என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Daniel"

    • ஆளுங்கட்சி சார்பில் டேனியல் நோபா மீண்டும் போட்டியிட்டார்.
    • வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்ததை தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    குயிட்டோ:

    தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் அதிபர் ஆட்சிமுறை நடைபெறுகிறது. அந்த நாட்டின் அதிபராக டேனியல் நோபா என்பவர் ஆட்சி செய்து வந்தார்.

    அவருடைய பதவிக்காலம் முடிவு அடைந்ததை தொடர்ந்து அங்கு புதிய அதிபருக்கான தேர்தல் நடந்தது. இதில் ஆளுங்கட்சி சார்பில் டேனியல் நோபா மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இடதுசாரி கட்சி பெண் வேட்பாளர் லூயிஸ் கோன்சலஸ் போட்டியிட்டார். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்ததை தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    இதில் டேனியல் நோபா 55.6 சதவீதம் வாக்குகளை பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட லூயிசை காட்டிலும் 16,468 வாக்குகள் அதிகம் பெற்று ஈகுவடார் நாட்டின் அதிபராக டேனியல் மீண்டும் தேர்வாகி உள்ளார்.

    கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த டேனியல் நேற்று வெளியான நிலையில், இன்று காதலியை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். #Danny #BiggBoss
    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் சிறிய வேடத்தில் பிரபலமானவர் டேனியல். இவர் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இதில் இவருடன் அனந்த் வைத்யநாதன், என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, பாலாஜி, டேனியல், ஷாரிக் ஹாசன், நித்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், பொன்னம்பலம், மமதி சாரி, சென்ட்ராயன், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், மஹத் ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

    இதில், மமதி சாரி, அனந்த் வைத்யநாதன், நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், வைஷ்ணவி, ஷாரிக் ஹாசன், மஹத் ஆகியோர் ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று டேனியல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

    வெளிய வந்த டேனியல், தனது காதலியான டெனிஷாவை இன்று கரம் பிடித்துள்ளார். இருவரும் மாலை மாற்றி எளிமையாகப் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.



    வீட்டில் சில பிரச்சினைகள் இருப்பதால் இந்த சந்தோஷத்தை நேரடியாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை எனத் டேனியல் தெரிவித்துள்ளார்.
    ×