search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Couple shooting"

    • தம்பதியை பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று விட்டு தப்பியோடினர்.
    • கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹன்சி பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    தம்பதியை பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று விட்டு தப்பியோடினர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவர்களுக்கு திருமணம் நடந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது.

    போலீசார் விசாரணையில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் ஹிசார் மாவட்டம் சுல்தான்பூர் கிராமத்தை சேந்தவர் என்றும் அந்த பெண் பக்கத்து கிராமம் படாலை சேந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்த 7 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×