search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chowkidar"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, 'மோடியுடன் நீங்கள், உங்களுடன் மோடி' என்ற முழக்கத்தை அறிமுகப்படுத்தினார்.
    • இன்று இந்திய தேசம் முழுவதும் உரத்த குரலில் 'நான் மோடியின் குடும்பம்' என்று கூறுகிறது என்று தெரிவித்தார்.

    உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் தங்களது X கணக்கில், 'மோடியின் குடும்பம்' என்ற வாசகத்தை இணைத்துள்ளனர்.

    முன்னதாக தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, 'மோடியுடன் நீங்கள், உங்களுடன் மோடி' என்ற முழக்கத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் இன்று இந்திய தேசம் முழுவதும் உரத்த குரலில் 'நான் மோடியின் குடும்பம்' என்று கூறுகிறது என்று தெரிவித்தார்.

    இதே போல் 2019 மக்களவை தேர்தலிலும் சவுக்கிதார் மோடி என்ற வாசகத்தை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பாஜகவினர் சேர்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    அதில் உரையாற்றிய லாலு பிரசாத் யாதவ்,"நரேந்திர மோடிக்கு ஒரு குடும்பம் இல்லை. ராமர் கோயிலின் பெருமையை பேசும் மோடி முதலில் இந்து கிடையாது. அவரது தாய் இறந்தபோது அவர் மொட்டையடிக்கவில்லை. எனவே, அவர் இந்துவாக இருக்க முடியாது" என தெரிவித்திருந்தார்;

    பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்று லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்த நிலையில், நான் மோடியின் குடும்பம் என்ற வாசகத்தை பாஜகவினர் இன்று தனது X கணக்கில் இணைத்துள்ளனர்.


    நாட்டின் காவலாளி என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருடன் இருந்த ‘சவுக்கிதார்’ என்ற அடைமொழியை இன்று நீக்கினார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தன்னை நாட்டின் இந்த முதல் சேவகன் என்று முன்னர் தெரிவித்திருந்தார். பின்னர், நாட்டின் காவலாளி என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருடன் ‘சவுக்கிதார்’ என்ற அடைமொழியை இணைத்திருந்தார்.

    அவரை தொடர்ந்து மத்திய மந்திரிகள், பாஜக ஆட்சி செய்யும் பல்வேறு மாநிலங்களின் முதல் மந்திரிகள், பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘சவுக்கிதார்’ என்ற அடைமொழியை இணைத்திருந்தனர்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இரண்டாவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.



    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருடன் இருந்த ‘சவுக்கிதார்’ என்ற அடைமொழியை இன்று நீக்கினார்.

    இதுதொடர்பாக, அவர் இன்று மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரு பதிவுகளில் ‘ஜாதியவாதம், மதவாதம், ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி போன்ற தீமைகளுக்கு எதிராக இந்த நாட்டை பாதுகாக்கும் சக்திவாய்ந்த அடையாளமாக சவுக்கிதார் என்னும் சொல் உருவாகி விட்டது.

    தற்போது சவுக்கிதார் என்னும் சொல்லின் உத்வேகத்தை அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்லும் நேரம்  வந்து விட்டது. இந்த உத்வேகத்தை எல்லா வேளைகளிலும் உயிர்ப்புடன் வைத்திருந்து நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டியுள்ளது.

    எனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து சவுக்கிதார் என்னும் சொல் விடைபெற்று என்னுள் உறைந்திட்ட ஒரு பகுதியாகிறது. நீங்களும் அவ்வாறே செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
    நாட்டின் காவலாளியான பிரதமர் மோடி 100 சதவீதம் திருடன் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். #Chowkidar #Chowkidaristhief #Rahul
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பங்கேற்று பேசினார்.

    தனது பேச்சினிடையே ரபேல் ஊழல் விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய ராகுல், ‘இந்த நாட்டின் காவலாளி என்று தன்னை கூறும் மோடி 100 சதவீதம் திருடன் என்று நான் குற்றம்சாட்டுகிறேன்.

    30 ஆயிரம் கோடி ரூபாயை திருடி தனது திருட்டு நண்பன் அனில் அம்பானிக்கு அவர் கொடுத்து விட்டார்.



    நிரவ் மோடி, மெகுல் சோக்சி, லலித் மோடி, விஜய் மல்லையா, அனில் அம்பானி, நரேந்திர மோடி என்று ஒரு திருட்டுக் கூட்டமே உருவாகியுள்ளது.

    என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. நிரவ் மோடி ஆகட்டும், லலித் மோடி ஆகட்டும், நரேந்திர மோடி ஆகட்டும், எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்? இன்னும் இதைப்போல் எத்தனை மோடி வரப்போகிறார்களோ நமக்கு தெரியாது’ என குறிப்பிட்டார். #Chowkidar #Chowkidaristhief #Rahul 
    நாடு முழுவதும் 25 லட்சம் காவலாளிகளிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். #PMModi #Chowkidar
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தன்னை நாட்டின் காவலாளி (சவுகிதார்) என்று அழைத்து வருகிறார். ஆனால், ரபேல் விவகாரத்தில் காவலாளிதான் திருடன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரை விமர்சித்து வருகிறார்.

    எனவே, அவருக்கு பதிலடியாக, ‘நானும் காவலாளிதான்’ என்ற பிரசாரத்தை நடத்துமாறு பா.ஜனதாவினருக்கு மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி, அவர் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பா.ஜனதா தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் தங்கள் பெயருக்கு முன்னால் ‘சவுகிதார்’ என்று சேர்த்துக்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும், வாட்ச்மேன்களாக பணியாற்றும் சுமார் 25 லட்சம் காவலாளிகளிடையே (வாட்ச்மேன்) இன்று உரையாற்றுகிறார். ஆடியோ வசதியில் அவர் பேசுகிறார். ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், ‘நானும் காவலாளிதான்’ பிரசாரத்தில் இணைந்த பொதுமக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சி, 31-ந் தேதி நடக்கிறது. 500 இடங்களில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இத்தகவல்களை பா.ஜனதா ஊடகப்பிரிவு பொறுப்பாளர் அனில் பலுனி தெரிவித்தார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வழக்கம்போல், பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

    அருணாசலபிரதேசம் இடா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:-

    ரபேல் விவகாரத்தில், இந்த நாட்டின் காவலாளி அம்பலப்படுத்தப்பட்டார். நாட்டின் காவலாளியே, திருடனாக மாறும்போது நாடு எப்படி முன்னேறும்?

    நீங்களே எல்லாவற்றையும் திருடும்போது, ஏன் உங்கள் கட்சி தலைவர்களையும் ‘காவலாளி’ ஆக்கினீர்கள்?

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
    ‘சவுகிதார்’ என்று தங்கள் பெயரின் முன்னால் பாஜகவினர் போட்டுள்ளதைப்போல் பப்பு என்ற ராகுல் காந்தியின் பட்டப்பெயரை காங்கிரசார் சேர்த்துக் கொள்ளுங்கள் என அரியானா மந்திரி குறிப்பிட்டுள்ளார். #AddPappu #HaryanaMinister #Congressworkers #AnilVij #Chowkidar
    சண்டிகர்:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். ‘காவலாளி ஒரு திருடன்’ என்று விமர்சித்தார்.
     
    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன்தான்’ என்கிற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார்.

    மேலும் அந்த பதிவில் ‘‘உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார். நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    தனது டுவிட்டர் பக்கத்தின் பெயரையும் பிரதமர் மோடி மாற்றியுள்ளார். (சவுகிதார்) ‘காவலன் நரேந்திர மோடி’ என்று மாற்றம் செய்துள்ளார்.

    இதேபோல் பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள், பாஜகவை சேர்ந்த முதல் மந்திரிகள், மாநில மந்திரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பாஜக பிரமுகர்களும் தங்களது டுவிட்டர் கணக்குகளில் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘காவலாளி’ (சவுகிதார்) என்ற அடைமொழியை இணைத்துள்ளனர். இதை காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜகவை சேர்ந்த அரியானா மாநில மந்திரி அனில் விஜ் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரசாருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்களுக்கு பிடித்திருப்பதால் எங்கள் பெயர்களுக்கு முன்னால் சவுகிதார் என்னும் அடைமொழியை நாங்கள் சேர்த்திருக்கிறோம்.



    உங்களுக்கும் தேவைப்பட்டால் ‘பப்பு’ (மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர் 'ஏதுமறியாத சிறுவன்' என்பதை குறிக்கும் வகையில் சில வேளைகளில் ராகுல் காந்தியை ‘பப்பு’ என்று குறிப்பிடுவதுண்டு) என்ற அடைமொழியை உங்கள் பெயர்களுக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை’ என தெரிவித்துள்ளார். #AddPappu #HaryanaMinister #Congressworkers #AnilVij #Chowkidar
    விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படக்குழு சமீபத்தில் வெளியிட்ட போஸ்டரில் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களை கிண்டல் செய்துள்ளது. #WatchMan #GVPrakashKumar
    பிரதமர் மோடி தனது டுவிட்டரில் காவலாளி நரேந்திர மோடி என பெயரை மாற்றினார். அவர் நேற்று வெளியிட்ட பதிவில் இருந்த நானும் காவலாளிதான் என்ற வீடியோ டுவிட்டரில் நம்பர் ஒன் டிரண்டிங்காக இருந்தது.

    இதை தொடர்ந்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, பியூஷ் கோயல், ஜே.பி. நட்டா, ஹர்ச வர்த்தன், தர்மேந்திர பிரதான் ஆகியோர் தங்கள் பெயர்களுக்கு முன்னால் சவுகிதார்(காவலாளி) என்ற பெயரை சேர்த்தனர்.



    இதற்கு நாடு முழுக்க வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பின. இந்நிலையில் பா.ஜனதா தலைவர்களின் இந்த செயலை கிண்டல் செய்யும் வகையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தின் போஸ்டரில் நாய் ‘நானும் காவலாளிதான்’ என்று சொல்வது போல் வெளியிடப்பட்டுள்ளது.

    வாட்ச்மேன் என்ற அந்த படத்தில் ஜி.வி.பிரகாசுடன், அந்த நாயும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறது. படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த போஸ்டருக்கு பா.ஜனதா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். #WatchMan #GVPrakashKumar #Chowkidar 

    ×