search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dandruff problem"

    • கூந்தலை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
    • எண்ணெய் பசை கூந்தல் உள்ளவர்கள் கண்டிஷனரை தவிர்ப்பது நல்லது.

    கண்டிஷனர் என்பது நம் கூந்தலை எண்ணெய் தன்மையுடன் வைத்து வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இதனால் எண்ணெய் பசை இல்லாத கூந்தலின் பகுதிகளில் மட்டும் கண்டிஷனரை பயன்படுத்தினால் மட்டும் போதும்.

    அதிக எண்ணெய் பசை கூந்தல் உள்ளவர்கள், அல்லது பொடுகு பிரச்சினை உள்ளவர்கள், சீகைக்காய் பயன்படுத்துபவர்கள் கண்டிஷனர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    கண்டிஷனர் வாங்கும் போது உங்களது கூந்தலின் உறுதித்தன்மையை மனதில் வைத்து டிபாட்மெண்ட் ஸ்டோர்களிலோ அல்லது காஸ்மெடிக் கடைகளில் வாங்குவது நல்லது.

    அவகேடோ பழத்தின் சதை பகுதியை ஷாம்பு பயன்படுத்தி குளித்த பிறகு கூந்தலில் மட்டும் படும்படி தேய்த்து 5 நிமிடம் கழித்து குளித்து வந்தால் கூந்தலுக்கு நல்ல ரிசல்ட் இருக்கும்.

    பூந்திக்கொட்டையை எடுத்து குளிப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னரே எடுத்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பூந்திக்கொட்டை ஊறவைத்த தண்ணீரை ஒவ்வொருமுறை ஷாம்பு வாஷிற்கு பிறகும் கூந்தலை இந்த தண்ணீரில் அலசி வர வேண்டும். இது இயற்கையாகவே கண்டிஷனர் போல் உங்களது கூந்தலை பாதுகாக்கும்.

    ஒரு ஸ்பூன் வினிகரை கால் கப் தண்ணீரில் கலக்க வேண்டும். இந்த தண்ணீரையும் ஷாம்பு போட்டு குளித்த பிறகு இந்த வினிகர் கலந்த தண்ணீரில் கூந்தலை அலச வேண்டும். இவ்வாறு செய்யும் போது கூந்தலை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

    • தலைக்கவசத்துக்கும், முடி உதிர்வதற்கும் சம்பந்தமில்லை.
    • வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கவசத்தை சுத்தம் செய்யவேண்டும்.

    இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். இப்போது பின் இருக்கையில் அமருபவரும் ஹெல்மெட் அணிந்தாக வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருக்கிறது. சாலை பயணத்தின்போது உயிர் காக்கும் உன்னத கவசமாக பயன்படும் அதனை அணிவதை இன்றைய இளைஞர்கள் பலரும் அசவுகரியமாக கருதுகிறார்கள்.

    தலைக்கவசம் அணிந்தபடி நீண்ட தூரம் பயணம் செய்தால் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படும் என்ற எண்ணம் வாகனம் ஓட்டும் இளம் பெண்களிடமும் இருக்கிறது. ஆனால் தலைக்கவசத்துக்கும், முடி உதிர்வதற்கும் சம்பந்தமில்லை.

    தலைகவசம் அணியும்போது தலைமுடியின் வேர்க்கால்களுக்கு செல்லும் காற்று தடைபடும். அப்படி ஹெல்மெட் வழியாக காற்று உள்ளே செல்வதற்கு வழி இல்லாமல் போனால் வியர்வை உருவாகி அது முடியில் படிந்துவிடும். அதனால் முடி உதிர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற கருத்தை முன்வைக்கிறார்கள்.

    ஆனால் அதில் உண்மை இல்லை. ஏனெனில் வெளிக்காற்றில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜன் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு தேவைப்படுவதில்லை. அதற்கு தேவையான ஆக்சிஜன் ரத்தத்தின் மூலமே கிடைத்துவிடும்.

    தலைக்கவசம் பயன்படுத்தும் போது முடியை முழுவதுமாக விரித்துவிட்டோ அல்லது Ponytail போட்டுக்கொண்டோ செல்லக்கூடாது. அதற்கு பதிலாக அனைத்து முடிகளையும் ஒன்று சேர்த்து தலையைக் கட்டினால் முடி உதிர்வது குறையும்.

    தலையில் எண்ணெய் அல்லது பொடுகு இருந்தால் அது தலைக்கவசத்தில் ஒட்டாமல் இருப்பதை உறுதி செய்துக்கொள்ளவும். அதற்கு, முதலில் ஒரு காட்டன் துணியை எடுத்து தலையில் கட்டிக்கொண்டு பின்பு தலைக்கவசம் அணியலாம்.

    காற்றோட்டம் இல்லாதா இடத்தில் தலைக்கவசத்தை வைக்க வேண்டும். அதில் கிருமிகள் மற்றும் அழுக்குகள் சேரும் அதனால் அதைக் காற்றோட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் வைப்பது சிறந்த தேர்வாகும்.

    ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கவசத்தை சுத்தம் செய்யவேண்டும்.

    பொடுகு தொல்லையால் கூந்தல் அதிகளவு உதிர ஆரம்பிக்கும். பொடுகு தொல்லையை போக்க வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காண முடியும்.
    கற்றாழைக்கு பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. மண்டைப் பகுதியின் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழிக்கக்கூடியது. பொடுகு உருவாகக் காரணமான இறந்த செல்களையும் அழித்து விடும். ரெடிமேடாக கிடைக்கிற கற்றாழை ஜெல்லைவிட, வீட்டில் வளர்க்கும் கற்றாழைச் செடியில் இருந்து அதன் உள்ளே உள்ள ஜெல் போன்ற பகுதியை எடுத்து நான்கைந்து முறை அலசி வைத்துக் கொள்ளவும். அதைத் தலையில் தடவி, 15 நிமிடங்கள் ஊற வைத்து, மைல்டான ஷாம்பு போட்டு அலசவும்.

    அரை கப் வினிகரை, ஒன்றரை கப் வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கவும். ஒவ்வொரு முறை ஷாம்பு குளியல் எடுத்து முடித்ததும், இந்தக் கரைசலை கடைசியாக தலையில் விட்டு அலசி, நன்கு காய விடவும். பொடுகு குறையும்.

    வெள்ளை மிளகுப் பொடியை சிறிதளவு தயிரில் குழைத்து, தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்கவும். சிறிதளவு பாதாம் எண்ணெயில் கொஞ்சம் நெல்லிக்காய் சாறு விட்டுக் கலந்து தலையில் தடவி, விரல் நுனிகளால் மிதமாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்கலாம்.



    முட்டையின் வெள்ளைக் கருவுடன், சிறிது விளக்கெண்ணெயும், அரை டீஸ்பூன் கிளிசரினும் கலந்து தலையில் தடவி ஊற வைத்தும் குளிக்கலாம். கைப்பிடி அளவு வேப்பிலையை அரை பக்கெட் தண்ணீரில் போட்டு இரவு முழுக்க அப்படியே வைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி, தலையை அலசவும். வேப்பிலையை அரைத்து, தலையில் தடவி, ஊற வைத்தும் அலசலாம். இரண்டு சிகிச்சைகளுமே பொடுகை விரட்டும்.

    வெயிலே படாமல் வாழ்வது சருமத்தை அழகாக வைக்கலாம். ஆனால், பொடுகுப் பிரச்சனைக்கு சூரிய வெளிச்சம் இல்லாததும் ஒரு காரணம். எனவே தினமும் காலை மற்றும் மாலை வெயில் சிறிதாவது நம் மேல் படும்படி இருப்பதுகூட பொடுகை விரட்ட உதவும்.

    தேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் நன்கு மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து, மிதமான ஷாம்பு கொண்டு கழுவினாலும் பொடுகு மறையும்.
    ×