வட இலங்கையையொட்டி நகர்ந்து சென்று, அதற்கு அடுத்த நாள் (24-ந்தேதி) பாக்நீர் இணைப்பு அல்லது டெல்டா பகுதிகள் வழியாக உள்ளே நுழைந்து அரபிக்கடலை சென்றடைய இருக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    தாழ்வுப்பகுதி காரணமாக வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும். அதனைத்தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தமிழ்நாட்டில் பரவலாக மழையை கொடுத்து சென்றே அரபிக்கடல் பகுதியில் இந்த தாழ்வுப் பகுதி வலு இழக்க இருக்கிறது.

    இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

    இதனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 370 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

    இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ×