search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chinese Communist Party"

    • பாஜகவின் அரசியல்வாதிகள் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் 12 சந்திப்புகள் நடத்தியுள்ளனர்.
    • எதற்காக பாஜகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் ஏன் தொடர்ச்சியாக சந்தித்து கொண்டன.

    பாஜகவுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்ன உறவு உள்ளது என்று காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்காக பல கேள்விகள் கேட்டுள்ளது.

    இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

    "2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் மோடி அதை கண்டுகொள்வது கூட இல்லை. சீனாவை எதிர்த்து நிற்க பாஜக ஏன் விரும்பவில்லை என்று இந்திய மக்கள் கேட்கிறார்கள்.

    பா.ஜ.க.வுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்புகள் இதன் பின்னணியில் உள்ளதா?

    2008 ஆம் ஆண்டு முதல் பாஜகவின் அரசியல்வாதிகள் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் குறைந்தது 12 சந்திப்புகள் நடத்தியுள்ளனர். இந்த சந்திப்புகள் பெரும்பாலும் சீனாவில் நடந்துள்ளது.

    இந்த சந்திப்புகளில் என்ன பேசப்பட்டது. எதற்காக பாஜகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் ஏன் தொடர்ச்சியாக சந்தித்து கொண்டன.

    2017 ஜூன் மாதத்தில் டோக்லாமில் எல்லை மோதல்கள் நடந்த அதே மாதத்தில் பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஏன் சந்தித்து கொண்டனர்.

    இந்த சந்திப்புகளில் என்ன பேசப்பட்டது என்பதை வெளியிட வேண்டும்" என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

    அண்மையில் பிரதமர் மோடியை சீனா பிளாக்மெயில் செய்து வருகிறது என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்திருந்தார்.

    "நம்மிடம் உள்ள ராணுவ வலிமையால் சீனா ஆக்கிரமித்த இந்திய பகுதிகளை எளிதில் கைப்பற்றிவிடலாம். ஆனால் பிரதமர் மோடி அதை செய்வதில்லை. காரணம் என்னவென்றால் பிரதமர் மோடியை சீனா பிளாக்மெயில் செய்து வருகிறது.சீனா பிரதமர் மோடியை பிளாக்மெயில் செய்வதற்கான காரணத்தை தேர்தலுக்குப் பிறகு வெளிப்படுத்துவேன்' என சமீபத்திய பேட்டியில் சுப்ரமணிய சாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×