search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chopper case"

    ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் ராஜீவ் சக்சேனா அப்ரூவர் ஆவதில் ஆட்சேபனை இல்லை என கோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. #RajeevSaxena
    புதுடெல்லி:

    மிக முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்கள் (அகஸ்டாவெஸ்ட்லேண்ட்) வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ.3,600 கோடி முறைகேடாக பணபரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் இடைத்தரகராக செயல்பட்ட ராஜீவ் சக்சேனா கைது செய்யப்பட்டு, சமீபத்தில் உடல்நலக்குறைவால் ஜாமீன் பெற்றுள்ளார்.

    கடந்த 6-ந்தேதி நீதிபதி அறையில் நடந்த ரகசிய விசாரணையில் சக்சேனா அப்ரூவராக விரும்புவதாக வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம் வழக்கை விசாரித்துவரும் சிறப்பு நீதிபதி அரவிந்த்குமாருக்கு அனுப்பப்பட்டது. டெல்லி கோர்ட்டு இதுபற்றி அமலாக்கத்துறையின் கருத்தை கேட்டது. கோர்ட்டில் இன்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ராஜீவ் சக்சேனா அப்ரூவர் ஆவதில் ஆட்சேபனை இல்லை. அது அமலாக்கத்துறைக்கு உதவியாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வருகிற 25-ந்தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
    அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் ஊழலில் ரூ.150 கோடி காங்கிரஸ் தலைவர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். #YogiAdityanath #BJP
    லக்னோ:

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் ரூ.3,700 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதில் ரூ.360 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது. இதில் ரூ.150 கோடி காங்கிரஸ் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    அகஸ்டாவெஸ்ட்லேண்ட் அதிகாரிகள் ஏற்கனவே இத்தாலி கோர்ட்டால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் இத்தாலிக்கு வெளியே உள்ளதாகவும் கோர்ட்டு கூறியுள்ளது. அப்படியென்றால் அவர்கள் யார்? இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், சோனியாகாந்தி பெயரை குறிப்பிட்டதன் மூலம் காங்கிரஸ் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளது நிரூபணமாகிறது.



    அனைத்து ராணுவ ஒப்பந்தங்களிலும் காங்கிரஸ் ஊழலில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் பிரச்சினையில் அதன் முகமூடி அவிழ்க்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மக்கள் உண்மையை உணர்ந்து வருகிறார்கள். அவர்கள் காங்கிரசுக்கு தண்டனை வழங்குவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #YogiAdityanath #BJP
    ×