search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coconut ladoo"

    ரவையுடன் தேங்காய் சேர்த்து லட்டு செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த லட்டை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    ரவை - ஒரு கப்,
    தேங்காய் துருவல் - அரை கப்,
    சர்க்கரை - ஒரு கப்,
    வறுத்த முந்திரி, திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    நெய் - 50 கிராம்,
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
    பால் - சிறிதளவு



    செய்முறை:  

    ரவையை நெய்யில் சிவக்க வறுத்து கொள்ளவும்.

    தேங்காய் துருவலை வறுத்து கொள்ளவும்.

    ரவையுடன், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரை, சிறிதளவு நீர் சேர்த்து, நுரைக்கும் போது சிறிது பால் விட்டு அழுக்கு நீக்கி கொதிக்கவிட்டு, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்.

    இப்போது இந்த பாகை ரவை கலவையில் சேர்த்து உருண்டைகள் பிடிக்கவும்.

    சூப்பரான ரவை தேங்காய் லட்டு ரெடி.

    இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×