என் மலர்
நீங்கள் தேடியது "Chief-Minister Rangasamy"
- புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 1971 இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
- போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் முதலமைச்சர் ரங்கசாமி மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 1971 இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, கடற்கரைச் சாலையில் பிரெஞ்சு தூதரகம் எதிரில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் ரங்கசாமி மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா, போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார் லால், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், முப்படை நலத்துறை இயக்குநர் சந்திரமோகன் மற்றும் கடலோர காவல் படை, தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க நிர்வாகிகள் பங்கேற்று நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற 60 சமூக மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து மாநில அந்தஸ்து போராட்ட குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
- தங்களது கூட்டணி ஆட்சி மற்றும் கட்சியில் இருப்பவர்கள் மாநில அந்தஸ்து சம்மந்தமாக பொது வெளியில் பேசுவது ஒத்த கருத்துடையதாக இருக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற 60 சமூக மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து மாநில அந்தஸ்து போராட்ட குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
மாநில அந்தஸ்து போராட்ட குழுவினர் ஒருங்கிணைப்பாளர் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற தங்களுக்கு உதவும் விதமாக மக்களிடம் எடுத்து சென்று போராடவும் உங்களோடு கைக்கோர்க்கவும் தயாராக இருக்கிறோம். ஆனால் தங்கள் கூட்டணியில் இருக்கும் பா.ஜனதா தலைவர் மாநில அந்தஸ்துக்கு எதிர் கருத்து கூறியிருப்பது மக்களை குழப்பும் விதமாக இருந்தது.
இதனை சரிசெய்ய கூட்டணி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். தங்களது கூட்டணி ஆட்சி மற்றும் கட்சியில் இருப்பவர்கள் மாநில அந்தஸ்து சம்மந்தமாக பொது வெளியில் பேசுவது ஒத்த கருத்துடையதாக இருக்க வேண்டும்.
அதேபோல அனைத்து கட்சி கூட்டம் மற்றும் அனைத்து பொதுநல அமைப்பு களையும் கூட்டத்தை கூட்டி மாநில அந்தஸ்துக்கான கோரிக்கை யை வலுப்பெற செய்ய வேண்டும்.மேலும், சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி எம்.எல்.ஏ.க்களை டெல்லிக்கு அழைத்து சென்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்
எங்களது இந்த கோரிக்கைகளை காலதாம தப்படுத்துவதால் அரசியல் கட்சி தலைவர்கள் எங்களையும் சேர்த்து விமர்சனம் செய்கிறார்கள். ஆகையால் எங்களது கோரிக்கைகளை துரிதமாக நிறைவேற்ற ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
மனுவை பெற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி மார்ச் மாதம் தொடங்க உள்ள பட்ஜெட் கூட்ட தொடரில் ஏகமனதாக மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம் என்றும் விரைவில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இருப்பதாகவும் உறுதி அளித்தார்.
- உலக புற்றுநோய் தினம் வருகிற 4-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உழவர்கரை நகராட்சி சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துப்புரவு பணியாளர்களுக்கு புற்று நோய் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய சீருடைகள் வழங்கப்பட்டது.
- 30 வயதை கடந்த இருபாலினரும் புற்றுநோய் சோதனை செய்ய வேண்டும். வாய், மார்பகம், கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் சிகிச்சை பெறலாம் என்றார்.
புதுச்சேரி:
உலக புற்றுநோய் தினம் வருகிற 4-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
உழவர்கரை நகராட்சி சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துப்புரவு பணியாளர்களுக்கு புற்று நோய் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய சீருடைகள் வழங்கப்பட்டது.
பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சீருடைகளை வழங்கி பேசும்போது, புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவது மிகவும் முக்கியம். நகராட்சி பணியாளர்களின் பங்கு இதில் இன்றியமையாதது. அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.
ஆரம்ப நிலையில் புற்றுநோயை கண்டறிந்தால் அதை ஒழிக்கலாம். 30 வயதை கடந்த இருபாலினரும் புற்றுநோய் சோதனை செய்ய வேண்டும். வாய், மார்பகம், கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் சிகிச்சை பெறலாம் என்றார்.
நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கரன், சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், கலெக்டர் வல்லவன், சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர்கள் முரளி, ரகுநாதன், நோடல் அதிகாரி ரமேஷ், சித்ராதேவி, திட்ட அதிகாரி துரைசாமி, நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் மற்றும் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.
- இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு வாய்ந்த கைவினை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
- உள்ளூர், வெளிமாநிலங்களை ஆர்வமுடன் பார்வையிட்டு தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
புதுச்சேரி:
மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் கடற்கரை காந்தி திடலில் கைவினை பொருட்கள் கண்காட்சி (காந்தி சில்ப் பஜார்- 2023) திறப்பு விழா நடந்தது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கண்காட்சியை திறந்து
வைத்து பார்வையிட்டனர்.
கண்காட்சியில் கைத்திறன் சந்தைப்படுத்துதல் மற்றும் சேவை மையங்கள் மூலம் தேர்தெடுக்கப்பட்ட 100 கைவினை கலைஞர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த பாரம்பரியமிக்க கைவினை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன.
இந்த கண்காட்சியில் நூல் தையல் வேலைகள், கண் ணாடி நகைகள், தரை விரிப்புகள், வடமாநில கலை உலோக பொருட்கள், கலைநயம் மிக்க கல் படைப்புகள், அச்சிடப்பட்ட துணி வகைகள், பீகார் ஓவியங்கள், குஜராத் புடவை வகைகள், பட்ட சித்திர ஓவியங்கள், ஒடிசா
வெள்ளி நகைகள், மரச்சிற்பங்கள், காகித கூழ் பொம்மைகள், தஞ்சாவூர்-மைசூர் ஓவியம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு வாய்ந்த கைவினை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியை கடற்கரைக்கு வந்திருந்த உள்ளூர், வெளிமாநிலங்களை ஆர்வமுடன் பார்வையிட்டு தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை 0 மணி முதல் 9 மணி வரை நடக்கிறது.
- மத்திய அரசு உதவியோடு அதிக நிதி பெற்று சிறந்த முறையில் செலவிட்டு புதுவையை முன்னேற்றுவோம்.
- புதிய சட்டப்பேரவை கட்டவேண்டும் என்ற எண்ணம். அதற்கு விரைவில் முடிவு எடுக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
மத்திய அரசு உதவியோடு அதிக நிதி பெற்று சிறந்த முறையில் செலவிட்டு புதுவையை முன்னேற்றுவோம்.கேள்விகளுக்கு நிறைவான பதில்களை அமைச்சர்கள் தந்துள்ளனர்.
புதுவையை பொருத்தவரை கடந்த ஆட்சிக்காலத்தில் நிர்வாக சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும். அதை கொண்டு வந்தால்தான் விரைவாக எண்ணங்களை செயல்வடி வில் கொண்டு வரமுடியும். பிரச்சினைகளை தீர்க்க நிர்வாக சீர்திருத்ததுக்கு அரசு கவனம் செலுத்தும்.
புதிய சட்டப்பேரவை கட்டவேண்டும் என்ற எண்ணம். அதற்கு விரைவில் முடிவு எடுக்கப்படும். வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் புதிய சட்டப்பேரவை கட்ட பூமிபூஜை போடப்படும்.
அரசின் 10 ஆயிரம் காலி பணி இடங்கள் காலியாக இருந்தது ஒவ்வொரு துறைவாரியாக நிரப்புகிறோம். விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த ஆட்சி காலத்தில் பணியில் அமர்த்தப்பட்டு அரசு சம்பளம் வாங்கியிருந்து கடந்த ஆட்சியில் நீக்கப்பட்டிருந்தால் திரும்பவும் வேலை தரப்படும்.
மறைந்த பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, புதுவை செல்லாநாயக்கர், தியாகு முதலியார் ஆகியோர் பிறந்த நாள், நினைவு தினம் அரசு விழாவாக எடுக்கப்படும்.
இவ்வாறு ரங்கசாமி பேசினார்.
- மக்களால் நான், மக்களுக்காகவே நான் என வாழ்ந்து மறைந்தவர் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்.
- புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அ.ம.மு.க. வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என வாழ்ந்து மறைந்தவர் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். புதுவை மக்களின் மீது பாசம் கொண்டவர்.
அதனால் அவருக்கு புதுவையில் சிலை அமைக்க வேண்டும். அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று அ.ம.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்தி னோம்.
எங்களின் கோரிக்கையை ஏற்று புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். இதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அ.ம.மு.க. சார்பில் பாராட்டை தெரிவித்து கொள்கிறோம். மேலும் அரசு சார்பில் ஜெயலலிதாவிற்கு சிலை அமைக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- புதுவை மாநிலத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு நடந்து வருகிறது.
- முதல்- அமைச்சர் ரங்கசாமி, தன்வசம் இருந்த இந்த துறையை பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வழங்கியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு நடந்து வருகிறது.
புதுவை அமைச்ச ரவையில் உள்துறை, குடிமை ப்பொருள் வழங்கல்துறை அமைச்சர்களாக பா.ஜனதாவை சேர்ந்த நமச்சிவாயம், சாய். ஜெ.சரவணன்குமார் இடம்பெற்றுள்ளனர். அமைச்சர் நமச்சிவாயம் வசம் உள்துறை, மின்துறை, கல்வித்துறை, தொழில் மற்றும் வணிகத்துறை, விளையாட்டு துறை உள்ளிட்ட துறைகள் உள்ளது.
இந்த நிலையில் கூடுதலாக அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்- அமைச்சர் ரங்கசாமி, தன்வசம் இருந்த இந்த துறையை பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வழங்கியுள்ளார்.
புதுவையில் புதிய தொழிற்சாலைகளை கொண்டுவர அரசுபல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகளில் அமைச்சர் நமச்சிவாயம் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இந்த துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு கூடுதலாக ஒதுக்க ப்பட்டுள்ளது.
- சகோதர- சகோதரிகள் அனைவருக்கம் எனது இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
- இயேசு கிறிஸ்துவின் அளவற்ற அன்பையும், கருணையையும் நினைவுபடுத்திக்கொள்ள இந்த ஈஸ்டர் ஒரு நல்ல வாய்ப்பு.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-
மனித குலத்தை வாழ்விக்க தன்னுயிரை தந்த அன்பின் திருவுருமான இயேசு பிரான் புத்துயிர் பெற்ற நாளை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி மகிழும், கிறித்துவ சகோதர- சகோதரிகள் அனைவருக்கம் எனது இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
நாம் நமது வாழ்வை மகிழ்ச்சியை புதுப்பித்துக் கொள்வதற்கான நம்பிக்கை யை தருவதே ஈஸ்டர் பண்டிகையின் உள்ளார்ந்த அர்த்தமாக உள்ளது. ஆண்டவனின் கிருபை இதில் அடங்கியுள்ளது. இயேசு கிறிஸ்துவின் அளவற்ற அன்பையும், கருணையையும் நினைவுபடுத்திக்கொள்ள இந்த ஈஸ்டர் ஒரு நல்ல வாய்ப்பு.
புத்துயிர் பெற்ற இறைவனின் அருட்கொ டையானது, உங்கள் வீடுகளை பேரொளியாலும், உங்கள் ஆன்மாக்களை கருணை யாலும், எண்ண ங்களை மேன்மையான சிந்தனை களாலும் நிரப்பட்டும். கருணாமூர்த்தியின் அளவற்ற ஆசீர்வாதம் உங்களோடும், உங்கள் குடும்பத்தாரோடும் என்றும் நிலைத்திருக்க பிரார்த்திக்கின்றேன். அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- புதுவை மாநிலத்திற்கு நபார்டு வங்கி ரூ.116 கோடி 47 லட்சத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
- புதுவை மாநில உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்க ளுக்கான நிதியை தர தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்திற்கு நபார்டு வங்கி ரூ.116 கோடி 47 லட்சத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதில் ரூ.50 கோடியே 25 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுவை சட்டசபையில் நபார்டு வங்கி அதிகாரிகள் முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினர்.
அப்போது, நடப்பு நிதியாண்டிலும் புதுவை மாநில உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்க ளுக்கான நிதியை தர தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.
நடப்பு நிதியாண்டுக்கான திட்டங்களை தயாரித்து அனுப்புவதாகவும், அதற்கு அதிக நிதி வழங்க வேண்டும் என முதல்- அமைச்சர் ரங்கசாமி கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பின்போது அமைச்சர் லட்சுமி நாராயணன், நிதி செயலர் ராஜூ ஆகியோர் உடனிருந்தனர்.
- பேரிடர் மேலாண்மைத்துறை மாவட்ட துணை கலெக்டர் சவுந்தரி ஆகியோர் உடனிருந்தனர்.
- உள்நாட்டு போரில் சிக்கியிருந்த என்னை இந்திய அரசு மீட்டது.
புதுச்சேரி:
சூடான் நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரினால் அங்கு சிக்கி தவித்து வரும் இந்திய மக்களை பத்திரமாக மீட்டுவர மத்திய அரசு ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தை செயல்ப டுத்தியது.
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, சூடானில் சிக்கி தவித்து வரும் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்களையும் பத்திரமாக மீட்டு அனுப்பி வைக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனடிப்படையில் புதுவை வில்லியனூர் தில்லை நகரை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் முருகன்(38) சூடானில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.
புதுவைக்கு பத்திரமாக திரும்பிய முருகன் இன்று புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அவர் காலில் விழுந்து வணங்கி, தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இந்த சந்திப்பின்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், பேரிடர் மேலாண்மைத்துறை மாவட்ட துணை கலெக்டர் சவுந்தரி ஆகியோர் உடனிருந்தனர்.
மீட்கப்பட்டது குறித்து முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: -நான் 10 ஆண்டுக்கு மேலாக சூடானில் பணியாற்றி வருகிறேன். குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தேன். குழந்தைகளின் படிப்புக்காக நாடு திரும்பினேன்.
8 மாதம் முன்பு நான் மட்டும் சூடான் சென்றேன். அங்கு ரபக் என்ற நகரில் சர்க்கரை ஆலையில் என்ஜினீயராக பணியாற்றி வந்தேன்.
உள்நாட்டு போரில் சிக்கியிருந்த என்னை இந்திய அரசு மீட்டது. எனக்கு முன்பாக புதுவை ஏம்பலத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் மீட்கப்பட்டுள்ளார். அவர் கொச்சின் வழியாக வந்தார். நான் டெல்லி வழியாக புதுவைக்கு வந்து சேர்ந்தேன் என்றார்.
- பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி புதுவை கடற்கரை காந்தி திடலில் நடந்தது.
- தினேஷ்குமார் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார் .
புதுச்சேரி:
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு குளோபல் அகாடமி, சுற்றுலாத்துறை, இந்திரா காந்தி தேசிய கலை மையம் இணைந்து நடத்திய ஆனந்த தாண்டவம், 2600 மாணவிகள் பங்கேற்ற உடுக்கையுடன் கூடிய பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி புதுவை கடற்கரை காந்தி திடலில் நடந்தது.
இதில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர் சங்கமம் நிறுவனர் தினேஷ்குமார் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார் .
பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து, பாரதியார் பல்கலைக்கூட பேராசிரியர்கள் விசித்திரா, முனைவர் சாந்திபாபு, அண்ணாமலை பல்கலைக்கழக இசை துறை பேராசிரியை சின்னமனூர் சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
- நம் மாணவர்கள் பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவ மனையில் அதிநவீன அவசர சிகிச்சை மருத்துவ பிரிவு மற்றும் புதுப்பிக்கப்பட்ட கலையரங்கத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி வரவேற்றார். சேர்மன் பிலிப், முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
புதுவை கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. நம் மாணவர்கள் பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.
மாணவர்கள் உயர்கல்வி பெற தேவையான அனைத்து வசதிகளையும் இந்த அரசு செய்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
காலாபட்டு எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பேசினார். நிகழ்ச்சியில், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் தலைவரும் கோட்டயம் மறை மாவட்டத்தின் மலங்கரா ஆர்தோடக்ஸ் சிரியன், திருச்சபையின் பேராயர் டாக்டர் யுகானன் மார் டயாஸ்கோர்ஸ், சென்னை மறை மாவட்டத்தின் மலங்கரா ஆர்தோடக்ஸ், சிரியன் திருச்சபையின் பேராயர் ஜீவர்கீஸ் மார் ப்ளாக்ஸ்னஸ், புதுவை சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், மெடோ ஃபார்ம் இயக்குனர் பன்னாலால் சோர்த்தியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முடிவில் மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் நன்றி கூறினார்.