என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chepauk Ground"

    • ஒரு கேப்டனாக சரியான போட்டியில் நாங்கள் இதுவரை விளையாடியதாக நினைக்கவில்லை.
    • ஐபிஎல் நீண்ட தொடர். உத்வேகம் எந்த நேரத்திலும் மாறலாம்.

    ஐபிஎல் 2025 சீசனின் 16ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. கே.எல். ராகுல் 77 ரன்கள் விளாசினார்.

    பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பேட்ஸ்மேன்கள் சொதப்பலாம் தோல்வியை எதிர்கொண்டது.

    2010ஆம் ஆண்டுக்குப் பின் முதன்முறையாக சேப்பாக்கம் மைதான்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் வீழ்த்தியுள்ளது. அத்துடன் இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    சிஎஸ்கே அணிக்கெதிரான வெற்றி குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது:-

    மூன்று போட்டிகளில் மூன்று வெற்றி என்பது எளிதாக கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் பங்களிப்பை கொடுத்தார்கள். டீம் பேலன்ஸ் சிறப்பாக உள்ளது. ஒரு கேப்டனாக ஹாட்ரிக் வெற்றி சந்தோசம் அளிக்கிறது.

    எனது கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் இன்று அதிகமாக பந்து வீசவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் சில சிறந்த கேட்ச்கள் இருக்கும். சில கேட்ச்கள் தவறவிடப்படும். ஒரு கேப்டனாக தரமான போட்டியில் நாங்கள் இதுவரை விளையாடியதாக நினைக்கவில்லை. ஐபிஎல் நீண்ட தொடர். உத்வேகம் எந்த நேரத்திலும் மாறலாம்.

    இவ்வாறு அக்சர் படேல் தெரிவித்தார்.

    • மும்பைக்கு எதிரான தொடக்க போட்டியில் வெற்றி பெற்றது.
    • ஆர்சிபிக்கு எதிராக தோல்வியை எதிர்கொண்ட நிலையில், தற்போது டெல்லிக்கு எதிராக தோல்வியடைந்துள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனின் 16ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. கே.எல். ராகுல் 77 ரன்கள் விளாசினார்.

    பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பேட்ஸ்மேன்கள் சொதப்பலாம் தோல்வியை எதிர்கொண்டது.

    3ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் விஜய் சங்கர் களம் இறங்கினார். கடைசி நின்று 54 பந்துகளை சந்தித்து 69 ரன்கள் மட்டுமே அடித்தார். கடைசி வரை விளையாடியும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. மேலும், டோனியும் கடைசி வரை களத்தில் நின்று 26 பந்தில் 30 ரன்களே அடித்தார்.

    ரச்சின் ரவீந்திரா (3), கான்வே (13), ருதுராஜ் கெய்க்வாட் (5) ஆகிய மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதாலும் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தது.

    டெல்லி அணி கடந்த 2010ஆம் ஆண்டு கடைசியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் தற்போதுதான் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக ஆர்சிபி 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக சிஎஸ்கேவை சேப்பாக்கத்தில் வீழ்த்தியிருந்தது. அதன்பின் தற்போது டெல்லி அணி சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியுள்ளது.

    சிஎஸ்கே கடந்த 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அதன்பின் 28ஆம் தேதி ஆர்சிபிக்கு எதிராக 50 ரன்னில் தோல்வியடைந்திருந்தது. இன்று டெல்லிக்கு எதிராக 25 ரன்னில் தோல்வியை சந்தித்துள்ளது.

    கவுகாத்தில் 30ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக 6 ரன்னில் தோல்வியடைந்தது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடி மூன்றில் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது.

    • விஜய் சங்கர் 54 பந்தில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • எம்.எஸ். தோனி 26 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் 51 பந்தில் 77 ரன்கள் விளாசினார். அபிஷேக் பொரேல் 33 ரன்களும், அக்சர் படேல் 21 ரன்களும், சமீர் ரிஸ்வி 20 ரன்களும், ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும் சேர்த்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் கலீல் அகமது 4 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முகேஷ் சவுத்ரி 4 ஓவரில் 50 ரன்கள் வாரி வழங்கினார்.

    பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. ரச்சின் ரவீந்திரா, கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரின் 5ஆவது பந்தில் ரச்சின் ரவீந்திரா 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ருதுராஜ் கெய்க்வாட்டை 5 ரன்னில் வெளியேற்றினார் மிட்செல் ஸ்டார்க். 20 ரன்னுக்குள் சிஎஸ்கே முக்கிய இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் அந்த சரிவில் இருந்து சிஎஸ்கே அணியால் மீள முடியவில்லை. கான்வே 14 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷிவம் துபே 18 ரன்களும் எடுத்த நிலையிலும் விப்ராஜ் நிகம் பந்தில் ஆட்டமிழந்தார்.

    ஒரு பக்கம் விஜய் சங்கர் களத்தில் நின்றுகொண்டிருந்தார். ஆனால் இவரால் அதிரடியாக ரன்கள் குவிக்க இயலவில்லை. 6ஆவது விக்கெட்டுக்கு விஜய் சங்கர் உடன் எம்.எஸ். டோனி ஜோடி சேர்ந்தார்.

    விஜய் சங்கர் 43 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி 3 ஓவரில் சென்னை அணிக்கு 67 ரன்கள் தேவைப்பட்டது. முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரில் தோனி ஒரு சிக்ஸ் பறக்க விட்டார். இதனால் சிஎஸ்கே அணிக்க 13 ரன்கள் கிடைத்தன.

    கடைசி 2 ஓவரில் 54 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரில் சென்னை அணியால் 13 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    கடைசி ஓவரை முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரில் விஜய் சங்கர் ஒரு சிக்ஸ் அடித்தார். தோனி ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. இதனால் சிஎஸ்கே-வால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி 25 ரன்னில் வெற்றி பெற்றது. 

    விஜய் சங்கர் 54 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எம்.எஸ். தோனி 26 பந்தில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் உடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை

    • கே.எல். ராகுல் 77 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
    • கலீல் அகமது 2 விக்கெட் வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று தோனி வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்தான் கேப்டனாக களம் இறங்கினார். டேவன் கான்வே களம் இறக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி அணியின் மெக்கர்க்- கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் மெக்கர்க் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து ஆட்மிழந்தார். இதனால் ரன் கணக்கை தொடங்காமல் டெல்லி விக்கெட்டை இழந்தது.

    2ஆவது விக்கெட்டுக்கு கேஎல் ராகுலுடன் அபிஷேக் பொரேல் ஜொடி சேர்ந்தார். இவர் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முகேஷ் சவுத்ரி 2ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் பொரேல். இந்த ஓவில் டெல்லி 19 ரன்கள் குவித்தது. பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 51 ரன்கள் விளாசியது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

    7ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் பொரேல் ஆட்டமிழந்தார். அவர் 20 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். அடுத்து அக்சார் படேல் களம் இறங்கினார். இவர் இந்த ஓவரின் கடைசி பந்தை சிக்கருக்கு தூக்கினார்.

    முதல் 10 ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் குவித்தது. அப்போது கேஎல் ராகுல் 29 ரன்களுடனும், அக்சார் படேல் 20 ரன்களுடனும் சேர்த்திருந்தனர். 11ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரின் 4ஆவது பந்தில் அக்சார் படேல் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஸ்கோர் 90 ரன்னாக இருந்தது.

    4ஆவது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல் உடன் சமீர் ரிஸ்வி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் விரைவாக ரன் குவிக்க முயற்சித்தது. 12ஆவது ஓவரில் டெல்லி அணிக்கு 11 ரன்கள் கிடைத்தன. 13ஆவது ஓவரில் 10 ரன்கள் கிடைத்தன.

    14ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்து கே.எல். ராகுல் 33 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தன. 15ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரில் ராகுல் இரண்டு பவுண்டரி அடிக்க, ரிஸ்வி ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் டெல்லி அணிக்க 17 ரன்கள் கிடைத்தன.

    16ஆவது ஓவரை சவுத்ரி வீசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 8 ரன்கள் கிடைத்தன. 17ஆவது ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரிஸ்வி ஆட்டமிழந்தார். அவர் 15 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார். அப்போது டெல்லி 16.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். டெல்லி அணிக்கு இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தன.

    18ஆவது ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் ம்டுமே விட்டுக்கொடுத்தார். 19ஆவது ஓவரை சவுத்ரி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை கேஎல் ராகுல் பவுண்டரிக்கு விரட்டினார். 3ஆவது பந்தில் கொடுத்த கேட்சை சவுத்ரி தவற விட்டார். 4ஆவது பந்தை ஸ்டப்ஸ் அபாரமாக சிக்சருக்கு தூக்கினார். அதோடு 5ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் டெல்லி அணிக்கு 15 ரன்கள் கிடைத்தன. அதோடு 19 ஓவரில் 176 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் ராகுல் ஆட்டமிழந்தார். அவர் 51 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 77 ரன்கள் விளாசினார். அடுத்த பந்தில் அஷுடோஸ் சர்மா ரனஅவுட் ஆனார். இந்த ஓவரில் பதிரனா 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க டெல்லி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்க 183 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டப்ஸ் 12 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சென்னை அணி சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், ஜடேஜா, பதிரனா, நூர் அகமது ஆகியோர தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

    சேப்பாக்கம் ‘பிட்ச்’ குறித்து டோனி மீண்டும் அதிருப்தி அடைந்துள்ளார். இது போன்ற பிட்சில் விளையாட நாங்கள் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். #IPL2019 #CSKvKKR #dhoni

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்னே எடுக்க முடிந்தது.

    பந்து வீச்சுக்கு ஏற்ற இந்த மோசமான ஆடு களத்தில் ஆந்த்ரே ரஸ்சல் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 44 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார். தீபக் சாஹர் 3 விக்கெட்டும், ஹர்பஜன்சிங், இம்ரான் தாகீர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 16 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 109 ரன் இலக்கை எடுத்தது. 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டு பிளிஸ்சிஸ் 43 ரன்னும், அம்பதிராயுடு 21 ரன்னும் எடுத்தனர். சுனில் நரீன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 5-வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

    மிகவும் குறைந்த ரன்னே எடுக்க முடிந்ததால் சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் பெங்களூர் அணியால் 70 ரன்னே எடுக்க முடிந்தது. இந்த ரன்னை எடுக்க சூப்பர் கிங்சுக்கு 18 ஓவர் வரை தேவைப்பட்டது. நேற்றைய போட்டியிலும் இதே நிலைமைதான்

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, சேப்பாக்கம் ‘பிட்ச்’ குறித்து மீண்டும் அதிருப்தி அடைந்துள்ளார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    முதல் போட்டியில் இருந்த ஆடுகளம் போலவே இந்த ஆட்டத்திலும் இருந்தது. பிட்ச் குறித்து புகார் கூறிக் கொண்டே நாங்கள் வெற்றி பெற்று விடுகிறோம். இது போன்ற பிட்சில் விளையாட நாங்கள் விரும்பிவில்லை. ஏனென்றால் மிகவும் குறைந்த ஸ்கோர் தான் எடுக்க முடிகிறது.

    எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு இந்த ஆடுகளத்தில் ரன் எடுப்பது கடினமாக இருக்கிறது. அதுவும் முதலில் பேட்டி செய்தால் மிகவும் கடினமாக உள்ளது. பனி பொழிவினால் 2-வது பகுதி ஆட்டத்துக்கு ஆடுகளம் கொஞ்சம் பரவாயில்லை. இது மாதிரியான ஆடுகளம் இல்லாமல் பேட்டிங்குக்கு சாதகமாக அமைந்தால் நாங்கள் சரியான அணி சேர்க்கையை சேர்த்தாக வேண்டும். என்னை பொறுத்தவரை திட்டமிடுதல் எதுவுமில்லை.

    பிராவோ காயம் அடைந்த பிறகே அணி சேர்க்கை எங்களுக்கு கடினமாக உள்ளது. ஆல்ரவுண்டர் இல்லை. டேவிட் வில்லேயும் இல்லை

    ஹர்பஜன்சிங், இம்ரான் தாகீர் ஆகியோரை பற்றி எந்த பிரச்சினையும் இல்லை. இருவரும் முதிர்ச்சி அடைந்தவர்கள். பழைய ஒயின் போன்றவர்கள். இருவரும் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். நான் என்ன விரும்புகிறேனோ அதற்கு ஏற்றவாறு நல்ல திறமையுடன் இம்ரான்தாகீர் வீசுகிறார். ஒட்டு மொத்தத்தில் பந்து வீச்சு துறை நன்றாக இருக்கிறது.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை நாளை மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் ஜெய்பூரில் இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    கொல்கத்தா நைட்ரை டர்ஸ் அணி 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் டெல்லியை வருகிற 12-ந்தேதி எதிர்கொள்கிறது. #IPL2019 #CSKvKKR #dhoni

    சேப்பாக்கத்தில் 31-ந்தேதி நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் நள்ளிரவில் இருந்தே சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு திரண்டு இருந்தனர். #IPL2019 #CSK #CSKvRR
    சென்னை:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் 7 ‘லீக்’ ஆட்டங்கள் நடக்கிறது.

    கடந்த 23-ந்தேதி நடந்த தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

    வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு 2-வது ஆட்டம் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகின்றனர்.



    சேப்பாக்கத்தில் 31-ந்தேதி நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 8.45 மணிக்கு தொடங்கியது.

    டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் நள்ளிரவில் இருந்தே சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு திரண்டு இருந்தனர். அவர்கள் நீண்ட கியூவில் நின்று மிகவும் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கினார்கள். குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,300 ஆகும். இந்த விலையிலான டிக்கெட்டுகள் வாங்குவதற்காகவே ரசிகர்கள் ஸ்டேடியம் முன்பு குவிந்து இருந்தனர்.

    இதேபோல ஆன்லைனிலும் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன. #IPL2019 #CSK #CSKvRR
    மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்து எம்எஸ் டோனியை கட்டி அணைத்த கல்லூரி மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #IPL21019 #CSK #MSDhoni
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 23-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதையொட்டி சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்களுக்குள் இரண்டு அணியாக பிரிந்து நேற்று காட்சி போட்டியில் விளையாடினர்.

    இதை பார்ப்பதற்கு சி.டி.இ. ஆகிய கேலரிகளில் ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். 3 கேலரிகளிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

    போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் புகுந்தார். அவர் டோனியை நோக்கி கட்டி அணைக்க ஓடி வந்தார்.

    இதனை கவனித்த டோனி அவரிடம் சிக்காமல் ஓட்டம் காண்பித்தார். ஆனாலும் விடாமல் துரத்திய வாலிபர் டோனியை நெருங்கினார். அப்போது அருகில் நின்ற பந்து வீச்சு பயிற்சியாளர் பாலாஜியின் பின்னால் டோனி மறைந்து நின்றார்.



    இந்த ஓட்டம் சிறிது நேரம் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் டோனியே அந்த வாலிபரிடம் வந்து கைகுலுக்கி கட்டி அணைத்தார். இதன் பின்னர் அந்த வாலிபர் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் வெளியேறினார்.

    இதையடுத்து மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த அந்த வாலிபரை திருவல்லிக்கேணி போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அவர் மதுரை மாகாளிப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவரான அரவிந்த்குமார் என்பது தெரிந்தது. எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வரும் அவர் கிரிக்கெட் வீரர்களை பார்ப்பதற்காகவே மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை வந்துள்ளார்.

    டோனியின் தீவிர ரசிகரான அரவிந்த்குமார் மைதானக்குள் டோனியை பார்த்ததும் மகிழ்ச்சியில் பாதுகாப்பை மீறி சென்றுவிட்டதாக கூறி உள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனான டோனிக்கு சென்னையில் ரசிகர்கள் அதிகம்.

    சமீபத்தில் நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போதும் ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் வந்து டோனியை கட்டி அணைத்தார். இந்த வீடியோ வைரலானது. தற்போது சென்னையிலும் இதேபோல் சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது. #IPL21019 #CSK #MSDhoni
    ×