என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cinema News"

    • தீபிகா படுகோனே- ரன்வீர்சிங் 2018-ல் திருமணம் செய்து கொண்டனர்.
    • இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர்.

    பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடியான தீபிகா படுகோனே- ரன்வீர்சிங் 2018-ல் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் இன்று தீபிகா படுகோனே - ரன்வீர்சிங் இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். தீபிகா 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

     தீபிகா படுகோனே கர்ப்பமாக இருக்கலாம் என கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி பரவியது. 77-வது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருது விழாவில் சிகப்பு கம்பளத்தின் மீது பளபளக்கும் சேலையை அணிந்திருந்த போது அவர் தனது வயிற்றுப்பகுதியை மறைத்ததாக கூறப்படுகிறது. தீபிகா படுகோனே தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ள செய்தி பரவியதும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூரில் தீபிகா தாய்மை பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். "நிச்சயமாக ரன்வீரும் நானும் குழந்தைகளை நேசிக்கிறோம். நாங்கள் எங்கள் சொந்த குடும்பத்தைத் தொடங்கும் நாளுக்காக காத்திருக்கிறோம்" என்று அப்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அறிமுக இயக்குநர் பாஸ்கல் வெப்பம் குளிர் மழை #VKM படத்தை இயக்கவிருக்கிறார்
    • இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட இருப்பதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

    அறிமுக இயக்குநர் பாஸ்கல் வெப்பம் குளிர் மழை #VKM படத்தை இயக்கவிருக்கிறார்.ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஹேஷ்டேக் FDFS என்ற நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் கதை ஒரு சமூக பிரச்சனையை பேசக் கூடிய படமாக இருக்கும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட இருப்பதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

    • இத்திரைப்படத்தை ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது
    • பிரேமலு தெலுங்கு மொழியில் டப் செய்து இன்று வெளியானது.

    மலையாள மொழியில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் பிரேமலு படம் வெளியானது. மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். சென்னையில் இப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு உருவாகியது.  உலகளவு பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் 100 கோடியை தாண்டியது பிரேமலு. மலையாள திரையுலகில் மிகப் பெரிய வசூல் செய்த படத்தின் பட்டியலில் பிரேமலு 5-வது இடத்தில் உள்ளது. இத்திரைப்படத்தை ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது. மலையாளத்தில் வரவேற்பை தொடர்ந்து பிரேமலு தெலுங்கு மொழியில் டப் செய்து இன்று வெளியானது. இந்நிலையில் படக்குழுவினர் தமிழிலும் இப்படத்தை டப் செய்து வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளனர். மார்ச் மாத இறுதியில் தமிழில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்கள் படக்குழுவினரிடம் இருந்து விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அறிமுக இயக்குநர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை (VKM)படத்தை இயக்கவிருக்கிறார்
    • படத்தின் போஸ்டர் மிகவும் நேர்த்தியாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது.

    அறிமுக இயக்குநர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை (VKM)படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான  ஷங்கர் என்பவர் இசையமைக்கிறார். ஹேஷ்டேக் FDFS என்ற நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் கதை தற்போது நிகழும் சமூக பிரச்சனையை பேசக்கூடியதாக இருக்கும் என படகுழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெற்றிமாறன் இன்று வெளியிட்டார். வெப்பம் குளிர் மழை படத்தின் போஸ்டர் மிகவும் நேர்த்தியாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது. கதாநாயகன் பால் கேனை தூக்கிக் கொண்டு இருப்பது போலவும், மாட்டின் தலைக்கு பதில் கதாநாயகியின் தலை வைக்கப்பட்டிருக்கிறது. மாட்டின் வயிற்றில் மனித சிசு வளர்வது போன்ற காட்சிகள் போஸ்டரில் காணப்படுகிறது. இத்திரைப்படம்  எதை பற்றி பேசப்போகிறது என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

    • நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் D-51-வது படத்தில் நடிக்கிறார்.
    • படத்திற்கு "குபேரா" என்று பெயரிடப்பட்டுள்ளது.

    நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் D-51-வது படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது.

    இப்படத்தில் தனுஷ்,நாகார்ஜூனா,ராஷ்மிகா மந்தனா,சவுரவ் கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. படத்திற்கு "குபேரா" என்று பெயரிடப்பட்டுள்ளனர்.

    தனுஷ் இதில் சிவன் பார்வதி படத்தின் முன் நின்றிப்பது போல் போஸ்டர் வடிவமைத்து இருக்கின்றனர். இந்த படத்தில் தனுஷ் என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • எல்லாரும் புகழ்ந்து தள்ளிய இப்படத்தை "எனக்கு பிடிக்கவே இல்லை .. எரிச்சலூட்டும் படமாக இருந்தது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    • "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சமீபத்தில் வெளியாகிய மஞ்சும்மல் பாய்ஸ் படம் மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்றது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் ரூ. 100 கோடியை தாண்டியது. தமிழ்நாடு வசூலில் ரூ.15 கோடியை தாண்டியது.

    வெகுஜன மக்களால் இத்திரைப்படம் மிகவும் கொண்டாடப்பட்டது. நடிகர் கமல், விக்ரம், தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சித்தார்த் போன்ற பல முன்னணி பிரபலங்களால் பாராட்டு பெற்றது.

    இப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்து துனுஷை வைத்து படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக தவல்கள் வெளியானது.

    எல்லாரும் புகழ்ந்து தள்ளிய இப்படத்தை "எனக்கு பிடிக்கவே இல்லை .. எரிச்சலூட்டும் படமாக இருந்தது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர்," தென்னகம் முழுக்க உள்ள சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அநாகரீக செயல் உள்ளது. சுற்றுலா மையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள்.

    குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது, வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது" என்று கூறியுள்ளார்.

    மேலும்," மலையாள சினிமா இக்கால சமூதாயத்தை கெடுக்கிறது எனவும், அடுத்து வரும் தலைமுறைகளை ஜாலியாக இருப்பது என்றால் அது குடியும் கும்மாலமும்மாக இருப்பது தான் என போதிக்கிறது" என அவர் விமர்சித்துள்ளார்.

    கேரளத்தின் நலம் நாடும் ஓர் அரசு இருந்தால் "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    எழுத்தாளர் ஜெயமோகனின் இந்த விமர்சனம் சமூக வலை தளங்களில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. பலர் ஜெயமோகன் கூறியது சரிதான் என்றும், பலர் அவர் கூறுயதை மறுத்தும் விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.




     




     


    • மார்ச் 1 ஆம் தேதி டியூன் பாகம் 2 வெளியானது
    • 94வது அகாடமி விருது வழங்கும் விழாவில் 6 விருதுகளை டியூன் பாகம் 1 வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    டியூன் பாகம் 1 2021 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை டெனிஸ் இயக்கினார்.இப்படம் 1965 வெளிவந்த நாவலின் அடிப்படையில் எடுக்கபட்டது. ஜான் மற்றும் எரிக் ரோத் திரைக்கதை எழுதியுள்ளனர். சை ஃபை கதைகளமாக இந்த படம் வடிவமைக்கப்பட்டது.

    165 மில்லியன் டாலர் பொருட் செலவில் எடுக்கபட்ட இந்த படம் 435 மில்லியன் டாலர் உலகளவு வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. ட்யூன் பாகம் ஒன்றின் வெற்றியைத் தொடர்ந்து பாகம் 2 எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.

    அதன்படி படப்பிடிப்பு முடிந்துமார்ச் 1 ஆம் தேதி டியூன் பாகம் 2 வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இப்படத்திற்கு உருவாகியுள்ளது. சென்னையுள்ள பெரும்பாலான திரையரங்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிகொண்டு இருக்கிறது டியூன்.94வது அகாடமி விருது வழங்கும் விழாவில் 6 விருதுகளை டியூன் பாகம் 1 வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் ரூ. 100 கோடியை தாண்டியது
    • மஞ்சும்மல் பாய்ஸ் படம் "எனக்கு பிடிக்கவே இல்லை என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அண்மையில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. உலகளவில் ரூ. 100 கோடி வசூலை இப்படம் தாண்டியுள்ளது. தமிழ்நாடு வசூலில் மட்டும் ரூ.15 கோடியை தாண்டியது.

    வெகுஜன மக்களால் இத்திரைப்படம் மிகவும் கொண்டாடப்பட்டது. நடிகர் கமல், விக்ரம், தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சித்தார்த் போன்ற பல முன்னணி திரை பிரபலங்கள் இப்படத்தை பாராட்டினர்.

    எல்லாரும் புகழ்ந்து தள்ளிய இப்படத்தை "எனக்கு பிடிக்கவே இல்லை.. எரிச்சலூட்டும் படமாக இருந்தது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து தனது இணையதளத்தில் அவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், "தென்னகம் முழுக்க உள்ள சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அநாகரீக செயல் உள்ளது. சுற்றுலா மையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள்.

    குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது, வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது

    மலையாள சினிமா இக்கால சமூதாயத்தை கெடுக்கிறது எனவும், அடுத்து வரும் தலைமுறைகளை ஜாலியாக இருப்பது என்றால் அது குடியும் கும்மாலமும்மாக இருப்பது தான் என போதிக்கிறது" என அவர் விமர்சித்துள்ளார்.

    மேலும், கேரளத்தின் நலம் நாடும் ஓர் அரசு இருந்தால் "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    எழுத்தாளர் ஜெயமோகனின் இந்த விமர்சனம் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் தற்போது ஜெயமோகனை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "'தமிழ் பொறுக்கிஸ்' என்று சொன்ன அந்த சங்கியும், 'மலையாளப் பொறுக்கிகள்' என்று சொல்லும் இந்த சங்கியும் ஒரே சாக்கடையில் ஊறும் இரண்டு தவளைகளே. தமிழர்கள் - கேரளம் சென்றாலும், மலையாளிகள் தமிழ்நாடு வந்தாலும், அவர்கள் நம்மிடம் தமிழிலேயே பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறைந்துள்ளனர்!" என அவர் பதிவிட்டுள்ளார்.

    • விஷாலின் அடுத்த படமான "ரத்னம்" படத்தின் முதல் பாடல் அங்கு வெளியிடப்பட்டது.
    • நான் இதனை கடந்த 10 வருடங்களாக பின்பற்றி வருகிறேன். இதில் எனக்கு எதுவும் தப்பாக தெரியவில்லை.

    நடிகர் விஷால் நேற்று நடைபெற்ற வி.ஐ.டி வைப்ரன்ஸ் ஃபெஸ்ட் 2024 என்கிற கல்லூரி விழாவில் பங்கேற்றார்.

    விஷாலின் அடுத்த படமான "ரத்னம்" படத்தின் முதல் பாடல் அங்கு வெளியிடப்பட்டது.

    ரத்னம் படக்குழுவினர் இயக்குனர் ஹரி, சமூத்திரகனி, தேவி ஸ்ரீ ப்ரசாத் என அனைவரும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.அப்போது அக்கல்லூரி மாணவர் ஒருவர் விஷாலிடம் கேள்வி கேட்டார்.

    சமீபமாக, விஷால் சாப்பிடுவதற்கு முன்பு அவர் உணவிற்கு நன்றி கூறும் முறையை நாம் அனைவரும் சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்போம்.

    அதைப்பார்த்து பலர் அவரைப் போலவே நடித்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸை பதிவிட்டிருந்தனர். அந்த வணங்கும் முறைக்கு பின் ஏதேனும் காரணம் இருக்கிறதா ? என்று கேட்டான்.

    அதற்கு பதிலளித்த விஷால், "நான் இதனை கடந்த 10 வருடங்களாக பின்பற்றி வருகிறேன். இதில் எனக்கு எதுவும் தப்பாக தெரியவில்லை. அனைத்து கடவுளும் எனக்கு ஒன்று தான். எனக்கு முதல் கடவுள் கேமராதான். அது தான் எனக்கு சாப்பாடு அளிக்கிறது. நான் இதை பப்லிசிட்டிகாகலாம் எதுவும் செய்யவில்லை" என்று கூறினார்.

    நாகர்கோயிலிலுள்ள சிறு ஊரில் நடக்கும் புறா பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் பைரி. அப்பாவை இழந்த தன் மகன் நன்றாக இருக்க வேண்டும் என தாய் ஆசைப்படுகிறாள். ஆனால் தாயின் பேச்சை கேட்காமல் புறா பந்தயத்தில் ஈடுப்படுகிறான் நாயகன்.

    புறா பந்தயத்தில் இருக்கும் பிரச்சனைகளும் அதில் இருக்கும் விரோதம், துரோகத்தை பற்றி பேசுகிறது இந்த படம். ஜான் கிளாடி இப்படத்தை இயக்கி இருக்கிறார். ரமேஷ் ஆறுமுகம், மேகனா எலன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    சிவகார்த்திகேயன் நல்ல படங்களை பார்த்தால் அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டும் பழக்கமுடையவர். பிப்ரவரி மாதம் ரியோ ராஜ் நடித்து வெளியான் "ஜோ" திரைபடக்குழுவினரை அழைத்து பாராட்டினார்.

    இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று பைரி படக்குழுவினரை அழைத்து பாராட்டு தெரிவித்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் படக்குழுவினரிடம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     

     

    • அமரன் திரைப்படத்தை ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது
    • "எத பத்தியும் யோசிக்காதீங்க உங்களுக்கு நான் இருக்கேன். எனக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்க" என கூறினார்

    வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களில் சிவக்கார்த்திகேயன் முக்கிய பங்கு வகுக்கிறார். தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி ஆகியவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவரின் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷ்ன்ஸ் இருக்கிறது.

    சமீபத்தில் வெளியான அயலான் படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.குழந்தை ரசிர்கர்கள் சிவகார்த்திகேயனுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். அயலான் படத்தை தொடர்ந்து அவரின் 21-வது படமான அமரனை கமலஹாசன் தயாரிக்கிறார்.

    சாய் பல்லவி,புவன் அரோரா,ராஹுல் போஸ் போன்ற பல நட்சத்திரங்கள் இதில் நடித்துருக்கின்றனர். ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். ஜி வி பிரகாஷ் இப்படத்த்ற்கு இசையமைத்துள்ளார்.

    அமரன் படத்தில் சிவகார்த்திக்கேயன் ராணுவ கமாண்டோவாக நடித்து இருக்கிறார்.

    இதற்காக உடற்பயிற்சி செய்து உடலை மெருகேற்றி கம்மோண்டோவின் தோற்றத்தில் கச்சிதமாக இருக்கிறார்.

    அமரன் திரைப்படத்தை ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. சிவகார்த்திகேயன் படத்திற்க்கு நெட்ஃப்லிக்ஸ் கொடுத்த அதிகபட்ச தொகை இது. முன்னதாக மாவீரன் படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 33 கோடி ரூபாய் கொடுத்து டிஜிட்டல் ரைட்சை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,

    அதனால் இப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    இந்நிலையில் சிவகார்த்திகேயன் இன்று அவரது ரசிகர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் " எத பத்தியும் யோசிக்காதீங்க உங்களுக்கு நான் இருக்கேன். எனக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்க. என் சினிமா வாழ்க்கை ஸ்டார்ட் பண்ணதுல இருந்து இப்போ வரைக்கும் நிறைய பிரச்சனை, வலி இருந்திருக்கு சிலது உங்களுக்கு தெரியும் சிலது தெரியாது. பிராப்ளம் ஷேர் பண்ண அப்பா இல்ல சப்போர்ட் பண்ண அண்ணனும் இல்ல. ஆனா இப்போ என் ஃபேன்சான ப்ரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் நீங்க இருந்தீங்க இருப்பீங்க" என மன நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    பின் சந்திப்பை முடித்து அங்கு இருந்து கிளம்பும் போது ரசிகர்களைப் பார்த்து சாப்ட்டீங்களா என்று கேடு விட்டுச் சென்றார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பிப்ரவரி மாதம் வைபவ் நடித்து வெளியான படம் ரணம்.
    • வைபவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் வெங்கட் பிரபு.

    பிப்ரவரி மாதம் வைபவ் நடித்து வெளியான படம் ரணம். நடிகர் வைபவிற்கு 25 -வது படமாக இப்படம் அமைந்தது. ரணம் படத்தை ஷெரிஃப் இயக்கினார். வைபவுடன் நந்தித்தா ஸ்வேதா, தான்யா ஹோப் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மிதுன் மித்ரா ப்ரொடக்ஷன் இப்படத்தை தயாரித்துள்ளது.

    ரணம் படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் இப்படத்தை பாராட்டி பதிவை வெளியிட்டார். வைபவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் வெங்கட் பிரபு. வெங்கட் பிரபு அவரின் சரோஜா படத்தில் வைபவை அறிமுகம் செய்தார். இந்நிலையில் படத்தின் வெற்றியை அப்படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

     

     

    ×