என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "CM Rangaswamy"
- காமராஜர் சதுக்கத்தில் உள்ள அவரின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்.
- புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம், திராவிடர் கழகம் சிவவீரமணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் காந்தி பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
பிறந்தநாளையொட்டி புதுவை கடற்கரை சாலை யில் உள்ள காந்தி சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.
சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன், நேரு, தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, கலெக்டர் வல்லவன், அரசு அதிகாரி கள், போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சர்வமத பிரார்த்தனை நடந்தது. தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காந்தி சிலைக்கு தேசிய செயலாளர் ராஜா, மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாராகலைநாதன் ஆகியோர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
புதுவை அரசு சார்பில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் காமராஜர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி காமராஜர் சதுக்கத்தில் உள்ள அவரின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன், நேரு, தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, கலெக்டர் வல்லவன், அரசு அதிகாரி கள், போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம், திராவிடர் கழகம் சிவவீரமணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
- நல்ல குடிமக்களை உருவாக்கி சிறந்த தேசத்தை கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது.
- ஆசிரியர் பெருமக்களின் கடமையுணர்வையும், அர்ப்பணிப்பையும் போற்றுவதோடு இத்தருணத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதும் நமது கடமையாகும்.
புதுச்சேரி:
நாடுமுழுவதும் நாளை (செவ்வாய்கிழமை) ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கவர்னர் தமிழிசை, முதல்- அமைச்சர் ரங்கசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் தமிழிசை:- வளரும் தலை முறையினருக்கு கல்வியையும் ஒழுக்கத்தையும் புகட்டி சிறந்த சமுதாயத்தை உருவாக்க அர்ப் பணிப்போடு பணியாற்று பவர்கள் ஆசிரியர்கள்.
மாணவர்களின் ஒளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக திகழ்வதோடு நல்ல குடிமக்களை உருவாக்கி சிறந்த தேசத்தை கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது.
அத்தகைய ஆசிரியர்களுக்கு இந்த நாளில் மரியாதையும் நன்றியும் செலுத்த வேண்டியது நம்முடைய கடமை. சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி:- ஏழ்மையை போக்க உதவுவதோடு மட்டுமல்லாது, சிறந்த குடிமக்களை கொண்ட சமுதாயத்தை கட்டமைக்க உதவும் முக்கிய காரணிகளில் ஒன்றாக கல்வி உள்ளது. அந்த கல்வியை போதிப்பதோடு மட்டுமில்லாமல் ஒழுக்கம், தன்னம்பிக்கை, தலைமைத்துவம் ஆகிய நற் பண்புகளை ஊட்டி மாணவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கித்தரும் உன்னத பொறுப்பை வகிப்பவர்களாக ஆசிரி யர்கள் திகழ்கின்றனர்.
அவர்களின் பணி அறப்பணிக்கு நிகரானது. ஆசிரியர் பெருமக்களின் கடமையுணர்வையும், அர்ப்பணிப்பையும் போற்றுவதோடு இத்தருணத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதும் நமது கடமையாகும்.
இளைய சமுதாயத்தை உருவாக்கி தருவதில் முக்கிய பங்காற்று பவர்களாக திகழும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். .
- நான் கடந்த சட்டசபை தேர்தலில் ஏனாம் தொகுதியில் போட்டியிட்டேன்.
- புதுவை அரசு சுற்றுலாவை மேம்படுத்த மிகுந்த கவனம் செலுத்தி தேவையான நிதியை ஒதுக்கி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை பிராந்தியமான ஏனாமில் நலத்திட்டங்களை நிறைவேற்றக்கோரி பா.ஜனதா ஆதரவாளரான சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் கடந்த 6-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்குக்கு நேற்று திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு உடனடியாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக ஏனாம் பகுதி மக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், முதலமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதுடன், அவர் ஏனாம் வந்தால் அவருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று தெரிவித்து இருந்தார். இதை கண்டித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் புதுவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி ஏனாம் செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று அங்கு நடைபெற்ற மக்கள் கலாசார நிறைவு விழாவில் ரங்கசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் கடந்த சட்டசபை தேர்தலில் ஏனாம் தொகுதியில் போட்டியிட்டேன். எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னால் உடனடியாக இங்கு வரமுடியவில்லை . ஏனாம் மக்கள் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் கலந்துகொண்டுள்ளேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
புதுவை அரசு சுற்றுலாவை மேம்படுத்த மிகுந்த கவனம் செலுத்தி தேவையான நிதியை ஒதுக்கி வருகிறது. புதுவையின் அனைத்து பிராந்திய பகுதிகளான காரைக்கால், மாகி, ஏனாம் ஆகியவை அனைத்தும் முழுமையாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம்.
அரசின் ஒருசில திட்டங்களை நிறைவேற்ற தாமதம் ஆகலாம். அதற்கு நம்மிடம் முழு அதிகாரம் இல்லாதது தான் காரணம். எனவே எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது.
நமது அரசு மத்திய அரசின் உதவியோடு சிறப்பான நிலையை அடைய அனைத்து நடவடிக்கைகள் எடுக்கும். மத்திய அரசிடம் கூடுதல் நிதியை பெறவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசு புதுவையில் ஜி20 மாநாட்டின் பிரதிநிதிகள் கூட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது. இது நமக்கு கிடைத்த பெருமை.
புதுவை அரசின் டெல்லி பிரதிநிதியான மல்லாடி கிருஷ்ணாராவ் ஏனாம் மக்கள் குறைகள் குறித்து மனுவாக அளித்துள்ளார். இதில் குறிப்பாக ஏனாமில் சூதாட்ட விடுதிகள் அமைக்க கூடாது என்பது தான். சூதாட்டம் மிகவும் மோசமானது. எந்த இடத்திலும் சூதாட்ட விடுதி இருக்கக்கூடாது என்பது தான் அரசின் எண்ணம். எனவே சூதாட்ட விடுதிகளுக்கு அரசு அனுமதி அளிக்காது. புதுவை மக்களின் வளர்ச்சிக்காக எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை விரைவில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே .டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கரன், லட்சுமிகாந்தன், மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்