என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chris Evans"

    • பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர்' வெப் தொடரில் கேப்டன் அமெரிக்காவாக ஆண்டனி மெக்கீ நடித்திருந்தார்.
    • டீசரில் இறுதியில் வரும் ரெட் ஹல்க் கதாபாத்திரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

    2011 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் அமெரிக்கா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனையடுத்து, அப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்து வெற்றி பெற்றது.

    கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் பல ஆண்டுகளாக நடித்து வந்த க்றிஸ் எவான்சின் ஒப்பந்தம் 2019 ஆண்டு முடிவடைந்தது. இதனையடுத்து, 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் எண்டுகேம் படத்தில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரம் தன்னுடைய பொறுப்பை தன் நண்பர் ஃபால்கன்/ஆண்டனி மெக்கீயிடம் ஒப்படைப்பதை போல முடித்திருந்தனர்.

    அதன் பின்னர் பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர்' வெப் தொடரில் கேப்டன் அமெரிக்காவாக ஆண்டனி மெக்கீ நடித்திருந்தார்.

    தற்போது ஆண்டனி மெக்கீ நடிப்பில் கேப்டன் அமெரிக்கா: ப்ரேவ் நியூ வேர்ல்ட்' என்ற படம் உருவாகியுள்ளது. நேற்று வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. .

    இந்த டீசரில் இறுதியில் வரும் ரெட் ஹல்க் கதாபாத்திரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. காமிக்ஸை பொறுத்தவரை ஹல்க்கை அழிப்பதற்காக தண்டர்போல்ட் ராஸ் ரெட் ஹல்க் ஆக மாறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    மார்வல் ஸ்டூடியோஸ் சார்பில் பல சூப்பர் ஹீரோக்கள் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படம் உலக வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. #AvengersInfinityWar
    உலகளவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படம் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாகி திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

    உலகம் முழுக்க ரசிகர்களை ஈர்த்துள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 2 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்து வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. தற்போது வரை இந்த படம் 2 பில்லியன் டாலர்கள் (அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 13 ஆயிரத்து 5,17 கோடியை) வசூலித்துள்ளது. 

    வட அமெரிக்காவில் மட்டும் இந்த படம் 655 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. தவிர்த்து உலகம் முழுக்க 1.346 பில்லியன் டாலர்கள் வசூலாகியுள்ளது. 

    உலகளவில் அதிகம் வசூலித்த படங்கள் பட்டியலில் ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ நான்காவது இடத்தில் உள்ளது. 



    ஜேம்ஸ் கேமரானின் அவதார் (2.78 பில்லியன் டாலர்) மற்றும் டைட்டானிக் (2.18 பில்லியன் டாலர்) முதல் இரண்டு இடங்களை தக்கவைத்துள்ளன. ஸ்டார்வார்ஸ் த ஃபோர்ஸ் அவாகென்ஸ் படம் வசூலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. விரைவில் இந்த படங்களில் வசூல் சாதனைகளை ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பல சூப்பர் ஹீரோக்களும், தனோஸ் என்ற பயங்கரமான வில்லனும் நடித்துள்ளனர். மிரட்டலான அதிரடி சாகசங்கள் நிரம்பிய படமாக இந்த படம் வந்துள்ளது.

    இதில் ராபர்ட் டவுனி, கிறிஸ் கெம்ஸ்வொர்த், பார்க் ரூபலா, கிறிஸ் வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. #AvengersInfinityWar #AvengersInfinity #ThanosDemandsYourSilence

    ×