search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "China tensions"

    அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அதிகரித்துவரும் வரிவிதிப்பு தொடர்பான மோதல் போக்கு உலக பொருளாதாரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. #IMFchief #USChina #USChinatensions #worldeconomy
    பாரிஸ்:

    அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் இறக்குமதி வரியை உயர்த்தி வருகின்றன.

    இதை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஸ ஜின்பிங்கும் கடந்த டிசம்பரில் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது.



    இதற்கிடையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக வரியை  அமெரிக்கா, உயர்த்தி உள்ளது. இதன் மூலம் சீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று  முன்தினம் அறிவித்தார். சுமார் 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த புதிய வரிவிதிப்பு முறை வரும் 10-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.) அமைப்பின் தலைவர் கிறிஸ்ட்டைன் லகர்டே, ‘அமெரிக்கா, சீனா இடையில் வரிவிதிப்பு தொடர்பாக அதிகரித்துவரும் மோதல் போக்கு உலக பொருளாதாரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்’ என குறிப்பிட்டுள்ளார். #IMFchief  #USChina  #USChinatensions #worldeconomy
    ×