என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Crore Prize"
- தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை கண்டா வரச்சொல்லுங்க என போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
- தொகுதி மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றவே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
திருப்பூர்:
திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.
இவர் தொகுதி மக்களை சரிவர சந்திக்க வில்லை என்று வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை கண்டா வரச்சொல்லுங்க என போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தனது தொகுதிக்கு செய்த பணிகளை பட்டியலிட்டு கூறினால் ரூ.1கோடி பரிசு என்ற போஸ்டர் மண்ணின் மைந்தர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் தொகுதியின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த வேட்பாளர் சுப்பராயனிடம் , தொகுதி மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றவே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக கூறிய நபரும், அவரின் அமைப்பினரும், ஒரு கோடி ரூபாயுடன் என் எம்.பி., அலுவலகத்திற்கு வந்தால், திருப்பூர் தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்கள் விபரம் முழுவதையும் தெரிவிக்கிறேன். ஒரு கோடி ரூபாய் பணத்தை ஆதரவற்ற அனாதை இல்லங்களுக்கு வழங்கவும் காத்திருக்கிறேன்.எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்.