என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » chimbu devan
நீங்கள் தேடியது "chimbu devan"
இம்சை அரசன் 24ஆம் புலிகேசி நடிக்க முடியாது என்று வடிவேலு பிடிவாதம் பிடித்து வந்த நிலையில், தற்போது சமரசம் ஏற்பட்டு படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #IA24P #Vadivelu
இம்சை அரசன் படத்தில் நடிக்க மறுத்ததால் நடிகர் வடிவேலுவுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.
சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரிக்க முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்தன. இதற்கிடையே சில கருத்து வேறுபாடுகள் காரணமாக வடிவேலு இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக ஷங்கர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தை நாடினார். எனினும் தீர்வு எட்டவில்லை. இந்த நிலையில் தான் வடிவேலுக்கு சினிமாவில் தடை விதிக்கப்பட இருப்பதாக செய்திகள் பரவின. எனினும் வடிவேலு விடாப்பிடியாக இருந்தார்.
இந்த நிலையில், இம்சை அரசன் படக்குழுவுக்கும், வடிவேலுவுக்கும் இடையே சுமூகம் ஏற்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது மதுரையில் இருக்கும் வடிவேலு, படப்பிடிப்புக்காக சென்னை வர சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக படப்பிடிப்புக்காக சென்னையில் பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு துணை நடிகர், நடிகைகளும் ஒப்பந்தமாகினர். வடிவேலுவின் விடாப்பிடியால் அனைவரும் தேதியை ஒதுக்கிட்டு தவித்தனர்.
இந்த நிலையில், பிரச்சனை முடிவுக்கு வந்திருப்பதால் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு குறித்த நேரத்தில் தொடங்கும் பட்சத்தில் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IA24P #Vadivelu
இம்சை அரசன் பட விவகாரத்தில் வடிவேலு பிடிவாதமாக இருப்பதால் வடிவேலு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், இதுகுறித்து வடிவேலு விளக்கம் அளித்துள்ளார். #ImsaiArasan #Vadivelu
இயக்குனர் சங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. இவர்கள் கூட்டணியில் 2007-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் இது.
சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப் பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவி னருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. பல முறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த பதிலுமே இல்லை. நீண்ட காலமாக இப்பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் சங்கம் விவாதித்து வந்தது .
இறுதியாக இயக்குனர்கள் சங்கம், பெப்சி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினர். இதில் தயாரிப்பாளர் ஷங்கர் மற்றும் வடிவேலு தரப்பிலிருந்து அவருடைய மேலாளர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து, ‘வடிவேலு எந்தவித நிபந்தனையுமின்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டு முடித்து கொடுக்க வேண்டும் அல்லது இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை மற்றும் சம்பளத் தொகை அனைத்தும் சேர்த்து வட்டியுடன் அளிக்க வேண்டும்’ என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்த முடிவால் வடி வேலு தரப்பினர் அதிர்ச் சியடைந்தனர். தன்னுடைய நிலை குறித்து தயாரிப்பாளர் சங்கத்துக்குக் வடிவேலு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
“இம்சை அரசன் 24 ம் புலிகேசியில் நடிக்க 2016-ம் ஆன்டு ஜூன் 1-ந்தேதியில் ஒப்புக் கொண்டேன். அதே ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் படத்தை முடித்து விடுவதாகவும், அதுவரை வேறெந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால், வேறு படங் களில் நடிப்பதை தவிர்த்தேன்.
ஆனால், டிசம்பர் 2016 வரை படத்தைத்தொடங்காமலே காலம் தாழ்த்தினர். தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலின் நலன் கருதி, அதன்பிறகும் பல்வேறு தேதிகளில் அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தேன்.
இந்நிலையில், என்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரை தயாரிப்பு நிறுவனம் நீக்கியது. அத்துடன், எனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தை கொடுத்து, ஏதோ எனக்கு இந்த ஒரு படத்தின் மூலம்தான் சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.
நான் நடித்துத் தர மறுத்திருந்தால், பட நிறுவனம் டிசம்பர் 2016-க்குள் ஏன் புகார் தரவில்லை? ஒப்பந்தக் காலம் முடிந்து ஒரு வருடத்திற்கு பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, 2016-2017ம் ஆண்டுகளில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக் கொள்ளாமல் இருந் தேன். இதனால் எனக்கு பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டது.
பொருளாதார, குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் மேற் கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.
‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை தற்போது மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. படத்துக்கு செலவழித்த 9 கோடி ரூபாயை அளிக்க வேண்டும் என்று தயாரிப் பாளர் சங்கம் சொன்னதற்கு, வடிவேலு தரப்பில் எந்த ஒரு பதிலுமே வரவில்லை.
இதனைத் தொடர்ந்து, ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படப்பிரச்சினையை முடிக் கும்வரை, வடிவேலுவை வைத்து எந்த ஒரு தயாரிப் பாளரும் படம் பண்ண வேண்டாம் என்று அறிவுறுத் தியுள்ளது.
வடிவேலுவுக்கு தயாரிப் பாளர் சங்கம் சினிமாவில் நடிக்க தடை விதித்ததாக கடந்த சில தினங்களாக செய்திகள் வந்தன. இதுகுறித்து வடிவேலுவின் பதில் அறிய அவரை தொடர்புகொண்டபோது அவர் ‘அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வர வில்லை. யாரோ கிளப்பி விட்ட வதந்தி இதுதொடர்பாக எனக்கு இதுவரை எந்த நோட்டீசும் வரவில்லை’ என்றார். #ImsaiArasan #Vadivelu
இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பிறகு படத்தில் நடிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து வரும் வடிவேலுக்கு சினிமாவில் தடை விதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vadivelu #IA24P
வடிவேலு கொடுத்த குடைச்சலால் பாதியில் நின்ற இம்சை அரசன் பார்ட் 2 வின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் வடிவேலு இறங்கி வந்து இருப்பதாகவும் நேற்று தகவல் வெளியானது.
இதனை இம்சை அரசன் படக்குழு மறுத்துள்ளது. வடிவேலு இன்னும் பிடிவாதம் பிடித்தே வருகிறார். பிரச்சினை தயாரிப்பாளர் சங்கத்திடம் சென்று இருக்கிறது.
சங்க நிர்வாகிகளுக்கும் வடிவேலு சரியான பதில் அளிக்கவில்லை. எனவே வடிவேலு நடிக்க தடை என்று ரெட்கார்டு போடப்படுவது உறுதி. ஏற்கனவே வடிவேலு நடிப்பதாக இருந்த படங்களில் இருந்தும் அவர் கழற்றிவிடப்பட்டு விட்டார்’ என்று கூறுகிறது படக்குழு.
வடிவேலு மீது ரெட்கார்டு போடப்பட்டால் அவரது சினிமா வாழ்க்கையே முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கவலை தெரிவிக்கின்றனர் சினிமா ரசிகர்கள். #IA24P #ImsaiArasan
இம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க வடிவேலு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. #IA24P #ImsaiArasan
ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. சிம்புத்தேவன் இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் தயாரிக்க ஷங்கர் திட்டமிட்டு அதில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்தார்.
இந்த படத்துக்காக சென்னை அருகே சுமார் ரூ.7 கோடி செலவில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை சிம்புத்தேவன் தொடங்கினார். ஆனால் திரைக்கதையில் தலையிடுவதாகவும், படக்குழுவினர் கொடுத்த உடைகளை அணிய மறுப்பதாகவும் வடிவேலு மீது புகார் கூறப்பட்டன. சிம்புத்தேவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்புக்கு செல்வதை வடிவேலு நிறுத்திக்கொண்டார்.
இதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இயக்குனர் ஷங்கர் புகார் அளித்தார். நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி வடிவேலுவிடம் விளக்கம் கேட்டது.
பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த இறுதி முடிவில் வடிவேலு ஒன்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் அல்லது, அரங்கு அமைக்க ஆன செலவு, அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் என வட்டியுடன் மொத்தமாக ரூ.9 கோடியை வடிவேலு திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்தது.
இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள வடிவேலு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடிவேலு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #IA24P #ImsaiArasan #Vadivelu
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X