search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cooley"

    • தமிழ் சினிமா ரசிகர்களிடையே பகத் பாசிலுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
    • ஆவேசம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை பெற்றது.

    ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். படத்தில் அமிதாப்பச்சன், பகத்பாசில், துஷாரா விஜயன், மஞ்சுவாரியர் உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற அக்டோபர் 10-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

    அடுத்ததாக ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கியது.

    முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்துள்ள பகத்பாசில் 'கூலி' படத்திலும் ரஜினியுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

    இதையொட்டி படக்குழுவினர் பகத்பாசிலிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தில் பகத்பாசிலின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பகத்பாசிலுக்கு மவுசு அதிகரித்துள்ளது. மலையாளத்தில் தயாராகி பகத்பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை பெற்றது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஸ்ருதியும் ஐதராபாத் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • 'சூப்பர்ஸ்டார் -லோகி சம்பவம் பிகின்ஸ். கூலி ஷூட்டிங் இன்று தொடங்கியது' என்ற கேப்ஷனுடன் அந்த போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

     ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் படத்தில் பிசியாக நடித்து வரும் ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கூலி என்று பெரியரிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று [ஜூலை 5] தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.

    அதன்படி படப்பிடிப்பிற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த். இந்த படத்தில் கமல் ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக முன்னதாக கூறப்பட்டுவந்த நிலையில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஸ்ருதியும் ஐதராபாத் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சுமார் 35 நாட்கள் நடக்க உள்ள படப்பிடிப்பின் ஆரம்பக்கட்ட பணிகள் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு துவங்கிவிட்டது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

     

    'சூப்பர்ஸ்டார் - லோக்கி சம்பவம் பிகின்ஸ். கூலி ஷூட்டிங் இன்று தொடங்கியது' என்ற கேப்ஷனுடன் அந்த போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, 'கூலி' படத்தில் சினிமா ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் பணியாற்ற உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திரைக்கதை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
    • ஜெயிலர் 2-ம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. இதில் பிறமொழிகளில் இருந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் நடித்து இருந்தனர்.

    ஜெயிலர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து ஜெயிலர் 2-ம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான திரைக்கதை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

    இன்னொரு புறம் ஜெயிலர் 2-ல் நடிக்கும் இதர நடிகர், நடிகை தேர்வும் நடக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்து அவரோடு பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராக இருக்கிறது.

    ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை முடித்து விட்டு கூலி படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த சில தினங்களில் நடக்க உள்ளது. இந்த படத்தை முடித்து விட்டு ஜெயிலர் 2-ம் பாகத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×