search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "couple arrested"

    • குமரி மாவட்டம் மட்டுமின்றி சென்னை, அறந்தாங்கி, பாண்டிச்சேரி, கூடலூர், தர்மபுரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தம்பதி கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
    • அரசு ஓய்வூதியம் மற்றும் கடனுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்களிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர்.

    குழித்துறை:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரிகள், பஸ் நிலையங்களில் பெண்களை குறி வைத்து நூதன முறையில் ஒரு கும்பல் நகை, பணத்தை பறித்து சென்றது.

    இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த கொள்ளையர்களைப் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரராஜ், மகேஷ் தலைமை காவலர் ரெஜிகுமார்,சேம்,பிஜு ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது நடத்திய விசாரணையில் குமரி மாவட்டத்தில் கைவரிசை காட்டியது மதுரை எலைட் நகர் போடிலைன் பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் (வயது40) அவரது மனைவி பார்வதி (38) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் குழித்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இவர் குமரி மாவட்டம் மட்டுமின்றி சென்னை, அறந்தாங்கி, பாண்டிச்சேரி, கூடலூர், தர்மபுரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. அரசு ஓய்வூதியம் மற்றும் கடனுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்களிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர்.

    இவர்களிடமிருந்து 10 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சித்திரவேல், பார்வதி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பவானி காலிங்கராயன் பாளையம் பகுதியில் வாலிபர்களுக்கு கஞ்சா பொட்டலம் தயாரித்த போது போலீசில் சிக்கியது தெரியவந்தது.
    • விஜயன், பவித்ரா மீது கொலை வழக்கு இருப்பதும், இது தவிர விஜயன்மீது கஞ்சா மற்றும் 18 அடிதடி வழக்குகள் இருப்பதும்தெரியவந்தது.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் பாளையம் மாட்டு ஆஸ்பத்திரி அருகே ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் ஒரு பெண் உள்பட 4 பேர் இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த பெண் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 300 கிராம் எடை கொண்ட 42 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு இருந்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சரவணா தியேட்டர் பகுதியை சேர்ந்த சரவணன் (24), பவானி காலிங்கராயன் பாளையம் என்.எஸ்.எம்.வீதியை சேர்ந்த மெய்யப்பன் (24). சித்தார் குப்பிச்சி பாளையத்தை சேர்ந்த அஜித் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தப்பி ஓடியது பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆற்றோரம் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவரது மனைவி மகேஸ்வரி என்கிற பவித்ரா (24) என்று தெரியவந்தது.

    இதையடுத்து சித்தோடு போலீசார் பவித்ராவை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த அவரது கணவர் விஜயன் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இதையடுத்து போலீசார் விஜயன் மற்றும் அவரது மனைவி பவித்ரா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதுப்பற்றிய விபரம் வருமாறு:-

    விஜயன் அவரது மனைவி பவித்ரா ஆகிய 2 பேரும் ஈரோடு மாவட்டம் பவானி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சேலம் மாவட்டம் சங்ககிரி புள்ளா கவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்து உள்ளனர். இதற்காக இவர்கள் 2 நாட்களுக்கு ஒரு முறை அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று கஞ்சாவை பொட்டலங்களாக தயாரித்து அவர்களுக்கு கொடுத்து வந்தது தெரியவந்துது.

    இதேபோல தான் பவானி காலிங்கராயன் பாளையம் பகுதியில் வாலிபர்களுக்கு கஞ்சா பொட்டலம் தயாரித்த போது போலீசில் சிக்கியது தெரியவந்தது.

    மேலும் விஜயன், பவித்ரா மீது கொலை வழக்கு இருப்பதும், இது தவிர விஜயன்மீது கஞ்சா மற்றும் 18 அடிதடி வழக்குகள் இருப்பதும்தெரியவந்தது. மேலும் விஜயன் குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலை ஆனதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    247 பவுன் நகைகளை கொடுத்து பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனர்.
    மதுரை:

    மதுரை ஐராவதநல்லூர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி புவனேசுவரி(வயது 32). இவர்கள் நகை வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் புவனேசுவரி தெப்பக்குளம் குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த நகை வியாபாரி ஆனந்த்பாபு(35), அவருடைய மனைவி பிரியா (31) ஆகியோர் என்னிடம் நகைகளை கொடுத்து அதற்கு பதிலாக பணம் வாங்கி வந்தனர். இவ்வாறு அவர்கள் மொத்தம் 247 பவுன் வரை நகைகளை கொடுத்து ரூ.70 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனர். இந்தநிலையில் அவர்கள் கொடுத்த நகைகளை பரிசோதித்து பார்த்தபோது, அவை அனைத்தும் போலி நகைகள் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து நான் அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்க மறுப்பு தெரிவித்து, மிரட்டல் விடுத்தனர். எனவே ஏமாற்றிய தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    அதன்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகை கொடுத்து ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஆனந்த்பாபு, அவருடைய மனைவி பிரியா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×