search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CWC2019"

    உலகக்கோப்பைக்கான இன்றைய இரண்டு பயிற்சி ஆட்டங்களும் மழையால் கைவிடப்பட்டன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் (Warm-Up) நடைபெற்று வருகின்றன. இன்று பாகிஸ்தான் - வங்காளதேசம், தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

    கார்டிஃபில் பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான போட்டி நடைபெற இருந்தது. மழையால் இந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    பிரிஸ்டோலில் தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் அம்லா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    தென்ஆப்பிரிக்கா 9.3 ஓவரில் 60 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் நீண்ட நேரம் தடைபட்டது. பின்னர் மழை நின்றதும், ஆட்டம் 31 ஓவராக குறைக்கப்பட்டது.

    12.4 ஓவரில் தென்ஆப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை பெய்தது. அத்துடன் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டு பயிற்சி ஆட்டங்களும் கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
    உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இறுதி பட்டியலை வெளியிட்டது இங்கிலாந்து. ஜாப்ரா ஆர்சர் அணியில் இடம்பிடித்துள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    கடந்த மாதம் 20-ந்தேதிக்குள் முதற்கட்ட அணியை அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கூறியிருந்தது. ஆனால் நாளைமறுநாள் (மார்ச் 23-ந்தேதி) வரை தேவைப்பட்டால் அணியில் உள்ள வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    நேற்று பாகிஸ்தான் அணி மூன்று வீரர்களை மாற்றியிருந்தது. இங்கிலாந்து அணியின் முதற்கட்ட பட்டியலில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜாப்ரா ஆர்சர், லியாம் டாசன் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

    பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆர்சர் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் இன்று இங்கிலாந்து 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் ஆர்சர், டாசன் இடம்பிடித்துள்ளனர்.



    15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மோர்சன் (கேப்டன்), 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. ஜோஸ் பட்லர், 5. டாம் குர்ரான், 6. லியாம் டாசன், 7. லியாம் பிளங்கெட், 8. அடில் ரஷித், 9. ஜோ ரூட், 10. ஜேசன் ராய், 11. பென் ஸ்டோக்ஸ், 12. ஜேம்ஸ் வின்ஸ், 13. கிறிஸ் வோக்ஸ், 14. மார்க்வுட். 15. ஜாப்ரா ஆர்சர்.

    முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த அலேக்ஸ் ஹேல்ஸ், ஜோ டென்லி ஆகியோர் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.
    இங்கிலாந்தில் நடக்கும் 12-வது உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பிருப்பதாக கவுதம் காம்பிர் கணித்துள்ளார்.
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்டு ராபின் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது.

    இந்த நிலையில் உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்று இருந்தவருமான கவுதம் காம்பிர் கணித்து உள்ளார்.

    இது தொடர்பாக ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் காம்பிர் கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பையையும் ஆஸ்திரேலியாவே வெல்ல வாய்ப்பு உள்ளது. அந்த அணி நிச்சயமாக இறுதிப் போட்டிக்கு நுழையும். உலகக்கோப்பையை வெல்ல அடுத்து வாய்ப்பு உள்ள அணிகளில் இங்கிலாந்து, இந்தியா உள்ளன.

    இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் பலம் பெற்று இருக்கிறது. ரோகித், கோலியின் ஆட்டத்தை பொறுத்து மிகப்பெரிய ஸ்கோரை குவிக்கும். பந்து வீச்சில் பும்ரா துருப்புச் சீட்டாக இருப்பார்.

    இந்த உலகக்கோப்பை போட்டி முறை சுவாரசியமானது. ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியத்துவம் பெற்றது.

    உலகக்கோப்பையை வெல்ல 2-வது வாய்ப்பாக இங்கிலாந்தை நான் கூறுவதற்கு சொந்த மண்ணில் விளையாடுவதால் அல்ல. அந்த அணியில் எல்லா வரிசையிலும் ஆடக்கூடிய திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது.



    2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நான் சதத்தை தவறவிட்டதாக வருத்தப்படவில்லை. எங்களது ஒரே இலக்கு உலகக்கோப்பையை வெல்வதே. எனது பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். 97 ரன் என்பது அணிக்கு முக்கியமானது. 3 ரன்னில் சதத்தை நழுவ விட்டதற்காக நான் வருத்தம் அடைந்தது கிடையாது.

    நானும் டோனியும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 109 ரன் எடுத்தது முக்கியமானது. இறுதிப் போட்டியில் நான் எந்தவித நெருக்கடியுடனும் ஆடவில்லை.

    இவ்வாறு காம்பீர் கூறினார்.
    உலகக்கோப்பையில் ஒவ்வொரு அணியும் இந்திய அணியின் பந்து வீச்சை யூனிட்டை கவனமாகத்தான் எதிர்கொள்ளும் என்று புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஸ்வர் குமார். இவர் புதுப்பந்திலும், டெத் ஓவரிலும் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். கடந்த வருடம் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.

    இவருடன் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இங்கிலாந்து ஆடுகளங்கள் மிகவும் ‘Flat’ ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் மற்ற அணிகள் இந்தியாவின் பந்து வீச்சை மிகவும் கவனமாக எதிர்கொள்ளும் என்று புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து புவனேஸ்வர் குமார் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கு போதுமான அளவில் ஐபிஎல் பயிற்சி ஆட்டமாக அமைந்தது. கட்டுக்கோப்பாக பந்து வீசி, விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் தன்னம்பிக்கை தானாகவே உயரும். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக பந்து வீசிய அதே ரிதமில் பந்து வீசுவது அவசியம்.

    ஸ்லோவர் பால், நக்குல் பால் போன்ற வேரியேசன் பந்துகளை வீசுவதிலும், பந்து வீச்சில் வேகத்தை கூட்டுவதிலும் முன்னேற்றம் அடைந்துள்ளேன். அதேபோல் உடற்தகுதியிலும் முன்னேற்றம் அடைந்துள்ளேன்.

    நாங்கள் சிறந்த பந்து வீச்சை கொண்ட அணியா? இல்லையா? என்பது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஏனென்றால், ஆடுகளத்தில் எங்களுடைய பந்துவீச்சு எப்படி வெளிப்படும் என்பதை பொறுத்துதான் அது அமையும். எங்களுடைய கடந்த சில வருட ஆட்டத்திறன் எங்களை பற்றி சொல்லும். இந்திய அணியின் பந்து வீச்சு படிப்படியாக சிறந்த வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. எந்தவொரு ஆடுகளத்திலும் இந்திய பந்து வீச்சால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும்.



    இந்திய அணியில் உள்ள நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுடைய பலத்தை, ஒரு அணியாக வெளிப்படுத்துகிறோம். ஆடும் லெவன் அணியில் யார் இடம்பிடித்தாலும் சிறப்பாக பந்து வீசுவது சிறப்பான விஷயம். ஒரு பந்து வீச்சு குழுவாக எந்த கண்டிசனிலும் சிறப்பாக பந்து வீச முடியும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

    இங்கிலாந்து ஆடுகளங்கள் ‘Flat’ ஆக இருக்கும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் தொடக்கம் மற்றும் டெத் ஓவர்களில் எங்களுடைய பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் எதிரணிகள் கவனமாக எதிர்கொள்வார்கள். அன்றைய தினம் எங்களுடைய திட்டத்தை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் எல்லா விஷயங்களும் அமையும்’’ என்றார்.
    ×