search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "consumption"

    • உடற்கூராய்வின் முடிவிலேயே காரணம் தெரிய வரும் என கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
    • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து டிஜிபி விளக்கம்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    அப்பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து 5 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராயம் விற்றவர்களை தேடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார்,

    கள்ளச்சாராயத்தை ஒழிக்க மாவட்டம் முழுவதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தியை பரப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், "உடற்கூராய்வின் முடிவிலேயே காரணம் தெரிய வரும் என கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஏற்கனவே 8 பேர் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 7 பேர் என மொத்தம் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இறந்தவர்களின் உடல்கள் காவல் துறையினரால் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    உயிரிழந்தவர்களுக்கு முதலில் காது கேட்காமல் போனதாகவும், அடுத்து கண் பார்வை பறிபோனதாகவும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறுகின்றனர்.

    அரசு தரப்பில் இணை நோய் காரணமாக உயிரிழப்பு என்று கூறிய நிலையில், சிலருக்கு எந்தவித நோய்களும் இல்லை என உயிரிழந்தவர்களின் உறுவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து டிஜிபி தரப்பில் கூறுகையில்,"கள்ளக்குறீச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து தான் உயிரிழப்பா என்பதை கண்டறிய மூத்த போலீஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    காவல்துறையின் உயர்மட்ட அளவில் தீவிர விசரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் உண்மை தன்மையை ஆராய்ந்த பிறகு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்றார்.

    ×