search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Committee Members"

    • திட்டக்குழு உறுப்பினர் தேர்வுக்காக 108 பேர் கொண்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் பெற்றுக்கொண்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் பணிக்கான உறுப்பினர்கள் தேர்வுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட திட்டமிடும் குழுவுக்கு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 9 உறுப்பினர்களும், நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 3 உறுப்பினர்களும் என 12 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளன.

    மேற்கண்ட தேர்தலுக்கு மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்கள் 17 பேரும், நகராட்சி உறுப்பினர்கள் 11 பேரும், பேரூராட்சி உறுப்பினர்கள் 108 பேரும் கொண்ட வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப் பட்டுள்ளது. இந்த பட்டியல் உள்ளாட்சி உறுப்பி னர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட, திட்டக்குழு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் பெற்றுக்கொண்டார்.

    • சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட குறு வளமையங்களில் உள்ள பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி பள்ளி அளவில் வழங்கப்பட்டது.
    • இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபாளையம், பசுவப்பட்டி, வெள்ளோடு, ஈங்கூர், காமராஜ் நகர் மற்றும் திப்பம்பாளையம் ஆகிய குறு வளமையங்களில் உள்ள அரசு தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி பள்ளி அளவில் வழங்கப்பட்டது.

    பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் திறம்பட செயல்படுதல் நோக்கத்துடன் பள்ளி அளவில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பள்ளி வளர்ச்சியில் அவர்களின் முக்கிய பங்கு குறித்து விளக்கி கூறப்பட்டது.

    இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    பயிற்சியின் போது பள்ளி செயல்பாடுகளை பள்ளி அளவில் திட்டமிட்டு பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல், இலவச கட்டா யக்கல்வி உரிமைச்சட்டம் 2009, குழந்தையின் உரிமைகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பி னர்களின் பணிகளை அறிய செய்தல், பாலினப் பிரச்சனைகள், தரமான கல்வி, பள்ளி மேலாண்மைக்குழு-பள்ளி நிதியை பயன்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல், சமூக தணிக்கை, பள்ளி களில் குடிநீர், சுகாதாரம் மற்றும் சுத்தம், உள்கட்ட மைப்பு பராமரிப்பு பணிகள், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் ஆகிய செயல்பாடுகள் பற்றி கருத்தாய்வு நடைபெற்றது.

    இப்பயிற்சியில் 71 அரசு பள்ளியில் உள்ள உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். மேலும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கோபிநாதன், நிர்மல்குமார், அம்பிகா, மைதிலி, குமுதா, கஸ்தூரி ஆகியோர் பயிற்சியளித்தனர்.

    இப்பயிற்ச்சியானது சிறப்பாக நடைபெறுவதை மாவட்ட திட்ட அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், சோலைத்தங்கம் ஆகியோர் பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    • புதிதாக 10 ஆயிரம் பேர் வந்தால் கூட வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய சூழல் உள்ளது.
    • வட மாநில தொழிலாளர்கள் விரைவாக தங்களுக்குரிய வேலையை கற்று கொள்கின்றனர்.

    திருப்பூர் :

    கொரோனா தொற்று, ஊரடங்கு என சவாலான காலகட்டத்திலும் கூட திருப்பூர் தொழில் துறையினர், தொழில் வளர்ச்சி சார்ந்த விஷயங்களில் விடாமல் சாதித்து வருவது வியப்புக்குரிய விஷயம் தான்.கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகளை வசப்படுத்த, வட மாநில தொழிலாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது தான் தற்போதைய யதார்த்த நிலை.

    ஆரம்ப காலங்களில் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாநிலங்களில் இருந்து மட்டுமே வட மாநில தொழிலாளர்கள் வந்த நிலையில் சமீபநாட்களாக நேபாளம், சட்டீஸ்கர், அசாம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வட மாநில தொழிலாளர்கள் வரத்துவங்கியுள்ளனர்.

    பின்னலாடை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.திருப்பூரில் நடந்த தேசிய ஆயத்த ஆடை கண்காட்சி ஏற்பாடு குறித்து தகவல் பரிமாற்றத்தின் போது இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில், ''ஒரு நாளில், புதிதாக 10 ஆயிரம் பேர் வந்தால் கூட வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய சூழல், திருப்பூரில் உள்ளது என்றார்.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக (ஏ.இ.பி.சி.,) செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியம் கூறுகையில், பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் விரைவாக தங்களுக்குரிய வேலையை கற்று கொள்கின்றனர்.தங்கள் வேலையை பாதியில் விட்டு செல்லாமல், அதில் தங்களை நிலைப்படுத்தி கொள்கின்றனர். வட மாநில தொழிலாளர்கள் இல்லாமல் பின்னலாடை நிறுவனங்களை இயக்குவது கடினம் என்றார்.

    • ஏற்காடு ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.
    • அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்வதாக ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.

    ஏற்காடு:

    ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏற்காடு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சாந்தவள்ளி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சேகர் கூட்டத்தை தொடங்கிவைத்தார்.

    கூட்டத்தில் ஊராட்சி நிதியில் இருந்து செய்யப்பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு. பின்பு செய்யப்பட வேண்டிய பணிகளுக்கு ஒப்புதல் கோரப்பட்ட்து. ஏற்காட்டில் உள்ள ஒரு சில அரசு பள்ளிகள் மிகவும் பழுதடைந்து உள்ளதாக வட்டார கல்வி அலுவலர் ஷேக் தாவூத் தெரிவித்தார்.

    பழுதடைந்த பள்ளிகள் புதுப்பிக்க ஆவன செய்யப்படும் என்று ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார். மேலும் துணை மின் நிலையம் அமைக்க மின்சார வாரியம் சார்பில் நிலம் தர கோரிக்கை விடுத்தனர்.

    தீயணைப்பு நிலையத்திற்கு இதுவரை சொந்த கட்டிடம் இல்லாமல் இருப்பதாகவும் தீயணைப்பு நிலையம் கட்ட சுமார் 2 ஏக்கர் நிலம் தர வேண்டியும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்வதாக ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் ஏற்காடு ஆணையாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலைவாணிமுரளி, வருதாயிரவி மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ×