என் மலர்
நீங்கள் தேடியது "cop"
- கலவரக்காரர்கள் உடன் நடைபெற்ற மோதலில் சுமார் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- பயங்கரவாதிகள் M-16 மற்றும் AK-47 ரக அசால்ட் ரைஃபிள் மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கிகளை பயன்படுத்தினர்.
மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி போலீசார் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் பலத்த காயமுற்றனர். கடந்த மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டு வருகிறது.
முன்னதாக கலவரக்காரர்கள் உடன் நடைபெற்ற மோதலில் சுமார் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்தார். இது பற்றி மேலும் பேசிய அவர் கூறியதாவது,
"பயங்கரவாதிகள் M-16 மற்றும் AK-47 ரக அசால்ட் ரைஃபிள் மற்றும் ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை பயன்படுத்தினர். அவர்கள் ஏராளமான கிராமங்களுக்குள் புகுந்து, வீடுகளுக்கு தீ வைத்தனர். ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் மூலம், அவர்களுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கை எடுக்க துவங்கி விட்டோம். கிட்டத்தட்ட 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டஎனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன," என்று தெரிவித்தார்.
கலவரம் ஏற்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று பயணம் செய்கிறார். அமைதியை நிலைநாட்ட சமூகங்கள் அமைதி காக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தி உள்ளார். முன்னதாக ராணுவ தளபதி மனோஜ் பாண்டே மணிப்பூருக்கு விரைந்து, அங்குள்ள சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்தார்.
திருப்பதி:
திருப்பதியில் உள்ள செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு திருவண்ணாமலையை சேர்ந்த 60 கூலி தொழிலாளர்கள் திருப்பதி வன பகுதியில் செம்மரம் வெட்ட லாரியில் வந்து கொண்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று அதிகாலை 3 மணிக்கு செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி வடமாலைபேட்டை செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு லாரி செக்போஸ்ட் அருகே திடீரென நின்றது. லாரியில் இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடினர்.
லாரியில் இருந்து குதித்ததில் 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்ட போலீசார் அவர்களை திருப்பதி ரூயா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி (வயது 41), ரவி (28), கோவிந்தசாமி (28), சக்கரவர்த்தி (28), கார்த்திக் (28), திருப்பதி (28), வேதநாயகம் (41) என தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.
திருப்பதியில் கூலி வேலை செய்ய ஒரு லாரியில் 60 பேர் வந்ததாகவும், செம்மரம் வெட்ட வரவில்லை என கூறி உள்ளனர். #semmaramSmuggling
சென்னை:
திருச்சியை சேர்ந்தவர் எம்.ஆனந்த் மோகன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் என்ற ஊரில் ஹகோகரணேஸ்வரர்-பிரஹதம்பாள் திருக்கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன், 3 அடி உயரம் கொண்ட பச்சை மரகத கல்லால் ஆன ஸ்ரீ பிரகதம்பாள் சாமி சிலை செய்து, இந்த கோவிலில் வைத்தார்.
பின்னர், புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட ஸ்ரீ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான், இந்த சிலையை எடுத்து விட்டு, அதற்கு பதில் கிரானைட் கற்களால் ஆன மாற்றுச் சிலையை செய்து கோவிலில் வைத்து விட்டார்.
அதேநேரம், அந்த பச்சை மரகத சிலையை திருச்சியில் உள்ள தொண்டைமான் அரசுகளுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில், ஒரு இடத்தில் புதைத்து வைத்தார். இந்த நிலையில், அந்த விலை மதிக்க முடியாத பச்சை மரகத சிலை, பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு விட்டது. அந்த சிலை புதைக்கப்பட்ட நிலம், தற்போது கார்த்திக் தொண்டைமானுக்கு சொந்தமானதாக உள்ளது.

எனவே, மாயமான சிலை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசிடம் கடந்த 2013ம் ஆண்டு 2 முறையும், கடந்த ஜூன் மாதமும் புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, என் புகார் மீது வழக்குப்பதிவு செய்து, விலை மதிக்க முடியாத பச்சை மரகத சாமி சிலையை மீட்கும்படி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கோபால கிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, இந்த மனுவுக்கு சிலைக் கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வருகிற 20ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
