என் மலர்
நீங்கள் தேடியது "Chocolate Recipes"
- சாண்ட்விச் பலரது பசியைப் போக்கும் நல்ல ஸ்நாக்ஸாக உள்ளது.
- குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சாண்ட்விச் தான் சாக்லேட் சாண்ட்விச்.
தேவையான பொருட்கள்:
பிரெட் - 6 துண்டுகள்
டார்க் சாக்லேட் துண்டுகள் - தேவையான அளவு
வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
டார்க் சாக்லேட் துண்டுகளை துருவிக்கொள்ளவும்.
பிரெட் துண்டுகளை எடுத்து, அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டும் வெண்ணெயை தடவ வேண்டும்.
பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தில் சாக்லேட் துருவலை வைத்து, மற்றொரு பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தை மேலே வைத்து மூட வேண்டும்.
இதேப் போன்று மற்ற 3 பிரெட் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சிறிது வெண்ணெயை தடவி தயாரித்து வைத்துள்ள சாண்ட்விச்சை வைத்து, கரண்டியால் லேசாக அழுத்திவிட வேண்டும். பிரெட்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, திருப்பிப் போட்டு டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்தால் தான் உள்ளே இருக்கும் சாக்லேட் உருகி பிரெட் முழுவதும் படரும்.
இதேப் போல் மீதமுள்ள சாண்ட்விச்சையும் டோஸ்ட் செய்ய வேண்டும்.
இப்போது சூப்பரான சாக்லேட் சாண்ட்விச் தயார்.
- குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்
- இன்று ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
மில்க் பிஸ்கட் - 12
கோகோ பவுடர் - 3 தேக்கரண்டி
கன்டன்ஸ்டு மில்க் - 1/4 டின்
கேக் ஸ்பிரிங்க்ஸ் - 1/4 கப்
பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல் - 1/4 கப்
செய்முறை
* பிஸ்கட்டுகளை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
* பொடித்த பிஸ்கட் தூளுடன் கோகோ பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* அதனுடன் கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து அழுத்தி பிசையாமல் விரல்களால் மிருதுவாக ஈரப்பதமாக பிசைந்து கொள்ளவும்
* சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்கவும்.
* சில உருண்டைகளை ஸ்பிரிங்கிஸ்ஸில் பிரட்டி எடுக்கவும். டேஸ்டி பிஸ்கட் சாக்லேட் பால்ஸ் ரெடி.. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
பிஸ்கட் சாக்லேட் பால்ஸ்
- குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று தோசையில் சாக்லேட் சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 1 கப்
சாக்லேட் சிரப் - 1/4 கப்
நெய் - 4 ஸ்பூன்
முந்திரி - தேவையான அளவு
திராட்சை - தேவையான அளவு
பாதாம் - தேவையான அளவு
செர்ரி பழம் - தேவையான அளவு
வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசையாக ஊற்றவும்.
அதன் மேல் வெண்ணெயை தடவவும்.
அடுத்து அதன் மேல் சாக்லேட் சிரப்பை ஊற்றி வேக விடவும்.
அடுத்து அதன் மேல் முந்திரி, திராட்சை, பாதாம், செர்ரி பழத்தை தூவவும்.
இந்த தோசையை திருப்பி போட கூடாது. அப்படியே ரோல் செய்யவும்.
பிறகு சிறிய துண்டுகளாக கட் செய்து அதன் மேல் சாக்லேட் சிரப்பை ஊற்றி பரிமாறலாம்.
எளிதில் செய்யக்கூடிய சாக்லேட் தோசை தயார்
- குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்.
- வீட்டிலேயே சாக்லேட் பர்ஃபி செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள்:
பால் பவுடர் - 1/4 கப்
கோகோ பவுடர் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1/3 கப்
தண்ணீர் - 1/4 கப்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி, பாதாம் - தேவையான அளவு
செய்முறை :
அச்சு தட்டில் நெய் தடவி தயாராக வைக்கவும்.
முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், கோகோ பவுடர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சக்கரையுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் .
ஒரு நூல் பதம் வந்ததும் முன்பே கலக்கி வைத்துள்ள பால் பவுடர் கலவையை சேர்த்து கலக்கவும். இதனை மிதமான சூட்டில் இடைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும் இல்லையேல் அடிபிடித்து விடும்
இதனுடன் நெய் சேர்த்து கிளறி ஓரங்களில் ஒட்டாமல் ஒன்று திரண்டு வரும் பொழுதுமுன்பு நெய் தடவி வைத்துள்ள தட்டில் ஊற்றி நறுக்கிய பாதாம், முந்திரியை மேலே தூவி அலங்கரிக்கவும். பாதாம், முந்திரியை லேசாக தட்டி விடவும் அப்பொழுது தான் சாக்லேட் துண்டுகளில் நன்றாக ஒட்டிக் கொள்ளும். சிறிது ஆறியவுடன் கத்தி கொண்டு வில்லைகள் போடவும்.
இப்போது சுவையான சாக்லேட் பர்ஃபி தயார்
பால் - 2 கப்
பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
சாக்லேட் - 1 கப் (துருவியது)
சர்க்கரை - அரை கப்

செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும், அத்துடன், பால் பவுடர் சேர்த்து கரண்டியில் கலந்து கொண்டே இருக்கவும்.
பிறகு, ஒரு அடிகனமான வாய் அகண்ட வாணலியை அடுப்பில் வைத்து, பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
பால் அடிப்பிடிக்காத வகையில் கிளறிக்கொண்டே இருக்கவும்.
பால் சுண்டி சற்று கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்..
சர்க்கரை நன்றாக கரைந்ததும், அதில் பாதாம், பிஸ்தா சேர்க்கவும்.
அத்துடன், சாக்லேட் சேர்த்து அது நன்றாக கரையும் வரை கிளறி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.
இதனை ஒரு பேனில் ஊற்றி, 1 மணிநேரம் பிரிட்ஜில வைக்கவும்.
பின்னர், இதனை எடுத்து மிக்சியில் போட்டு ஒருமுறை நன்கு அடித்து இந்த கூழை குல்பி மோல்டில் ஊற்றி, அதன் நடுவே குச்சியை வைத்து, மீண்டும் பிரிட்ஜ் பிரீசரில் வைத்து சுமார் 5 மணி நேரம் கழித்து எடுக்கவும்.
பால் - 1 கப்
கோகோ பவுடர் - 1 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை பவுடர் - 1/4 டீஸ்பூன்
சர்க்கரை - சுவைக்கேற்ப
உருகிய சாக்லேட் - 2 டீஸ்பூன்

செய்முறை :
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து குறைவான தீயில் பால் ஊற்றி சர்க்கரை போட்டு கரையும் வரை கிளறி விடவும்.
ஒரு கிளாஸில் கோகோ, உருகிய சாக்லேட் சேர்த்து நன்கு கலக்கவும்.
1 டீஸ்பூன் சூடான பாலை சாக்லேட்டில் கலந்து நன்கு ஸ்மூத்தாக கலந்து விடவும். அதன் மேலாக நுரை வர பாலை காய்ச்சி அதில் ஊற்ற வேண்டும்.
இறுதியாக, இலவங்கப்பட்டை பவுடர், துருவிய சாக்லேட் போட்டு சூடான ஹாட் சாக்லேட்டை பரிமாறவும்..
சூடான ஹாட் சாக்லேட் ரெடி
சாக்லேட் பார் துருவியது - 1 கப்,
மைதா - 2 கப்,
பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை :
பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன், சர்க்கரை, உப்பு, வெண்ணெய் சேர்த்து சற்று தளர பிசைந்து எண்ணெய் தடவி ஈர துணி போட்டு மூடி 2 மணி நேரம் வைக்கவும்.
பின்னர் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் சாக்லேட் துருவல் வைத்து மூடி, மெதுவாக பரோட்டாவாக திரட்டி வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த பரோட்டாவை தோசைக்கல்லில் போட்டு இருபக்கமும் நெய் விட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
சூப்பரான சாக்லேட் ஸ்டஃப்டு பரோட்டா ரெடி.