search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore blast"

    • காஜா முகைதீன் வீட்டிற்கு டெல்லியில் இருந்து வந்த என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் கணேஷ் பாபு தலைமையிலான குழுவினர் சென்றனர்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் செல்போனை பறிமுதல் செய்தனர்.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கோவை, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை மேற் கொண்டனர். கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு டையவர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள காஜா முகைதீன் வீட்டிற்கு டெல்லியில் இருந்து வந்த என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் கணேஷ் பாபு தலைமையிலான குழுவினர் சென்றனர். அப்போது காஜா முகைதீன் கடந்த சில ஆண்டுகளாக நாகர்கோவிலில் வசித்து வருவது தெரிய வந்தது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் கணேஷ் பாபு தலைமையில் 3 பேர் இன்று காலை நாகர்கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நாகர்கோவில் இசங்கன் விளையில் உள்ள காஜா முகைதீன் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் இருந்த காஜா முகைதீனிடம் விசாரணை நடத்தப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய விசாரணை பகல் 12 மணி வரை நடந்தது. சுமார் 3 மணி நேரம் காஜா முகைதீனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    இதை தொடர்ந்து அவரது செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு சென்றனர்.

    • கோவையில் நடைபெற்ற தாக்குதல் மிகவும் ஆபத்தானது. இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    • கார் வெடிப்பு வழக்கில் தமிழக காவல்துறையின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.

    கோவை:

    கோவை நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பாரதம் உருவானது. ஆயிரம் ஆண்டுகளாக பாரதத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.

    நவீன அறிவியல் தொழில்நுட்ப கல்வியோடு சேர்த்து பாரத பண்பாடுகளோடு கூடிய கல்வி முறை தேவைப்படுகிறது.

    தமிழகம் பல முனிவர்கள், யோகிகளை கொண்டிருந்த மண். யோகாவை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறந்த ஆளுமையால் இந்தியா வழி நடத்தப்பட்டு வருகிறது. யோகாவையும், இயற்கை மருத்துவத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சனாதன தர்மம் இந்த நாட்டின் அடையாளம்.

    பயங்கரவாதம் நாட்டின் பெரும் பிரச்சினையாக உள்ளது. பயங்கரவாத தாக்குதல் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறது. பயங்கரவாதம் அனைத்திற்கும் எதிரானதாக உள்ளது.

    கோவையில் நடைபெற்ற கார் வெடிவிபத்து ஒரு திட்டமிட்ட தாக்குதல். இது பயங்கரவாத தாக்குதல். இதில் அதிக அளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற தாக்குதல் மிகவும் ஆபத்தானது. இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    கார் வெடிப்பு வழக்கில் தமிழக காவல்துறையின் நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனாலும் தமிழக அரசு கோவை சம்பவத்தை தாமதிக்காமல் உரிய நேரத்தில் என்.ஐ.ஏ. விசாரணைக்கு கொடுத்திருக்க வேண்டும்.

    கோவையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னால் பெரும் திட்டங்கள் இருந்துள்ளது.

    இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் பெருவளர்ச்சியை நோக்கமாக கொண்டு செல்கிறோம். ஆனால் பயங்கரவாத தாக்குதல் வளர்ச்சியை தடுக்கும் விதமாக உள்ளது.

    பயங்கரவாதத்தை உருவாக்கக் கூடிய இடமாக கோவை உள்ளது கவலையளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தலைமை செயலாளர் இறையன்புவுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
    • ஆலோசனை கூட்டத்தில் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    கோவையில் தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 23-ந்தேதி அதிகாலையில் காரில் எடுத்துச் செல்லப்பட்ட சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் முபின் என்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடனடியாக நேரில் சென்று விசாரணை நடத்தினார். அவரது நேரடி மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவு துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன், தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கினார்.

    முன்னதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தலைமை செயலாளர் இறையன்புவுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தையே உலுக்கிய கோவை குண்டுவெடிப்பு வழக்கில், 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஒருவரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். #CoimbatoreBlast
    சென்னை:

    தமிழகத்தையே உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு சம்பவம், கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அன்று நடந்தது. கோவையில் 11 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் பரிதாபமாக பலியானார்கள். 200 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கோர்ட்டால் அறிவிக்கப்பட்ட நூகு என்ற ரஷீத் (வயது 44). என்பவர் தலைமறைவாகி விட்டார். கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த இவர் கத்தார் நாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டார். இவரை கோர்ட்டு தலைமறைவு குற்றவாளியாக அறிவித்திருந்தது.

    சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு தனிப்படை போலீசார் இவரைத் தேடி வந்தனர். அனைத்து விமான நிலையங்களிலும், இவரைப்பற்றி புகைப்படத்துடன் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் நூகு என்ற ரஷீத் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதமன் தலைமையில், போலீஸ் படையினர் சென்னை விமான நிலையத்தில் மாறுவேடத்தில் காத்திருந்தனர்.

    அப்போது கத்தார் நாட்டில் இருந்து விமானத்தில் வந்து இறங்கிய நூகு என்ற ரஷீத்தை மாறுவேடத்தில் காத்திருந்த போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    சென்னையில் அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.  #CoimbatoreBlast
    ×