என் மலர்
நீங்கள் தேடியது "Dale Steyn"
தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டெயின் உலககோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். #DaleSteyn #SouthAfrica
தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டெயின். காயத்தால் அவதிப்பட்ட அவர் அதிலிருந்து மீண்டும் வந்துள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார்.
இந்த நிலையில் 2019-ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக கூறியுள்ளார். அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பை போட்டியில் விளையாட முயற்சிப்பேன். உலககோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் விளையாட முடியும் என்று நினைக்கவில்லை என்றார். #DaleSteyn #SouthAfrica
இலங்கையில் ஸ்டெயின், பிளாண்டர், ரபாடா ஆகியோர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்துவார்கள் என டு பிளிசிஸ் கூறியுள்ளார். #SLvSA
தென்ஆப்பிரிக்கா அணி இலங்கை சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் இரண்டு டெஸ்ட், அதன்பின் ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கு முன் வரும் 7-ந்தேதி இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் 12-ந்தேதி தொடங்குகிறது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கை ஆடுகளத்திலும் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சாதிப்பார்கள் என்று டு பிளிசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘நாங்கள் எந்த நாட்டில், எந்த சூழ்நிலையில் விளையாடுகிறோம் என்பது பெரிய விஷயம் அல்ல. எங்களுடைய மிகப்பெரிய பலமே வேகப்பந்து வீச்சுதான். குறிப்பாக நாங்கள் டேல் ஸ்டெயின், ரபாடா, பிளாண்டர் ஆகிய தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளோம். இவர்கள் எப்போதுமே விக்கெட் வீழ்த்தும் பவுலர்கள் ஆவார்கள்.

எந்தவொரு சூழ்நிலையில் சிறப்பாக பந்து வீச முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர். ஆசியக் கண்டத்தில் டேல் ஸ்டெயின் சிறப்பான சாதனையை படைத்துள்ளார். ரபாடா தங்கம். இவரால் எதையும் செய்ய இயலும். மேலும் கேஷவ் என்ற சுழற்பந்து வீச்சாளரை வைத்துள்ளோம்.
ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்தால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர் குறித்து யோசிப்போம்’’ என்றார்.

இலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் இடம் பிடித்துள்ளார். #SLvSA
தென்ஆப்பிரிக்கா அணி அடுத்த மாதம் முதல் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் ஜூலை 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும், 2-வது டெஸ்ட் ஜூலை 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையும் நடக்கிறது. இதற்கு முன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடுகிறது.
இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சுமார் ஓராண்டு ஓய்வில் இருந்து இந்தியா தொடருக்கு திரும்பிய ஸ்டெயின், முதல் டெஸ்டில் குதிக்காலில் ஏற்பட்ட காயத்தால் 2-வது இன்னிங்சில் இருந்து விலகினார். தற்போது காயம் குணமடைந்ததால் இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பிடித்துள்ளார்.

காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ரபாடாவும் அணியில் இடம்பிடித்துள்ளார். டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றுள்ளதால் டி ப்ருயின், கிளாசன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.