என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » da hike
நீங்கள் தேடியது "DA Hike"
தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 7 சதவிகிதத்தில் இருந்து 9 சதவிகிதமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalaniswami
சென்னை:
மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 9 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் தமிழக அரசுக்கு 1157 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.
ஓய்வூதியதாரர்களுக்கு 154 முதல் 2250 ரூபாய் வரையும், அரசு ஊழியர்களுக்கு 314 ரூபாய் முதல் 4500 ரூபாய் வரையும் கூடுதலாக ஊதியம் கிடைக்கும். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூன் 2018 முதல் ஆகஸ்ட் வரை நிலுவையாகவும், அதன் பிறகு சம்பளத்துடனும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. #DAHike #UnionCabinet
புதுடெல்லி:
விலைவாசி உயர்ந்துவிட்டதால் மத்திய அரசு ஊழியர்களுக்கும் பென்சன்தாரர்களுக்கும் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு ஒரு வருடத்திற்கு 6112 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். பென்சன்தாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி கொடுப்பதால் வருடத்திற்கு 4074 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #DAHike #UnionCabinet
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
விலைவாசி உயர்ந்துவிட்டதால் மத்திய அரசு ஊழியர்களுக்கும் பென்சன்தாரர்களுக்கும் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு ஒரு வருடத்திற்கு 6112 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். பென்சன்தாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி கொடுப்பதால் வருடத்திற்கு 4074 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #DAHike #UnionCabinet
×

X