என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Chopper crashes"
- ஈரான் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரெய்சி கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
- மோசமான வானிலையால் விபத்து நிகழ்ந்தது என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்தது.
டெஹ்ரான்:
மறைந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் வெளியுறவு மந்திரி உசைன் அமீர் அப்துல்லாயன் உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். கடும் பனி சூழ்ந்த வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்தது என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்தது.
இதற்கிடையே, லெபனானில் கடந்த வாரம் பேஜர் மற்றும் வாக்கி டாக்கி கருவிகளால் ஏற்பட்ட வெடிப்பு சம்பவங்களில் சுமார் 40 பேர் பலியாகினர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஈரான் முன்னாள் அதிபரான இப்ராகிம் ரெய்சியும் பேஜர் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார் என அந்நாட்டு எம்.பி.யான அகமது பக்ஷயேஷ் அர்தேஸ்தானி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அகமது கூறுகையில், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஒரு பேஜரை பயன்படுத்தினார். அவர் பயன்படுத்திய பேஜரின் வகை ஹிஸ்புல்லா படைகளிடம் இருந்து வேறுபட்டதாக இருக்கலாம். இருப்பினும், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான சாத்தியமான காட்சிகளில் ஒன்று அவரது பேஜர் வெடித்திருக்கலாம். பேஜர்களை வாங்குவதில் ஈரான் பங்கு வகித்துள்ளது. ஈரானியப் படைகள் நிச்சயமாக ஹிஸ்புல்லாக்கள் பேஜர்களை வாங்குவதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. எனவே, எங்கள் சொந்த புலனாய்வு அமைப்புகளும் இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நேபாள நாட்டில் சமாகான் என்ற இடத்தில் இருந்து நேற்று காலை 7.40 மணிக்கு தலைநகர் காட்மாண்டு நோக்கி ஆல்டிடியூட் ஏர் ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் ஒரு நோயாளியும், மேலும் 5 பயணிகளும் இருந்தனர். நிஷால் என்ற விமானி ஹெலிகாப்டரை ஓட்டினார்.
காலை 8 மணிக்கு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை அந்த ஹெலிகாப்டர் இழந்தது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201809090229484140_1_y1d7r0nt._L_styvpf.jpg)
இந்த ஹெலிகாப்டர் காலை 8.18 மணிக்கு காட்மாண்டு போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டது.
இந்த நிலையில், அந்த ஹெலிகாப்டர் தாடிங், நுவாகாட் மாவட்டங்களையொட்டிய அடர்ந்த காட்டில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இந்த கோர விபத்தில், விமானி நிஷால் உள்ளிட்ட 6 பேர் பலியாகினர்.
உடனடியாக அங்கு மீட்பு படையினர் ராணுவ ஹெலிகாப்டரிலும், ஒரு தனியார் ஹெலிகாப்டரிலும் விரைந்தனர். லோ அனி டோல்மா என்ற பெண் பயணி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பலியான 6 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. விசாரணை நடத்தப்படுகிறது. #Choppercrashes #NepalChoppercrash