என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Collector warning"
- உரிமம் இல்லாமல் செயல்படும் மகளிர் விடுதி, குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லம் இயங்க அனுமதி இல்லை
- கண்காணிப்பு குழுக்களின் மூலம் நடத்தப்படும் தொடர் ஆய்வின் மூலம் குறைகள் கண்டறியும் பட்சத்தில் விடுதிகள் மற்றும் இல்லங்களின் மேல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்கு–றிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பணிபுரியும் மகளிர் விடுதிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இடங்கள், தமிழக அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-ன் கீழ் மாவட்ட கலெக்டர் அவர்களின் மூலம் உரிமம் பெற்று செயல்படவேண்டும். உரிமம் இல்லாமல் செயல்படும் மகளிர் விடுதி, குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லம் இயங்க அனுமதி இல்லை.
எனவே உரிய சான்றுகளுடன் பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்றவற்றை தனியார் விடுதிகள், இல்லங்களை நடத்திவரும் அனைத்து நிர்வாகிகளும் கூடிய விரைவில் முடித்திட வேண்டும். மேலும் விடுதியில் போதிய பாதுகாப்பு வழங்குதல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். கண்காணிப்பு குழுக்களின் மூலம் நடத்தப்படும் தொடர் ஆய்வின் மூலம் குறைகள் கண்டறியும் பட்சத்தில் விடுதிகள் மற்றும் இல்லங்களின் மேல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
உரிமம் பெறாமல் வீட்டு உபயோக பூச்சி மருந்துகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கடைகளிலும் எலி மருந்துகள், கரப்பான்பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் கொசு விரட்டி போன்ற வீட்டு உபயோக பூச்சி மருந்துகளை விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் பூச்சிமருந்து விற்பனை உரிமம் அவசியம்/ உரிமம் இல்லாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான பெட்டிக் கடைகள், மளிகை கடைகள், ஷாப்பிங்மால் போன்ற சூப்பர் மார்க்கெட்களில் எலி மருந்துகள், கரப்பான்பூச்சி கொல்லி மருந்துகள், கொசுவர்த்தி சுருள் போன்ற வீட்டில் பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்துகளை விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன.
வீட்டில் பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்துகளுக்கும் கடைகளில் விற்பனை செய்ய உரிமம் பெறுவது அவசியமாகும். இதற்கு தேவையான உரிமத்தினை தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பூச்சி மருந்துக்கு ரூ.500 வீதம் அதிகபட்சம் ரூ.7500- செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.
உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது பூச்சிமருந்து சட்டம் 1968ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.எனவே, அனைத்து பெட்டிக் கடை, மளிகைகடை மற்றும் சூப்பர் மார்க்கெட் விற்பனையாளர்கள் உடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் . பூச்சி மருந்து சட்டம் 1968ன்படி உரிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்களையும் பராமரிப்பதோடு விற்பனை செய்வதற்கு உரிய பட்டியலையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், விற்பனை நிலையங்களில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சி மருந்துகளை உணவு பொருட்கள் அருகில் வைத்து விற்பனை செய்யாமல் தனியாக இருப்பு வைத்து விற்பனை செய்யவேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மேற்கண்ட வீட்டு உபயோக பூச்சி மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது.
மேலும் இது குறித்த விபரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர், புதுக்கோட்டை - 6381741240, கந்தர்வகோட்டை 9442275726, திருவரங்குளம் - 8072154306, கறம்பக்குடி - 9443826047, அறந்தாங்கி - 9442634852, ஆவுடையார்கோவில் - 9944669129, மணமேல்குடி - 9865012210, திருமயம் - 9843322167, அரிமளம் - 9486493224, பொன்னமராவதி - 9442684565, அன்னவாசல் - 9629500919, விராலிமலை - 9443839994, குன்றாண்டார்கோவில் - 9442933492 அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிமம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகன் தனநாராயணன் (வயது 16). வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த மார்ச் 24-ந்தேதி தனநாராயணன் கிணற்றில் தவறி விழுந்தார்.
தீயணைப்பு துறையினர் தனநாராயணன் உடலை மீட்டனர். அவரை பரிசோதித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்து உடலை அங்கேயே விட்டு சென்றனர்.
அப்போது அங்கு வந்த சாமியார் ஒருவர் சிறுவன் ஜலசமாதி அடைந்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து விவசாய நிலத்திலேயே ஜீவசமாதி நிலையில் தனநாராயணன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தின் அருகே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் சிறுவனின் புகைப்படத்துடன் அருள்மிகு தவராஜ பாலயோகி சிவானந்த பரமஹம்ச தனநாராயணர் ஜீவசமாதி நிலையம் செல்லும் வழி என்று குறிப்பிட்டுள்ளனர்.
சிறுவனின் சமாதியை அவரது குடும்பத்தினர் மற்றும் சிலர் பூஜித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுவன் அடக்கம் செய்யப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியது. அதில் பத்மாசனம் முறையில் அமர்ந்து இருக்கும் சிறுவனின் உடலை தூக்கி வைத்து அடக்கம் செய்யப்படும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து சிறுவனின் மரணம் குறித்து விசாரணை நடத்த கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார்.
இதுகுறித்து படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அந்த புகாரில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் ஜலசமாதி அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி முன்னிலையில் சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
சிறுவன் தனநாராயணனுக்கு வலிப்பு நோய் உள்ளதால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். அதனை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் உறுதி செய்துள்ளனர். ஆனால் சிறுவன் ஜலசமாதி அடைந்து விட்டார் என்று தவறான தகவலை சமூக வலைதளத்தில் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படுகிறது என்றார்.
ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட தனநாராயணன் பிளஸ்-1 வகுப்பை தொடரவில்லை. அவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார் ஒருவரின் அருளாசி பெற்று தியானம் செய்து வந்ததாக சிறுவனின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில் அவர் கிணற்றில் விழுந்து இறந்துள்ளார். அவர் கிணற்றில் தவறுதலாக விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேண்டுமென்றே உயிரிழந்தாரா? என்று விசாரணைக்கு பிறகு தெரியவரும் என்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய தகவல்கள் சேகரிக்காமலும், அதனை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காததாலும் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, தூசி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டையில் பதட்டமான வாக்குச் சாவடிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் உள்ள பதட்டமான 2 வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார்.
பின்னர் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மகேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
அப்போது கலெக்டர் மமேஸ்வரி கூறியதாவது:- மாவட்டத்தில் மொத்தம் 3603 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை. இதில் 9 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை. இந்த பதட்டமான வாக்குச் சாவடிகளில் ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படை வீரர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்த உள்ளோம்.
இந்த வீரர்கள் இம்மாதம் 13-ந் தேதியில் இருந்து வாக்கு பதிவு நாளான 18-ந் தேதி வரை பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். பதட்டமான ஒரு வாக்குச் சாவடிக்கு 4 பேர் வீதம் துணை ராணுவப் படை வீரர்களை பாதுகாப்பில் பணி அமர்த்த உள்ளோம்.
வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரத்தை மாவட்டத்தில் இது வரை 3 லட்சம் பேர் சோதனை அடிப்படையில் பரிசோதித்துள்ளனர். வாக்குப் பதிவினை உறுதி செய்யும் எந்திரத்தை பற்றி தவறான தகவல் பரப்புவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி கூறினார்.
அப்போது தாசில்தார் வில்சன், தேர்தல் துணை வட்டாட்சியர் தாமேதரன், துணை தாசில்தார் சரவண குமாரி, பேரூராட்சி செயல் அலுவலர் மாலா, வருவாய் அலுவலர் யுகந்தர், கிராம நிர்வாக அலுவலர் ஹேமகுமார் உடன் இருந்தனர்.
திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கத்தில் உள்ள வாக்கு மையத்தில் கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.
அப்போது, மாற்றுத் திறனாளிகள் வந்து செல்லும் வகையில், சாய்தளப் பாதை அமைக்கப்பட்டுள்ளனவா? அங்கு வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து கேட்டு அறிந்தார்.
இதை தொடர்ந்து புல்லரம் பாக்கத்தில் குடியிருப்பு பகுதியில் 100 சதவீத வாக்குகளைப் பதிவு செய்ய வலியுறுத்தும் வகையில், வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் விநியோகம் செய்து, விழிப்புணர்வுப் பேரணியை கொடிஅசைத்து தொடங்கி வைத்தனர். #LoksabhaElections2019
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்