search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CPCID Police Investigation"

    • வழக்கில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
    • சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை

    கரூர்:

    கரூர் தோரணக்கல்பட்டியில் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு செய்ததாக மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் ரகு, சித்தார்த்தன், மாரியப்பன், செல்வராஜ், யுவராஜ் பிரவீன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் தன்னையும் சேர்க்கலாம் என கருதிய முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 2 மனுக்கள் தள்ளுபடி ஆனது.

    இதற்கிடையே பிரச்சனைக்குரிய அந்த 22 ஏக்கர் நிலம் தொடர்பாக கரூர் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உட்பட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் கரூர் வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

    பின்னர் வழக்கு தொடர்புடைய யுவராஜ், செல்வராஜ், நிலம் மாற்றியதில் சாட்சியாக செயல்பட்ட முனிய நாதபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி ஆகியோரது வீடுகளில் சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்து 8-ந் தேதி திடீர் சோதனை நடத்தினர்.

    அதன் பின்னர் கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய அலுவலகம் என 6 இடங்களில் கடந்த 7-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று கரூர் ஆண்டாங் கோவில் மேற்கு ஊராட்சி அம்மன் நகரில் உள்ள அ.தி.மு.க. ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் விஜயபாஸ்கரின் ஆதரவாளருமான கவின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அவர் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தந்தை குழந்தைவேலிடம் விசாரணை செய்தனர். அதன் பின்னர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த கரூர் பசுபதி செந்தில் உட்பட 7 பேரை திடீரென கரூர் தான்தோன்றி மலையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆடு மேய்த்து கொண்டிருந்த பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
    • இந்த நிலையில் தமிழக அரசு, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு பட்டதாரி இளம்பெண் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்து உத்தர விட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி மாலை நேரத்தில் அப்பகுதியில் சீம கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டைகையில் பணி புரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    தொடர் வன்முறை

    இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்ட கைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பேருந்து போன்றவற்றிற்கு தீ வைப்பு சம்பவங்கள், ஏரி தண்ணீ ரில் விஷம் கலந்து மீன்கள் செத்தது என அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. கடந்த 13-ம் தேதி நள்ளிரவு வி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த எம்ஜிஆர் என்கிற முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்ட கையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் அறைக்குள் மர்ம நபர்கள் புகுந்து வட மாநில தொழி லாளர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் கென்ட் (19) என்பவர் உயிரிழந்தார்.

    கடந்த 18- ந் தேதி இரவு ஜேடர்பாளையம் சரளைமேடு பகுதியில் உள்ள முருகேசன் என்ப வரது வாழைத்தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் 600-க்கும் மேற்பட்ட வாழைகளை வெட்டி சாய்த்தனர்.

    இதையடுத்து இப்பகுதி களில் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்கும் பொருட்டு மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இரவு பகலாக பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியி லும் ஈடுபட்டு வருகின்றனர்.

    சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கியது

    இந்த நிலையில் தமிழக அரசு, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு பட்டதாரி இளம்பெண் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்து உத்தர விட்டது. இதையடுத்து நாமக்கல் சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா, விசாரணை அதி காரியாக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ஜேடர்பாளையம் போலீசார், கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் பிரபாவிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து கரப்பாளை யத்தில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு நேற்று சென்ற சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் பிரபா மற்றும் போலீசார், அவரது கணவர், அவரது குடும்பத்தி னர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலங்களை பதிவு செய்தனர்.

    கொலை நடந்த இடத்தை யும், அப்பகுதியில் உள்ள பொது மக்களிடமும் தீவிர விசாரணை நடத்த உள்ள னர். சி.பி.சி.ஐ.டி போலீ சாரின் முழு விசா ரணை நடந்த பிறகே கொலை சம்பந்தமான உண்மை தெரியவரும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ×