என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "conditioner"
- முடி ஈரப்பதத்தை இழக்காமல் இருக்க, ஆப்பிள் சீடர் வினிகர் பெஸ்ட் சாய்ஸ்.
- வாரம் ஒருமுறை ஓர் அவகாடோ போட்டு அப்ளை செய்யவும்.
இயற்கையிலேயே மென்மையான கேசம் கொண்ட பெண்களுக்குக்கூட, பனிக்காலத்தில் கேசத்தின் ஈரத்தன்மை போய், வறண்ட சருமமாக மாறிவிடும். இதில் இருந்து தற்காத்துக் கொண்டு, உங்கள் முடியைப் பட்டுப்போல மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றசில டிப்ஸ்…
* முடி தன் இயற்கையான ஈரப்பதத்தை இழக்காமல் பாதுகாக்க, ஆப்பிள் சீடர் வினிகர் பெஸ்ட் சாய்ஸ். இது, அனைத்து சூப்பர் மார்க்கெட் மற்றும் காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கும். இதனுடன் சம அளவு தண்ணீர் கலந்து… தலைக்கு குளித்து முடித்ததும் கடைசியாக இதனை தலையில் விட்டு அலசவும். வறண்டு டல்லாக இருக்கும் முடிக்குப் புத்துயிர் கொடுக்கும்.
* வாரம் ஒருமுறை ஓர் அவகாடோ பழத்தின் சதைப்பகுதியுடன், முடியின் அளவைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தயிர் கலந்து முடிக்கு பேக் போல அப்ளை செய்யவும். அரை மணி நேரத்துக்குப் பின் தரமான ஷாம்புவால் முடியை அலசவும். இது சிறந்த கண்டிஷனர்.
* ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து, அதனுள் ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால் ஊற்றி சூடுபடுத்தவும். வெதுவெதுப்பான சூட்டில் இந்தப் பாலை தலையில் தடவி, வெந்நீரில் பிழிந்தெடுத்த டவலினால் தலையைக் கட்டி, இருபது நிமிடங்கள் கழித்து அலசலாம்.
* கால் கப் பாதாம் எண்ணெயுடன், ஒரு முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்துக் கலந்து பேஸ்ட் செய்து, தலையிலும் முடியிலும் அப்ளை செய்து 40 நிமிடங்கள் ஊறவைத்து அலசவும். இது கேசத்தை நன்றாகக் க்ளீன் செய்வதுடன், ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
* சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கக்கூடிய பிளெய்ன் மயோனைஸ் (சில்லி, சாக்லேட் போன்ற ஃப்ளேவர்கள் தவிர்க்கவும்) வாங்கி, இரண்டு ஸ்பூன் மயோனைஸுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெயைக் கலந்து, தலையில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து அலசினால், முடியானது மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். முட்டையின் வெள்ளைக் கருவில் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கினால், ஹோம் மேட் மயோனைஸ் ரெடி.
- எண்ணெய்ச் சுரப்பிகளின் குறைவு காரணமாக கூந்தல் வறட்சியடைகிறது.
- கூந்தல் எண்ணெய் தன்மையுடன் இருப்பதால் அழுக்கு சேர்ந்து விடும்.
கூந்தல் அதன் தன்மையை பொறுத்து வறண்ட கூந்தல், எண்ணெய் பசையுடைய கூந்தல் என்று பிரிக்கப்படுகிறது. ஒருவரின் கூந்தல் எந்த தன்மையுடையது என்பதை அறிந்து அதற்கேற்ப சில வழிமுறைகளை கடைபிடித்தால் பட்டு போன்ற பளபளப்பான கூந்தலை பெறலாம். வறண்ட மற்றும் எண்ணெய் பசை தன்மையுள்ள கூந்தலுக்கான சில டிப்ஸ்கள்...
வறண்ட கூந்தல்:
தலையில் எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாடு குறைவு காரணமாகவே கூந்தல் வறட்சியடைகிறது. மேலும், அதிகமாக சூரிய கதிர்வீச்சிற்கு உட்படுதல், கடின தன்மையுள்ள ஷாம்புகளை அதிகமாக பயன்படுத்துதல் மற்றும் சில ரசாயன சிகிச்சை போன்றவற்றாலும் கூந்தலில் வறட்சித் தன்மை உண்டாகிறது.
* வறண்ட கூந்தல் உடையவர்கள் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி தலையில் தடவி சிறிது நேரம் ஊறவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும். மேலும் மைல்டான அதாவது மிதமான தன்மையுடைய ஷாம்புக்களை பயன்படுத்தினால் கூந்தலின் வறட்சி தன்மை குறையும்.
* விளக்கெண்ணெய், கிளிசரின், வினிகர் ஆகியவற்றை சமஅளவு எடுத்து மிதமான ஷாம்புவுடன் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், கூந்தலின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும்.
* சிலருக்கு ஷாம்பு போட்டு குளிப்பதாலும் கூந்தல் அதிகப்படியாக வறண்டு காணப்படும். அப்படிபட்டவர்கள் தலைக்கு குளித்த பின் சிறிது பாலை தலையில் தேய்த்து நன்கு அலசிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் பட்டுப்போல மின்னும்.
* வறட்சியான கூந்தலை உடையவர்கள் ஹேர்-டிரையர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
எண்ணெய் பசையான கூந்தல்:
தலையில் காணப்படும் எண்ணெய் சுரப்பிகள் அதிகளவில் சுரப்பதால், கூந்தல் எண்ணெய் பசையுடன் காணப்படுகிறது. கூந்தல் எண்ணெய் தன்மையுடன் இருப்பதால், தூசு மற்றும் அழுக்கு போன்றவை எளிதில் சேர்ந்து விடும்.
* எண்ணெய் பசையான கூந்தல் உடையவர்கள், அடிக்கடி தலைக்கு குளிப்பதோடு, தலையில் தூசு மற்றும் அழுக்கு போன்றவை சேராமல் பராமரிக்க வேண்டும்.
* எண்ணெய் தன்மை கூந்தல் உடையவர்கள் மருதாணி அல்லது எலுமிச்சை போன்ற பொருட்கள் கலந்த ஷாம்புக்களாக வாங்கி பயன்படுத்துவது நல்லது.
* வேப்பிலைச் சாறுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க, தலையில் அதிகப்படியாக காணப்படும் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கும்.
* கேரட்டை வேகவைத்து மசித்து, தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், எண்ணெய் பசை கட்டுப்படும். மேலும் எண்ணெய் பசை கூந்தல் உடையவர்கள் உணவில் எண்ணெய் பதார்த்தங்களை குறைத்துக் கொள்வது நல்லது.
- எலக்ட்ரோலைட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
- இளநீர் கூந்தல் வறட்சி அடைவதை தடுக்க உதவும்.
இளநீர் சுவையான பானம் மட்டுமல்ல கூந்தலுக்கு எண்ணற்ற நன்மைகளையும் வழங்கக்கூடியது. கூந்தல் பராமரிப்பில் இளநீரை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்களை பார்ப்போம்.
உச்சந்தலையில் நீர்ச்சத்து:
இளநீரில் வைட்டமின்கள், தாதுக்கள், எலக்ட்ரோலைட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை `ஹேர் வாஷாக' பயன்படுத்தும்போது முடிகளுக்கும், உச்சந்தலைக்கும் போதுமான நீர்ச்சத்தை அளிக்கும். இந்த இயற்கை நீரேற்றம், கூந்தல் வறட்சி அடைவதை தடுக்க உதவும். பொடுகு போன்ற பிரச்சினைகளையும் குறைக்கும்.
முடி உடைதல்:
இளநீரில் இருக்கும் ஈரப்பதமூட்டும் பண்புகள் முடி நெகிழ்வுத்தன்மை அடைவதற்கு வழிவகுக்கிறது. முடி வெடிப்பு, முடி உடைதல் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. இளநீரை பயன்படுத்துவதால் நன்கு நீரேற்றமடைந்திருக்கும் கூந்தல், `ஹேர் பிரஷ்' கொண்டு சீவுவதாலோ, சுற்றுப்புற காரணிகளாலோ சேதம் அடைவதற்கான வாய்ப்பும் குறைவு. ஒருவேளை பாதிப்படைந்தாலும் விரைவாகவே இயல்புக்கு திரும்பும் தன்மை கொண்டது.
முடி உதிர்தல்:
மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கூந்தல் பராமரிப்பின்மை உள்பட பல்வேறு காரணிகள் முடி உதிர்தலுக்கு காரணமாக அமையலாம். இளநீரில் உள்ளடங்கி இருக்கும் ஊட்டச்சத்து பண்புகள் இந்த பிரச்சினைகளை தீர்க்க உதவும். முடி உதிர்வை குறைக்கும். மயிர்கால்களை வலுவாக்கி முடியையும் பலப்படுத்தும். முடி உதிர்தலை குறைக்கும்.
பி.எச். சமநிலை:
இளநீரின் பி.எச் அளவு கூந்தலின் இயற்கையான பி.எச் அளவை ஒத்திருக்கும். அதனால் இளநீரை ஹேர் வாஷாக பயன்படுத்துவது பி.எச். சமநிலையை மீட்டெடுக்க உதவும். கூந்தல் ஆரோக்கியத்திற்கு உகந்த சூழலை உருவாக்கும். இந்த சமச்சீரான பி.எச் அளவுகள் மென்மையான, பளபளப்பான கூந்தலுக்கு வித்திடும்.
இயற்கை கண்டிஷனர்:
இளநீர், வணிக ரீதியான ஹேர் கண்டிஷனர்களுக்கு சிறந்த இயற்கை மாற்றாகவும் விளங்கக்கூடியது. கூந்தலில் ஏற்படும் முடிச்சுகள் மற்றும் சிக்கல்களை நீக்கி மிருதுவாக்க உதவுகிறது. சீப்பு, ஹேர் பிரஷ் கொண்டு தலைமுடியை சீவுவதையும் எளிதாக்குகிறது. சுருள் முடி, அடர்த்தியான முடி கொண்டவர்கள் கூந்தலை அலசுவதற்கு இளநீரை பயன்படுத்துவது சிறந்த தேர்வாக அமையும்.
பிரகாசம்:
இளநீரில் உள்ளடங்கி இருக்கும் நீரேற்ற பண்புகள் கூந்தல் பிரகாசத்திற்கும் பங்களிக்கின்றன. இளநீரை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பொலிவிழந்த முடியை பளபளப்பானதாக மாற்றலாம். தலைமுடியை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் பராமரிக்கலாம்.
மென்மை:
கடுமையான ரசாயனங்கள் கொண்ட சில வணிக ரீதியான முடி தயாரிப்பு பொருட்களுடன் ஒப்பிடும்போது இளநீரை உச்சந்தலையில் பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாக இருக்கும். ஒவ்வாமை உள்ளிட்ட எளிதில் பாதிப்படையும் கூந்தல் உள்பட அனைத்து வகையான முடிகளுக்கும் இளநீரை பயன்படுத்தலாம். இதனை `ஹேர் வாஷாக' பயன்படுத்துவது இயற்கையாகவே கூந்தலை சுத்திகரிப்பு செய்த திருப்தியை கொடுக்கும்.
வாசனை:
கூந்தல் பராமரிப்புக்கு அப்பால், இளநீர் இனிமையான நறுமணத்தை வழங்கும். இயற்கையான நறுமண சிகிச்சையாக செயல்படும். கூந்தலுக்கு புத்துணர்ச்சியையும், வாசனையையும் ஏற்படுத்துவதோடு மனநிலையையும் மேம்படுத்தும்.
முடி வளர்ச்சி:
இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. மேலும் இந்த ஊட்டச்சத்துக்கள் மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான, வலுவான முடி வளர்ச்சியை தூண்டுகின்றன. இளநீரை `ஹேர் வாஷாக' வழக்கமாக பயன்படுத்துவது அடர்த்தியான, நீளமான கூந்தலுக்கு வித்திடும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்