search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chocolate Recipes"

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட் மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய அதிக நேரம் ஆகாது.

    தேவையான பொருட்கள்

    தேங்காய்த் துருவல், இனிப்பில்லாத கோவா - தலா 1/2 கப்,

    கேரட் துருவல் - 1 கப்,

    சர்க்கரை - 2 கப்,

    ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,

    நெய் - 1 டேபிள்ஸ்பூன்,

    அலங்கரிக்க :

    பிஸ்தா, பாதாம் - சிறிது.

    செய்முறை

    கடாயில் நெய் ஊற்றி கேரட் சேர்த்து மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக வதக்கி, ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.

    பிஸ்தா, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீண்டும் அதே கடாயில் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

    சர்க்கரை கரைந்து வரும்போது கேரட் துருவல் போட்டு வதக்கி சுருண்டு வரும்போது கோவா துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி பர்ஃபி பதத்திற்கு வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி அதன் மேல் பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தாவை கொட்டி நன்றாக அழுத்தி விடவும். ஆறியதும் துண்டுகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

    இப்போது ராஜஸ்தான் ஸ்பெஷல் கேரட் கோவா பர்ஃபி ரெடி.

    குறிப்பு: நெய் தேவையானால் 1 டீஸ்பூன் கடைசியாக சேர்க்கலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    குழந்தைகளுக்கு சாக்லேட், பிஸ்கட் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த வகையில் இது இரண்டையும் வைத்து சூப்பரான மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    குளிர்ச்சியான பால் - 2 கப்
    சாக்லேட் கிரீம் பிஸ்கட் பாக்கெட் - 1
    கிரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட் - 1
    சாக்லேட் சாஸ் - 2 டீஸ்பூன்
        
    செய்முறை:

    முதலில் மிக்ஸியில் பாலை ஊற்றி, அத்துடன் கிரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின் அதில் கிரீம் உள்ள சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் சாக்லேட் சாஸ் சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால், சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக் ரெடி.

    இந்த மில்க் ஷேக்  குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • சாக்லேட் பால்ஸ் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ரிச்சான ரெசிபி.
    • அளவான பொருட்களை வைத்து அதிரடியாக செய்யக்கூடிய ரெசிபி இது.

    தேவையான பொருட்கள்

    கோகோ பவுடர் - 25 கிராம்,

    கன்டென்ஸ்டு மில்க் - கால் கப்,

    பட்டர் - ஒரு ஸ்பூன்,

    உப்பு - சிறிது,

    சாக்லேட் பால்களை உருட்ட தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன் (உலர வைத்தது).

    பருப்பு துகள்கள் சாக்லேட் மற்றும் கலர் ஸ்பிரிங்கில்ஸ்.

    செய்முறை

    ஒரு பிளேட்டில் சிறிது வெண்ணெய்யை தடவி வைக்கவும்.

    இன்னொரு பாத்திரத்தில் கன்டென்ஸ்டு மில்க், வெண்ணெய், உப்பு, கோகோ பவுடர் அனைத்தையும் ஒன்றாக கலந்து சூடுபடுத்தவும். மிதமான தீயில் கலவையைக் கலந்து பாகும் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

    இரண்டு நிமிடத்தில் கலவை கட்டியானதும் வெண்ணெய் பூசப்பட்ட தட்டில் மேல் ஊற்றவும்.

    சிறிது ஆற வைத்து இந்த பிளேடை பிரிட்ஜில் வைக்கவும்.

    ஒரு மணி நேரம் கழித்து ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து கையில் வெண்ணெயை தடவி இந்த சாக்லேட் கலவையை உருண்டைகளாக உருட்டவும்.

    இந்த உருண்டையை ஸ்ப்ரிங்கில்ஸ், பருப்பு துகள்கள் மீது உருட்டி எடுத்தால் சுவையான சாக்லேட்ஃபட்ஜ் பால்ஸ் தயார்.

    • குழந்தைகளுக்கு குல்ஃபி என்றால் ரொம்ப பிடிக்கும்.
    • இன்று வீட்டிலேயே குல்ஃபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பால் - 2 கப்

    பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

    சாக்லேட் - 1 கப் (துருவியது)

    சாக்கோ சிப்ஸ் - விருப்பத்திற்கேற்ப

    சர்க்கரை - 1/2 கப்

    பிஸ்தா, பாதாம் - சிறிது (நறுக்கியது)

    செய்முறை :

    * ஒரு பௌலில் பாலை ஊற்றி, அதில் பால் பவுடர் சேர்த்து கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.

    * ஒரு அகன்ற அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

    * அப்படி கொதிக்கும் போது அவ்வப்போது கிளறி விட வேண்டும். இல்லையெனில் அடிபிடித்து விடும். பாலானது சுண்டி சற்று கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

    * சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, அதில் பாதாம், பிஸ்தா மற்றும் துருவிய சாக்லேட்டை போட்டு, சாக்லேட் நன்கு கரையும் வரை கிளறி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.

    * பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும்.

    * 1 மணிநேரம் ஆன பின்னர், அதனை வெளியே எடுத்து மிக்சியில் போட்டு ஒருமுறை நன்கு அடித்து, பின் அதனை குல்ஃபி மோல்ட்டில் ஊற்றி சாக்கோ சிப்ஸ் தூவி, அதன் நடுவே குச்சியை வைத்து, ப்ரீசரில் 6 மணிநேரம் வைத்து எடுத்தால், சாக்லேட் குல்ஃபி ரெடி!!!

    • குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய செலவோ குறைவு. சுவையோ அதிகம்.

    தேவையான பொருட்கள்:

    பேக்கிங் கொக்கோ பவுடர் - ¼ கப்

    சர்க்கரை - 6 டேபிள் ஸ்பூன்

    சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்

    பால் - 1½ கப்

    வெண்ணிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன்

    துருவிய சாக்லேட் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, பேக்கிங் கொக்கோ பவுடர் மற்றும் சோள மாவு ஆகியவற்றை கொட்டி கலக்கவும்.

    பின்பு அதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் நன்றாகக் கரைக்கவும்.

    இந்தக் கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்கவும்.

    கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கிளறவும்.

    பின்னர் அதை கப்களில் ஊற்றி குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும்.

    நன்றாகக் குளிர்ந்ததும் துருவிய சாக்லேட் மேலே தூவி பரிமாறவும்.

    சூப்பரான சாக்லேட் புட்டிங் ரெடி.

    • சாண்ட்விச்சில் பல வெரைட்டிகள் உள்ளன.
    • இன்று சாக்லேட் சாண்ட்விச் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிரெட் - 4 துண்டுகள்

    டார்க் சாக்லேட் துண்டுகள் - 4 டேபிள் ஸ்பூன்

    வெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * முதலில் பிரெட் துண்டுகளை எடுத்து, அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டும் வெண்ணெயை தடவ வேண்டும்.

    * பின் பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தில் சாக்லேட் துண்டுகளை வைத்து, மற்றொரு பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தை மேலே வைத்து மூட வேண்டும்.

    * இதேப் போன்று மற்ற இரண்டு பிரெட் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும்.

    * பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் சிறிது வெண்ணெயை தடவி தயாரித்து வைத்துள்ள சாண்ட்விச்சை வைத்து, லேசாக அழுத்திவிட்டு, பிரெட்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, திருப்பிப் போட்டு டோஸ்ட் செய்ய வேண்டும்.

    * சூட்டில் சாக்லேட் உருகி பிரெட்டில் பரவியதும் எடுத்து விடவும்.

    * இதேப் போல் மற்றொரு சாண்ட்விச்சையும் டோஸ்ட் செய்ய வேண்டும்.

    * இப்போது டேஸ்டியான சாக்லேட் சாண்ட்விச் தயார்.

    • குழந்தைகளுக்கு சாக்லேட் புட்டிங் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • சாக்லேட் புட்டிங் கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.

    தேவையான பொருட்கள்:

    பேக்கிங் கொக்கோ பவுடர் - ¼ கப்

    சர்க்கரை - 6 டேபிள் ஸ்பூன்

    சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்

    பால் - 1½ கப்

    வெண்ணிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன்

    துருவிய சாக்லேட் - தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, பேக்கிங் கொக்கோ பவுடர் மற்றும் சோள மாவு ஆகியவற்றை கொட்டி கலக்கவும்.

    பின்பு அதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் நன்றாகக் கரைக்கவும்.

    இந்தக் கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்கவும்.

    கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கிளறவும்.

    பின்னர் அதை கப்களில் ஊற்றி குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும்.

    நன்றாகக் குளிர்ந்ததும் துருவிய சாக்லேட் மேலே தூவி பரிமாறவும்.

    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • சத்தானது சுவையானது இந்த ஸ்நாக்ஸ்.

    தேவையான பொருட்கள் :

    பேரீச்சம்பழம் - 1/4 கிலோ

    சாக்லேட் - 100 கிராம் அல்லது சாக்லேட் சிறப்பு - 100 மில்லி

    தேங்காய் - 1/2 மூடி

    செய்முறை :

    பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கி மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    தேங்காயை துருவி கொள்ளவும்.

    சாக்லேட்டை உருக்கி கொள்ளவும்.

    உருக்கிய சாக்லேட்டில் பேரீச்சம்பழ விழுது, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    இப்போது சத்தான சுவையான சாக்லேட் பேரீச்சம் பழ லட்டு ரெடி.

    • குழந்தைகளுக்கு இந்த டிரிங் மிகவும் பிடிக்கும்.
    • இந்த டிரிங் செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள் :

    நன்கு கனிந்த பட்டர் ஃப்ரூட் (அவகேடோ) - 2

    கெட்டியான பாதாம் மில்க் - அரை கப்

    கோகோ பவுடர் - அரை கப்

    துருவிய டார்க் சாக்லேட் - கால் கப்

    நாட்டுச் சர்க்கரை - அரை கப்

    அலங்கரிக்க:

    சாக்கோ சிப்ஸ், பழத்துண்டுகள், வீட்டிலேயே செய்த கோதுமை வேஃபல், ஐஸ்க்ரீம் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பிளெண்டரில் போட்டு நான்கு நிமிடங்களுக்கு அடிக்கவும்.

    பிரிட்ஜில் குளிரவைத்து, அழகான டம்ளர்களில் ஊற்றி, அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களில் உங்களுக்கு விருப்பமானவற்றைத் தூவிப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான அவகேடோ சாக்கோ ரெடி.

    • இந்த ஸ்நாக்ஸ் செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
    • இதை 1 வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    வேர்க்கடலை - அரை கப்

    கிரீம் பிஸ்கெட் - 4

    உருகிய டார்க் சாக்லேட் - தேவையான அளவு

    செய்முறை

    வேர்கடலையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

    கிரீம் பிஸ்கெட்டை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் வறுத்த வேர்க்கடலையை போட்டு அரைத்து கொள்ளவும்.

    அரைத்த பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 4 டீஸ்பூன் உருகிய சாக்லேட்டை சேர்த்து நன்றாக கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

    பிடித்த உருண்டைகளை பிரிட்ஜில் 1 மணிநேரம் வைக்கவும்.

    இந்த உருண்டைகளை உருகிய டார்க் சாக்லேட்டில் நன்றாக முக்கி ஒரு தட்டில் வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    இதை மீண்டும் 1 மணிநேரம் பிரிட்ஜில் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான வேர்க்கடலை ஸ்டப்ஃடு சாக்லேட் பால்ஸ் ரெடி.

    • இந்த ஸ்நாக்ஸை பிரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    தேங்காய் துருவல் (Desiccated Coconut) - 1 கப்

    மில்க்மெய்ட் - 1 1/2 கப்

    துருவிய டார்க் சாக்லேட் - தேவையான அளவு

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவலை போட்டு அதனுடன் மில்க்மெய்ட் சேர்த்து நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். எல்லா உருண்டையும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி அதன் மேல் மற்றொரு பாத்திரத்தை வைத்து அதில் துருவிய டார்க் சாக்லேட்டை போட்டு நன்றாக கைவிடாமல் கிளறவும்.

    சாக்லேட் நன்றாக கரைந்து உருக ஆரம்பித்தவுடன் இறக்கி விடவும்.

    இப்போது செய்து வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து சாக்லேட் கலவையில் டிப் செய்து ஒரு பட்டர் பேப்பரில் வைக்கவும். இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் செய்யவும்.

    இதனை பிரிட்ஜில் 30 நிமிடங்கள் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சுவையான தேங்காய் ஸ்டப்ஃடு சாக்லேட் பால்ஸ் ரெடி.

    • குழந்தைகளுக்கு சாக்லேட் சேர்த்த ஸ்நாக்ஸ் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • இன்று சாக்லேட், தேங்காய் சேர்த்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க....

    தேவையான பொருட்கள்

    தேங்காய் துருவல் - 200 கிராம்

    மேரி பிஸ்கட் ( Marie gold biscuits) - 10

    சாக்லேட் பவுடர் - 4 ஸ்பூன்

    வென்னிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்

    கன்டன்ஸ்டு மில்க் - 150 கிராம்

    பால் - அரை கப்

    வெண்ணெய் - 2 டீஸ்பூன் (உருகியது)

    அலங்கரிக்க

    தேங்காய் துருவல் - தேவையான அளவு

    செய்முறை

    * மேரி பிஸ்கட்டை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் பொடித்த பிஸ்கட் தூள், சாக்லேட் பவுடர், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    * ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் அதில் கலந்து வைத்துள்ள பிஸ்கட் கலவையை சேர்த்து அதனுடன் கன்டன்ஸ்டு மில்க், உருக்கிய வெண்ணெய், வென்னிலா எசன்ஸ், பால் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.

    * இந்த கலவை நன்றாக சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஆறவிடவும்.

    * ஆறிய மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து தேங்காய் துருவலில் பிரட்டி வைக்கவும்.

    * இதை பிரிட்ஜில் வைத்து செட் ஆனவுடன் எடுத்து பரிமாறவும்.

    * அருமையான சாக்லேட் தேங்காய் பால்ஸ் ரெடி.

    இதை பிரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

    ×