என் மலர்
நீங்கள் தேடியது "CPIM"
- நல்லகண்ணு பிறந்தநாள் முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- அய்யா நல்லகண்ணுவின் வாழ்க்கை அடுத்தடுத்த தலைமுறைக்கு ஒரு பாடம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இவரது பிறந்தநாள் முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நல்லகண்ணுவின் பிறந்தநாளையொட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியலின் முதுபெரும் தலைவர் - விடுதலைப் போராட்ட வீரர் - பொதுவுடைமை இயக்கப் போராளி அய்யா நல்லகண்ணு அவர்களின் 100 ஆவது பிறந்த நாளில் அவரை வாழ்த்தி மகிழ்கிறோம்.
நேர்மையும் - எளிமையுமே பொதுவாழ்விற்கான அடித்தளம் என்பதன் வாழும் உதாரணமாகத் திகழும் அய்யா நல்லகண்ணு அவர்களின் வாழ்க்கை அடுத்தடுத்த தலைமுறைக்கு ஒரு பாடம்.
நம் திராவிட மாடல் அரசால் "தகைசால் தமிழர்" விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட , அய்யாவின் சமரசமற்ற மக்கள் பணி - கொள்கை உறுதியை என்றும் போற்றுவோம்.
வாழ்க பல்லாண்டு!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு இல்லாதது தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
- நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகை வழங்க மறுப்பது பொருத்தமல்ல என்றார்.
பொங்கல் தொகுப்பு திட்டத்துடன், பரிசுத்தொகையும் வழங்க தமிழ்நாடு அரசை முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் தமிழர்களின் முக்கியமான பண்பாட்டுத் திருவிழா ஆகும். பொங்கல் சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பு திட்டத்தை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
அதேநேரத்தில் வழக்கமாக வழங்கப்படும் பொங்கலுக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்படாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
தமிழக நிதியமைச்சர் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்வது, இயற்கை பேரிடருக்கு தமிழ்நாடு அரசு கோரிய நிதியினை தராமல் சொற்ப நிதியை வழங்கியிருப்பது, வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் போன்ற காரணங்கள் அனைத்தும் ஏற்கத்தக்கது தான்.
இருப்பினும் பொங்கல் பண்டிகைக்கு நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி வழங்க மறுப்பது பொருத்தமல்ல.
எனவே, தமிழ்நாடு அரசு நிதி சிரமம் இருப்பினும், பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றப்படுவதைப் போல இந்த ஆண்டு பொங்கலுக்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகையாக ரூ. 1000/- வழங்கிட முன்வர வேண்டுமென்று சிபிஐ (எம்) மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை விட தனியார் பள்ளிகளில் அதிக அளவு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
- 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில் ஏறக்குறைய 65 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
தமிழகத்தில் 500 அரசுப்பள்ளிகள் தனியாருக்கு தத்துக்கொடுக்கும் முயற்சி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதன் நோக்கம் படிப்படியாக அரசுப்பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியை தனியார்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகும். அரசுப்பள்ளிகள் தனியார்மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய, விளிம்புநிலை குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தில் ஏறக்குறைய 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில் அரசுப்பள்ளிகளில் 24310 தொடக்கப்பள்ளிகள், 7024 நடுநிலைப்பள்ளிகள், 3135 உயர்நிலைப்பள்ளிகள், 3110 மேல்நிலைப்பள்ளிகள் என 37579 பள்ளிகள் இயங்குகின்றன. அரசு உதவி பெறும்பள்ளிகள் 8328 செயல்படுகின்றன. இதில் 46 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் குறைந்த அளவு இயங்கும் 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில் ஏறக்குறைய 65 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அரசுப்பள்ளிகளின் மூன்றில் ஒரு பங்கு கூட செயல்படாத தனியார் பள்ளிகள் தான் அதிக அளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை விட தனியார் பள்ளிகளில் அதிக அளவு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
2500 பள்ளிகளில் கழிப்பறை வசதிகள்கூட இல்லையென்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆரம்பப்பள்ளிகளின் இடைநிற்றல் 16 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்தி கல்வித் தரத்தை மேம்படுத்தப்படுவதற்கு பதிலாக அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தத்துக்கொடுக்க முனைவது தமிழக ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயலாகும்.
பல தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானம், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகளே கிடையாது. கல்வி கொடுக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டுமே தவிர அரசு பள்ளிகளுக்கு செலவிடாமல் அதிலிருந்து தமிழ்நாடு அரசு தப்பிப்பது, நிதி சுமையை காரணம் காட்டி தனியாருக்கு தத்துக்கொடுப்பது முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையாகும்.
அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துகொடுக்கும் நடவடிக்கையினை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசே அதற்கான கூடுதல் நிதியை ஒதுக்கி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 'அரசுப் பள்ளிகள் தனியாரால் தத்தெடுப்பு’ என வெளியிட்ட அறிக்கை குறித்து தகவல்.
- நான் அந்த செய்தியை அடிப்படையாக வைத்து தான் அறிக்கை வெளியிட்டேன்.
'அரசுப் பள்ளிகள் தனியாரால் தத்தெடுப்பு' என வெளியிட்ட அறிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-
பத்திரிக்கையில் வரக்கூடிய செய்தியை அடிப்படையாக வைத்துதான் அறிக்கையோ அல்லது பதிலோ வழங்கவேண்டி இருக்கிறது.
அந்த செய்தியில், அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்கிறார்கள் என தகவல் கிடைக்கிறது. அவ்வாறு யார் செய்தி போட்டார்களோ அவர்களை தான் கேட்க வேண்டும்.
நான் அந்த செய்தியை அடிப்படையாக வைத்து தான் அறிக்கை வெளியிட்டேன்.
இதுபோன்ற செய்தி வந்தவுடன் தமிழக அரசு அல்லது அமைச்சர் மறுப்பு தெரிவித்திருந்தால் நாங்கள் எதுவும் கூறப்போவதில்லை. அரசு, செய்தியை மறுக்காததால் எங்களுக்கு வேறு வழி இல்லை.
இன்றைக்கு தமிழக அரசு அவ்வாறு செய்யும் முடிவு இல்லை என கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், அவ்வாறு செய்தி வந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநில மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.
- கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பதவியில் இருந்து விலக கே.பாலகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதனால், தன்னை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
விழுப்புரத்தில் கட்சியின் மாநில மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் கட்சியில் எந்த பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
அதன்படி, விழுப்புரம் மாநில மாநாட்டில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
- மாநில மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.
- கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியனது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பதவியில் இருந்து விலக கே.பாலகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் கட்சியின் மாநில மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.
மேலும், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் கட்சியில் எந்த பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது" என குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, விழுப்புரம் மாநில மாநாட்டில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியானது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில், 80 உறுப்பினர்கள் சண்முகத்தை தேர்வு செய்துள்ளனர்.
- சிபிஐஎம் புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு.
- வேலை வழங்குவதற்கு பதிலாக பாஜக வேலையை பறிக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில், 80 உறுப்பினர்கள் சண்முகத்தை தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில், மதவெறி சக்திகளை எதிர்க்கும் திமுகவுடன் தொடர்ந்து பயணிப்போம் என்று சிபிஎம் கட்சியின் புதிய மாநில செயலாளர் சண்முகம் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பதில் அவர் மேலும் கூறியதாவது:-
மதவெறி, சாதிவெறிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். மதவெறி சக்திகளை எதிர்க்கும் திமுகவுடன் தொடர்ந்து பயணிப்போம்.
போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம் அரசியல் சாசனத்தில் உள்ளவை, எந்த அரசும் அதை நிறுத்த முடியாது. திமுக வெளிச்சத்தில் தான் நாங்கள் இருக்கிறோம் என்று முரசொலியில் சொல்வது பொருத்தமானதல்ல.
வேலை வழங்குவதற்கு பதிலாக பாஜக வேலையை பறிக்கிறது. அரசுத்துறையில் நிரந்தர பணி இருக்காது என்ற நிலையை பாஜக அரசு ஏற்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக சண்முகம் தேர்வு.
விழுப்புரம் மாநில மாநாட்டில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு செய்யப்பட்டார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில், 80 உறுப்பினர்களால் சண்முகம் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சண்முகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத் தோழர்களுக்காகவும் உழைத்த அவருக்கு கடந்த ஆண்டு அண்ணல் அம்பேத்கர் விருதை கழக அரசு வழங்கியது. அத்தகைய சிறப்புக்குரிய தோழர் சண்முகம் சிபிஐஎம்-ன் மாநில புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கும், கழகக் கூட்டணியின் அனைத்து வெற்றிகளுக்கும் எந்நாளும் உழைத்த தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களின் பணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடைபெற்றிருந்தாலும் மக்கள் பணிக்கு விடைகொடுக்காமல் நாளும் உழைப்பவர் தோழர் கே.பாலகிருஷ்ணன் என்பதை நாடறியும்.
இரு தோழர்களும் தங்கள் பணியைத் தொய்வின்றித் தொடர வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் இசைப்பதும் தான் மரபு.
- பாஜக அரசு விரும்புகிற படி நடந்து கொள்வதை ஆளுநர் ஆர்.என். ரவி வழக்கமாகக் கொண்டுள்ளார்.
சட்டமன்ற மரபையும், ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக்கும் தமிழ்நாடு ஆளுநருக்கு சிபிஐ (எம்) வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிபிஐ (எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்குவது என்பது கடந்த கால மரபு அடிப்படையில் அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கடமைகளில் ஒன்று. இந்த சட்டப்பூர்வமான கடமையை நிறைவேற்றாமல் இன்று ஆளுநர் அவர்கள் வெளிநடப்பு செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் இசைப்பதும் தான் மரபு. இந்த மரபை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை காலங்காலமாக பின்பற்றி வருகிறது. இந்த மரபுகளை மதிக்காமலும், ஆளுநருக்கு உள்ள கடமைகளை நிறைவேற்றாமலும் ஒன்றிய பாஜக அரசு விரும்புகிற படி நடந்து கொள்வதை ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த காலங்களிலும் இதேபோல் அவர் சட்டமன்றத்திலிருந்து தொடர்ந்து அரசியல் உள்நோக்கத்துடன் வெளிநடப்பு செய்து வந்துள்ளதை தமிழக மக்கள் அறிவார்கள்.
எனவே, சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாகவும் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்டுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் ஆளுநர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும். அத்தகைய முடிவை ஆளுநர் எடுக்காவிட்டால் ஒன்றிய அரசு அரசியல் சாசன சட்டத்தை அவமதிக்கும் அவரை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென்று சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு ஆளுநரின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையினை கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் வலுவான கண்டனக் குரலெழுப்பிட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வி நிலையங்களில் மாநில அதிகாரத்தை பறித்து, ஆர்எஸ்எஸ் ஊடுருவலுக்கு வழிவகுக்கும்.
- UGC விதிமுறைகளை எதிர்த்து வீழ்த்துவோம்
பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு பரிந்துரைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள செய்தியில், "பல்கலைக்கழக மான்ய குழுவின் வரைவு விதிமுறைகள் மாநில உரிமைகளை பறித்து அதிகார குவிப்பிற்கு வழி வகுப்பதோடு, கார்ப்பரேட் மயத்திற்கும் வழி வகுப்பதாகும். கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருந்தாலும் தொடர்ந்து மாநில உரிமைகளை பறிக்கிற நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிமுறைகள் துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களை முழுமையாக பறித்து கவர்னரிடம் ஒப்படைப்பதாக உள்ளது. வேந்தர் என்ற முறையில் ஆளுநரே மூன்று உறுப்பினர் தெரிவுக் குழுவை நியமிப்பார் என்பதும் அவருடைய தெரிவு நபரே அக்குழுவின் தலைவராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பொருள் மக்களால் தேந்தெடுக்கப்பபட்ட மாநில அரசுக்கு துணைவேந்தரை தேர்வு செய்வதில் எந்த பங்கும் இருக்காது என்பதே. ஏற்கனவே எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் துணைவேந்தர்களை தன்னிச்சையாக நியமிக்கும் போக்குகளை ஆளுநர்கள் கடைப்பிடித்து வரும் வேளையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிமுறைகள் அத்தகைய அராஜக போக்கிற்கு ஆளுநர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் அளிக்கிறது.
இந்த வரைவு விதிமுறைகள் மத்திய சட்டத்தில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமின்றி மாநிலச் சட்டங்களால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் அவற்றின் உறுப்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டிருப்பது கூட்டாட்சி தத்துவத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள கடுமையான தாக்குதலாகும்.
மேலும் நேரடியாக கல்விப்புலம் சாராத தொழில், பொது நிர்வாகம், பொதுத்துறை நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை வகித்தவர்களும் துணைவேந்தர்களாக நியமிக்கப்படலாம் என்ற வரைவு விதிமுறையில் உள்ள அம்சமும் அபாயகரமானதாகும். உயர் கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலத்துடன் கூடிய நபர்களை நியமிப்பதற்கும், சித்தாந்த ரீதியான ஊடுருவல்களை செய்வதற்குமான நடவடிக்கையாகும் இது.
தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரால் தொடர்ந்து கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிராக ஒன்றிய அரசு தொடர்ந்து வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்த வரைவு விதிமுறைகள் அமைந்துள்ளன. வணிகமயம் – மதவெறி மயம் – அதிகாரக் குவிப்பு ஆகிய இலக்குகளை நோக்கிய பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு பரிந்துரைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேசிய கீதமே பாட முடியாது என்று சொன்னதாக புரளி கிளப்புகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
- ஆளுநர் குறைந்தபட்சம் பொறுப்புணர்வோடும் நாகரீகத்தோடும் நடந்து கொள்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில், "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தன்னுடைய எக்ஸ் பதிவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்களை அவரது முதலமைச்சர் பதவியை குறிப்பிடாமல் ஒரு தனி மனிதராக பாவித்து ஒரு பதிவிட்டுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியதாகும்.
தமிழ்நாட்டின் மரபின்படி தான் நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் பாட முடியுமென்று சொன்னதை, தேசிய கீதமே பாட முடியாது என்று சொன்னதாக புரளி கிளப்புகிறார். நாளை வருகிற இன்னொரு ஆளுநர் இன்னொரு நேரம் பாட வேண்டுமென்று கேட்டால் அப்படி செய்ய முடியுமா?
மேலும், இதனால் அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பு செய்துவிட்டார்கள். அவர்கள் தத்துவமே அப்படித்தான் என்று பதிவிடுவது எல்லாம் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். பாணி திசைதிருப்பல் வேலையே. ஆளுநரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், 'திராவிட மாதிரி என்று எதுவும் இல்லை, திராவிடத் தத்துவம் காலவாதியாகிவிட்டது' என்று ஒரு நாளிதழுக்கு கொடுத்த பேட்டியை முதன்மைப்படுத்தி வைத்திருக்கும் அளவிற்கு அத்துமீறி நடந்து கொள்பவர் என்பதையும் அதைப் பெருமையாக கருதிக் கொண்டிருப்பவர் என்பதையும் காண முடிகிறது. ஆளுநராக நியமிக்கப்பட்டாலே வானளாவிய அதிகாரம் இருப்பதாக கருதிக் கொண்டு அடாவடி செய்வதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் சங்பரிவாரம் ஏற்கவோ மதிக்கவோ மாட்டோம் என்று சொன்னதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.
எனவே, ஆளுநர் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு தான் குறைந்தபட்சம் பொறுப்புணர்வோடும் நாகரீகத்தோடும் நடந்து கொள்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அவருக்கு அத்தகைய குணமில்லை எனில் அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
- கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு சட்டரீதியான இழப்பீடு வழங்கவேண்டும்.
- தீண்டாமையின் தொடர்ச்சியாகவே இந்த சாதிய வன்கொடுமை நடந்துள்ளது.
பெரம்பலூரில் தலித் இளைஞர் கழுத்து அறுத்துப் படுகொலை செய்யப்பட்ட விவாகரத்தில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதோடு, உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூர் கிராமம் காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 30) என்கிற தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொடூரமான இந்த படுகொலையை சிபிஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது. தீண்டாமையின் தொடர்ச்சியாகவே இந்த சாதிய வன்கொடுமை நடந்துள்ளது. சமாதானம் பேசலாம் என்று குற்றவாளிகளிடம் காவலர்களும், வஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இவர்களின் முன்னிலையிலேயே இந்தக் கொலை நடைபெற்றுள்ளது.
சட்ட ரீதியாக காவலர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும். மாறாக கொலையாளி தேவேந்திரனிடம் கொலை செய்யப்பட்டவரை அழைத்துச் சென்றதன் மூலம் காவலர்களும் அந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதோடு, இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு சட்டரீதியான இழப்பீடும் அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும், இத்தகைய நிகழ்வுகளில் சட்டத்திற்குப் புறம்பாக குற்றவாளிகளுக்கு உடந்தையாக காவல்துறை செயல்படுவதைத் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று சிபிஐ(எம்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.