search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cm chandrashekar rao"

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல் மந்திரி வேட்பாளர் சந்திரசேகர ராவ் இன்று கஜ்வெல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். #TelanganaAssemblyElections #ChandrashekharRao
    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள டி.ஆர்.எஸ். கட்சி போராடி வருகிறது.

    காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதேபோல் பாஜகவும் களத்தில் இருக்கிறது.



    தெலுங்கானாவில் சோனியா காந்தி பிரசாரம் வரும் 22, 23-ம் தேதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதற்கிடையே, தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள 65 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.

    இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் கஜ்வெல் தொகுதியில் போட்டியிடும் முதல் மந்திரி வேட்பாளர் சந்திரசேகர ராவ் இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். #TelanganaAssemblyElections #ChandrashekharRao
    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் இன்று சந்தித்து பேசினார். #PMModi #ChandrashekarRao
    புதுடெல்லி:

    தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் இன்று டெல்லி சென்றார். மாலையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை 
    சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பின் போது, மாநில விவகாரங்கள் தொடர்பான் மனு ஒன்றை பிரதமர் மோடியிடம் அளித்தார். ஏற்கனவே, இந்த மாத தொடக்கத்திலும் சந்திரசேகர் ராவ், பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.. #PMModi #ChandrashekarRao
    தெலுங்கானாவில் வேளாண் வளர்ச்சிக்காகவும், விவசாயம் மேம்படவும் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்துள்ளார்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா முதல்-மந்திரியாக கே.சந்திரசேகரராவ் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் விவசாயம் மேம்பட பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதன்படி அவர் 50-க்கும் மேற்பட்ட சலுகைகள், திட்டங்களை வழங்கியுள்ளார்.குறிப்பாக 2018-19-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு அவரது அரசு 26 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் ரூ.3,728 கோடி இலவச மின்சாரத்துக்காகவும் ரூ.20,820 கோடி விவசாயம் மற்றும் அதை சார்ந்த பிரிவுகள், கிராம மேம்பாடு ஆகியவற்றுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    நிதி ஆயோக் அமைப்பின் விவசாய விற்பனை மற்றும் விவசாய சீர்திருத்த குறியீட்டின்படி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கும் 10 மாநிலங்களின் வரிசையில் தெலுங்கானாவும் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

    விவசாயிகளின் நலனுக்காக தெலுங்கானாவில் 24 மணி நேர இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 2,58,195 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதற்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.



    இதன்படி 35.3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. குறைந்த வட்டி விகிதத்தில் விவசாய கடன் வழங்கப்படுகிறது. இவை தவிர 50 சதவீத மானியம், போக்குவரத்து வரி தள்ளுபடியுடன் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் வழங்கப்படுகிறது.

    விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் தடையின்றி வழங்கப்படுகிறது. கிராமங்களில் 25 விவசாயிகள் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டு தரமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு நேரடியாக விவசாயிகளுக்கு அவை வினியோகம் செய்யப்படுகின்றன. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

    தெலுங்கானா அரசின் ‘ரைது பந்து’ என்ற புதிய திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் சாகுபடி தொடங்கும்முன்பு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் நிதி வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக்கணக்குக்கு இந்த தொகை நேரடியாக அனுப்பப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் அரசு கிடங்குகளில் இருப்பு வைத்துள்ள விவசாய பொருட்களின் மொத்த மதிப்பில் 75 சதவீதம் அளவுக்கு (அதிகபட்சம் ரூ.2 லட்சம்) விவசாயிகள் வட்டியில்லா கடன் பெற முடியும்.

    வன அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் முலுகு பகுதியில் ரூ.50 கோடியில் வன கல்லூரி தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. 22.47 லட்சம் டன் விளைபொருட்களை சேமித்து வைக்கும் வகையில் 364 கிடங்குகளை கட்டி வருகிறது. சொட்டு நீர் பாசனம், பசுமைக்குடில் விவசாயம் ஆகியவற்றை ஊக்குவிக்க மானியங்கள் வழங்கப்படுகின்றன.

    இன்டர்நெட், ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகளுக்கு விளைபொருட்களின் இருப்பு, விலை உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன. மேலும் குறைகளை தீர்க்க 1800 599 4199 என்ற தொலைபேசி எண்ணும் தொடங்கப்பட்டு உள்ளது.

    விவசாய அபிவிருத்தி, தற்கொலை தடுப்பு, குழந்தைகள் கல்வி, கடனுதவி, காப்பீடு, பெண்கள் மேம்பாடு, சுகாதாரம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தெலுங்கானா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ×