search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coalition airstrike"

    சிரியா நாட்டில் சர்வதேச கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். #Syria #CoalitionAirstrike
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ். குழுவினரும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். இவர்களை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    சிரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற அரசு படைகள் ஆகியவையும் போரில் இறங்கி உள்ளன. சிரியாவில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் குண்டுகளுக்கு இரையாகி உள்ளனர்.
     
    இந்நிலையில், சிரியாவின் டெயிர் அல் சோர் மாகாணத்தில் வசித்து வந்தவர்கள் மீது சர்வதேச கூட்டுப் படையினர் இன்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.
     
    இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து அங்கு மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வருகின்றனர். #Syria #CoalitionAirstrike
    தலீபான் பயங்கரவாதிகளை குறி வைத்து அமெரிக்க கூட்டுப்படைகள் நிகழ்த்திய வான் தாக்குதலில் 7 தலீபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். #Taliban #FactoryDestroyed #Airstrike
    காந்தஹார்:

    ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒரு பக்கம் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தாலும், அவர்கள் தாக்குதல்களை நிறுத்தவில்லை.

    இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் படைகளும், அங்குள்ள அமெரிக்க கூட்டுப்படைகளும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

    இந்த நிலையில், அங்கு காந்தஹார் மாகாணத்தில், மேவான்ட் மாவட்டம், பேண்ட் இ டெமர் பகுதியில் தலீபான் பயங்கரவாதிகளை குறி வைத்து அமெரிக்க கூட்டுப்படைகள் வான் தாக்குதல் நடத்தின.

    இந்த தாக்குதலில் 7 தலீபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். அவர்களில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் தலைவர் ரகமதுல்லாவும் ஒருவர். 2 தலீபான் பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    தலீபான் பயங்கரவாதிகளின் ஆயுத தொழிற்சாலையும், சக்தி வாய்ந்த வெடிகுண்டு கருவிகளும், கண்ணிவெடிகளும் அழிக்கப்பட்டதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

    அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல் பற்றி தலீபான் பயங்கரவாதிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
    ×