என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cibi Chakravarthy"

    • அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்தது டான் திரைப்படம்.
    • டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ள சிபி சக்ரவர்த்தி ஒருவரானார்.

    அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்தது டான் திரைப்படம். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

    டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ள சிபி சக்ரவர்த்தி ஒருவரானார்.

    இதையடுத்து சிபி சக்கரவர்த்தி ரஜினிகாந்த் மற்றும் நானி ஆகியோருக்கு கதை சொன்னார். ஆனால் இரண்டு பேருக்குமே அந்த கதை பிடிக்காத நிலையில் அந்த படங்கள் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய முதல் பட ஹீரோவான சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக சுகன் தயாரிக்க உள்ளாராம். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் இப்போது நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவோடு பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு பணிகள் இன்னும் சில மாதங்களில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்பொழுது அமரன் மற்றும் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2022 ஆம் ஆண்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது டான் திரைப்படம்.
    • இயக்குனரான சிபி சக்கரவர்த்திக்கு நேற்று திருமணம் நடைப்பெற்றது.

    2022 ஆம் ஆண்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது டான் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, பிரியங்கா மோகன் மற்றும் சூரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    காலேஜ் ஸ்டூடெண்ட் அவனுடௌய கனவை தேடும் பயணமாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டதால். இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிள் கலெக்ஷனின் பின்னியது.

    இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான சிபி சக்கரவர்த்திக்கு நேற்று திருமணம் நடைப்பெற்றது. இந்த திருமண விழாவில் சிவகார்த்திகேயன் மற்றும் பால சரவணன் கலந்துக் கொண்டனர். இவர்கள் கலந்துக் கொண்ட புகைப்படங்களை தற்பொழுது சமூக வலைத்தளத்தில் பால சரவணன் பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சி.பி.சக்ரவர்த்தியுடன் இணைய உள்ளார் சிவகார்த்திகேயன்.
    • ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் வில்லனாக எஸ்.ஜே சூர்யா

    அமரன் படத்தை தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக சி.பி.சக்ரவர்த்தியுடன் இணைய உள்ளார் சிவகார்த்திகேயன்.

    இதற்கு முன்னர் சிவகார்த்திகேயன் -சிபி சக்ரவர்த்தி கூட்டணியில் டான் படத்தில் தன்னுடைய எதிர்காலம் குறித்த புரிதல் இல்லாத கல்லூரி மாணவனின் கேரக்டரில் நடித்திருந்தார்.


    இந்நிலையில் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பாஸ் என்ற படத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற இருந்த நிலையில் அதனை அடுத்த வாரத்திற்கு ஓத்திவைத்து படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும் சிவகார்த்திகேயன் இணைய உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×