என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » chief election officer
நீங்கள் தேடியது "chief election officer"
பிரதமர் மோடி மீதான புகாரில் ஒரு தலைபட்சமாக முடிவு எடுக்கவில்லை என தலைமை தேர்தல் கமிஷனர் பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
தேர்தலில் நரேந்திர மோடி, அமித்ஷா மீது கூறப்பட்ட நடத்தை விதிமீறல் புகாரில் ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்கவில்லை. தகுதியின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது. இதனை கமிஷனர் அசோக் லாவசா அனுமதிக்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்தார். நான் யாருக்கும் நன்னெறி நீதிபதி அல்ல. லாவசாவைவிட சற்று மூத்தவன். அவருடைய உணர்வுகள் எப்படி இருந்தாலும், நாங்கள் ஒருவருக்கொருவர் பொய் சொன்னதில்லை.
தேர்தல் கமிஷனில் அனைவரும் ‘ஜெராக்ஸ் காப்பிகள்’ இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது. பேசுவதற்கும் ஒரு நேரம், அமைதியாக இருப்பதற்கும் ஒரு நேரம் இருக்கிறது. நாங்கள் ஒரு முடிவு எடுக்கிறோம் என்றால் ஒன்று அது ஒருமித்த கருத்தாக இருக்கும் அல்லது பெரும்பான்மையினர் கருத்தாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் நாளை ஆலோசனை நடத்துகிறார். #LokSabhaElections2019 #ElectionCommission
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ளது.
தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வேட்பாளர்களை தேர்ந்து எடுப்பதில் கட்சிகள் மும்முரமாக உள்ளன.
தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு இருக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் உள்ள கல்லூரி நிகழ்ச்சிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைக்கப்பட்டது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இந்திய தேர்தல் கமிஷன் விளக்கம் கோரி உள்ளது. பா.ஜ.க.வின் சட்டப்பிரிவு நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விளக்கம் கோரப்பட்டு இருக்கிறது.
தேர்தல் பிரசாரங்களை கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களில் நடத்த அந்தந்த கல்வி நிறுவனங்களின் அனுமதி இருந்தாலே போதும். ஆனால், அந்த கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களை வைத்தே தேர்தல் பிரசாரம் செய்ததாக புகாரில் கூறப்பட்டு உள்ளது.
எனவே இந்த புகாருக்கு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையருமான பிரகாஷிடம் விளக்கம் கோரப்பட்டு உள்ளது. அவரது விளக்கத்துக்கு பிறகு அதில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்.
தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடந்த வாகன சோதனைகளில் 15-ந் தேதி வரை, ரூ.4.88 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 15-ந் தேதி ஒரு நாளில் மட்டும் ரூ.73.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் ரூ.1.28 கோடியும், திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.93.62 லட்சமும் பறிமுதல் ஆகி உள்ளது.
‘சிவிஜில்’ என்ற செல்போன் செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதி செய்வது, புகார்கள் அளிப்பது போன்றவற்றுக்காக 297 புகார்கள் பெறப்பட்டன. இந்த செயலி மூலம் தேர்தல் நடத்தை விதி மீறல் பற்றிய புகைப்படம் அல்லது வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம்.
சுவர் விளம்பரங்கள் அகற்றப்படாமல் இருந்தால் ‘சிவிஜில்’ செயலியில் புகார் செய்யலாம். அந்த வகையில் 38 புகார்கள் பெறப்பட்டு அவை சரிசெய்யப்பட்டன. 81 விளம்பரங்கள் நடவடிக்கைக்காக நிலுவையில் உள்ளன. மீதமுள்ளவை நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று கைவிடப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக அளிக்கப்பட்ட 8 லட்சம் விண்ணப்பங்களில் 66 சதவீத விண்ணப்பங்களின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. அவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. மீதமுள்ள 2.75 லட்சம் விண்ணப்பங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.
புகார் அளிப்பதற்கான 1950 என்ற கட்டணமில்லாத போன் எண்ணுக்கு இதுவரை 44 ஆயிரத்து 240 அழைப்புகள் பெறப்பட்டு அவற்றுக்கு பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.
பாராளுமன்ற தேர்தலை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை பற்றி ஆலோசிக்க அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அனைத்து காவல் ஆணையர்களுடன் தலைமைச் செயலகத்தில் 18-ந் தேதி (நாளை) பிற்பகல் 2.30 மணிக்கு ஆலோசனை நடத்தப்படுகிறது.
எனது தலைமையில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலைமைகள், தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான அம்சங்கள், தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அங்குள்ள போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு பற்றிய தகவல் வந்து உள்ளது.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார். #Elections2019
சென்னை:
பா.ஜ.க. தலைமையில் ஆட்சி செய்து வரும் மத்திய அரசின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே, மே மாதம் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் காவல் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும்.
காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை இடமாற்றம் செய்து பிப்ரவ்ரி 15-ம் தேதிக்குள் அறிக்கை தரவேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார். மேலும், ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை தரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. #Elections2019
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 31-ந் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார். #ElectionCommission
சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தவறாக பெயர் குறிப்பிடப்பட்டவர்கள், அதை திருத்தம் செய்துகொள்வதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, செப்டம்பர், அக்டோபர் ஆகிய 2 மாதங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்துகொள்வதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இம்மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான வலைத்தளம் புதிதாக உருவாக்கப்பட்டு, வாக்காளர்களின் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதால், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதில் தொய்வு ஏற்பட்டது.
மேலும், இந்த புதிய வலைத்தளம் மூலம் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் இருந்தால், அதை உடனடியாக கண்டுபிடிக்க முடியும். அந்த வகையில், தமிழகத்தில் சுமார் 10 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த பெயர்களை இனங்கண்டு நீக்கும் முறை தற்போது நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக, குறிப்பிட்ட வீடுகளில் ஆய்வு செய்யும் பணியில் தேர்தல் பணி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகள் தற்போது நடைபெற்று வருவதால், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட ஜனவரி 10-ந் தேதி வரை கால அவகாசம் வழங்க தமிழக தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை வரும் 21-ந் தேதி (நாளை மறுநாள்) வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இடையில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை வேறு வந்ததால், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவை நீக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது, மீண்டும் அந்த பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வரும் 31-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க 1-1-2019-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, தீவிர முறையிலான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் முதலியவற்றுக்கான படிவங்கள் 1-9-2018 முதல் 31-10-2018 வரை பெறப்பட்டன.
முன்பு அறிவித்த நீட்டித்த கால அட்டவணையின்படி, இறுதி வாக்காளர் பட்டியல்கள் 21-1-2019 அன்று வெளியிடப்பட்டிருக்க வேண்டும். பிழைகளற்ற வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், சேர்த்தல், நீக்கல் குறித்த தகவல்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துகொள்ளுவதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் 2 கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இதன் தொடர் நடவடிக்கையாக வாக்காளர் பட்டியல்களில் காணப்படும் தவறுகள், ஒன்று போலுள்ள பதிவுகள் ஆகியவற்றை கண்டறிந்து உரிய களவிசாரணை மேற்கொண்டு இரட்டைப்பதிவுகளை நீக்கி, இந்திய தேர்தல் ஆணையத்தின் “ஈஆர்ஓ நெட்” மென்பொருள் மூலம் அச்சிடும் பணியை மேற்கொள்ளவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இப்பணிகளுக்கு மேலும் சிறிது கால அவகாசம் தேவைப்படுவதால் இறுதி வாக்காளர் பட்டியல்களை 31-1-2019 அன்று வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 31-1-2019 அன்று இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #ElectionCommission

மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த எஸ்.பி.சசாங் இன்று மாற்றப்பட்டு உள்ளார். #Mizoram #Shashank #ChiefElectroralOfficer
புதுடெல்லி:
மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. லால் தன்ஹாவ்லா முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அம்மாநில சட்டசபைக்கு வருகிற 28-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது.
இந்நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த எஸ்.பி.சசாங் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த சசாங் இன்று மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதிய அதிகாரியாக ஆஷிஷ் குந்த்ரா என்பவரை நியமனம் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, மாநில தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.பி.சசாங்கை நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Mizoram #Shashank #ChiefElectroralOfficer
×

X