என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dark Circles Removal"

    • கெமோமில் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம், சருமத்தின் நிறம் சீராகும்.
    • அதிகமாக துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

    எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் முதுமை பயணத்தின் தொடக்கத்திலேயே சருமத்தில் சுருக்கம் ஏற்படத் தொடங்கிவிடும். இது இயற்கை என்றாலும் மாறுபட்ட வாழ்க்கை சூழல், உணவு முறை ஆகிய காரணத்தில் முகத்தில் சுருக்கம் ஏற்படுவது 30-களின் தொடக்கத்திலேயே தொடங்கிவிடும். 30 வயதில் குறைய தொடங்கும். இந்த நேரத்தில் சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள், நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் வரும். இந்த வயதில் வரும் பிரச்சனையை எதிர் கொள்வதற்கு சில எளிய ஆலோசனைகளை பார்க்கலாம். சரும வறட்சியை சரிசெய்ய சில டிப்ஸ்கள்.

    * சருமம் என்றும் இளமையுடன் இருக்க தினமும் ஒரு கைப்பிடி அளவு ஸ்ட்ராபெரி அல்லது 3 நெல்லிக்காய்களை சாப்பிடலாம். நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதுவே சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

    * தக்காளி பழச்சாறு, நன்றாகப் பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கம் மறையும்.

    * தரமான சந்தனப்பவுடருடன் கிளிசரின் சேர்த்து, பேஸ்ட் போன்று நன்கு குழைத்து, அதை முகத்தில் நன்கு பூசி, சிறிது நேரத்திற்குப் பிறகு கழுவிவிட வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்து வர, முகச்சுருக்கம் நீங்கும். இதோடு கற்றாழை ஜெல் சேர்க்காலம்.

     கற்றாழை மிகச் சிறந்தது. இதற்கு ஹீலிங் ப்ராபர்ட்டி அதிகம். கேரட், பீட்ரூட் சாறு தடவி வரலாம். இதோடு கடலை மாவு கலந்து பேஸ்ட்போல செய்து ஃபேஸ் பேக் போடலாம். கடலை மாவு, தயிர் ஒரு சிறந்த தேர்வு. வாரத்தில் இருமுறை இந்த ஃபேஸ் பேக் டிரை பண்ணலாம்.

    * வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி6, சி உள்ளட்டவை இருப்பதால் இதை சருமத்தில் தடவினால் செல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

     * ஆர்கன் ஆயில் என்று ஒன்று இருக்கிறது. இதை பயன்படுத்தினாலும் சரும பாதிப்புகளை தவிர்க்கலாம்.

    * தயிரில் லாக்டிக் ஆசிட் உள்ளதாலும் வைட்டமின் ஈ சருமத்தில் உள்ள செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மஞ்சள் சிறப்பான கிருமி நாசினி. ரோஸ் வாட்டர், வைட்டமின் இ எண்ணெய் உள்ளிட்டவற்றையும் சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்.

    முகப்பரு மற்றும் எக்சிமாவை குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டி-இன்ஃபல்மேட்ரி பண்புகள் முகப்பரு மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகளை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், படிப்படியாக முகப்பரு இருந்ததற்கான அடையாளங்களை குறைக்கும்.

    எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குவதிலும், புதிய செல்களின் வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. சருமத்தை புத்துணர்ச்சியாக உணர வைக்கும். மேலும், சருமத்தில் வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கும். இளமையான சருமம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தாலாம்.

    கெமோமில் எண்ணெயை அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தின் நிறம் சீராக இருக்கும். முகம் பொலிவாக இருப்பதற்கும் இது உதவுகிறது. கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை குறைக்கவும் இதனை பயன்படுத்தலாம். இதோடு, கெமோமில் டீ குடிப்பதும் உடல்நலனுக்கு நல்லது.

    சருமத்தை ஆரொக்கியத்துடன் பராமரிக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம். அதிகமாக துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி மிகவும் அவசியம்.

    • கண் தான் முகத்தின் அழகையும், உணர்வையும் மேம்படுத்திக் காட்டுபவை.
    • கண்களை நாம் கருத்துடன் பேணிக் காக்க வேண்டும்.

    கண்கள் தான் ஒருவரது முகத்தின் அழகையும், உணர்வையும் மேம்படுத்திக் காட்டுபவை. மிகுந்த பாதுகாப்பு இல்லாத நிலையில் அமைந்திருக்கும் கண்களை நாம் கருத்துடன் பேணிக் காக்க வேண்டும். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக கண்களுக்கு ஊறுவிளைவிக்கத்தக்க செயற்கை ஒளியை அடிக்கடி நாம் சந்திக்க நேரிடுகிறது. கணிப்பொறியில் பணி செய்வதும், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் பார்ப்பதுவுமே நம் கண்களைப் பெரிதும் சோர்வடையச் செய்கின்றன.

    நம் கண்கள் தான் நம் முகத்திற்கு அழகு சேர்க்க கூடிய ஒன்றாகும். கண்களுக்கு கீழ் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியம். கண்ணுக்கு கீழ் உள்ள சுருக்கங்களை நீக்குவதற்கு ஆரஞ்சு பழத்தோல் மற்றும் வேப்ப எண்ணெய் இரண்டும் பயன்படுகிறது. இதை வைத்து எப்படி கண் சுருக்கத்தை நீக்கலாம் என்று பார்க்கலாம்.

     மசாஜ்:

    ஒரு கிண்ணத்தில் ஜோஜோபா எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். பின்னர் அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர் ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும், அதன்பின் வேப்ப எண்ணெயை 3 முதல் 4 துளி வரை கலந்து கொள்ளலாம். இதனை கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். பின்னர் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து கழுவிவிடலாம். இவ்வாறு செய்வதினால் கண்களில் உள்ள சுருக்கம் நீங்க ஆரமிக்கும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்ய வேண்டும்.

    மற்றொரு முறைப்படி ஒரு கிண்ணத்தில் ஜோஜோபா எண்ணெய் – 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், அப்ரிகாட் கர்னல் எண்ணெய் – 2 ஸ்பூன், அவோகேடா எண்ணெய் 2 ஸ்பூன் எடுத்து நன்றாக கலந்து தூங்கச் செல்லும்போது இதனை நன்றாக தடவி விட்டு படுக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் அதனை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் கண் சுருக்கம், கண் சோர்வு ஆகியவை நீங்கும்.

     கண்களுக்கான பயிற்சி

    ஒரு பென்சில் அல்லது பேனாவை வலது கையினால் எழுதுமுனை மேல் நோக்கியவாறு கைக்கெட்டிய தூரத்தில் பிடியுங்கள். மெல்ல மெல்ல அதைக் கண்களுக்கு அருகே எழுதுமுனை இரண்டாகத் தெரியும் வரை கொண்டு வாருங்கள் அந்த அளவில் நிறுத்திச் சிறிது நேரம் பென்சிலின் முனையை உற்று நோக்குங்கள். பின்னர் பென்சிலை கண்களுக்கு அருகில் இருந்து அகற்றிப் பழைய நிலைக்கு கொண்டு செல்லுங்கள். இதுபோல் நான்கைந்து முறை செய்யுங்கள்.

    கண்சோர்வை நீக்க மற்றுமொரு பயிற்சி. ஒரு மேஜையின் முன்பு உட்கார்ந்து கொண்டு முழங்கைகள் இரண்டையும் மேஜையில் ஊன்றிக் கொள்ளுங்கள். இரண்டு உள்ளங்கைகளாலும் இரண்டு கண்களையும் இறுகப் பொத்திக்கொள்ளுங்கள். தலையைத் தொய்வாக வைத்து இரண்டு கைகளாலும் தாங்கிக் கொள்ளுங்கள். இதேபோல் பத்து நிமிடங்கள் இருந்த பின்னர் கண்களில் இருந்து கைகளை விலக்குங்கள். இதுபோல் தினமும் பல முறை செய்யலாம்.

    • உருளைக்கிழங்கு சாறு கருவளையங்களை நீக்கவும் உதவும்.
    • ரோஸ் வாட்டர் கருவளையங்களை நீக்க பெரிதும் உதவுகிறது.

    டார்க் சர்க்கிள் பிரச்சனை தற்போதுள்ள நாட்களில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் திரையின் முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது, தூக்கமின்மை போன்றவை. இது தவிர, பல காரணங்களால் கருவளையம் பிரச்சனை தொடங்குகிறது. உண்மையில், மக்கள் கருவளையங்களை மறைக்க பல மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.

    கன்சீலர் முதல் மேக்கப் வரை, இந்த விஷயங்கள் உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை மறைக்க உதவினாலும், அது நிரந்தரமான சிகிச்சையல்ல. வீட்டில் உள்ள சில பொருட்களை கொண்டே கருவளையத்தை அகற்றலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? ஆம். அந்த பொருட்கள் என்னவென்று இங்கே விரிவாக காண்போம்.

    கருவளையம் ஏற்பட காரணம்:

    * போதுமான தூக்கமின்மை

    * தவறான உணவுப் பழக்கம்

    * ஒழுங்கற்ற வழக்கம்

    * இரவில் தாமதமாக திரைகளைப் பார்ப்பது

    * சோர்வு

    * மன அழுத்தம்

    * உலர் கண்கள்

    * கண் ஒவ்வாமை

    * நீரிழப்பு

    * உடலில் நீர் பற்றாக்குறை

    * சூரிய ஒளி மற்றும் மாசுபாடு போன்றவற்றின் நீண்டகால வெளிப்பாடு


    ரோஸ் வாட்டர் மற்றும் பால்:

    பால் மற்றும் ரோஸ் வாட்டர் கருவளையங்களை நீக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு ரோஸ் வாட்டர் மற்றும் பால் ஆகியவற்றை சம அளவு எடுத்து பருத்தி பஞ்சின் உதவியுடன் கருவளையங்கள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் வைக்கவும். அதன் பிறகு காட்டன் பேடை அகற்றி, பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவவும்.


    தேன், பால் மற்றும் எலுமிச்சை:

    தேன், பால் மற்றும் எலுமிச்சை ஆகியவை கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதற்கு ஒரு ஸ்பூன் பாலில் அரை ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கண்களைச் சுற்றி மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையங்களை போக்கலாம்.


    உருளைக்கிழங்கு சாறு:

    உருளைக்கிழங்கு சாறு கருவளையங்களை நீக்கவும் உதவும். இதற்கு முதலில் உருளைக்கிழங்கை அரைக்கவும். அதன்பிறகு, அதன்சாறு எடுத்து, பஞ்சில் தோய்த்து கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் விட்டு விடுங்கள். அதன் பிறகு கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி சில நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


    தக்காளி

    தக்காளி ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்க, முதலில் 2 ஸ்பூன் தக்காளி சாற்றில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். இப்போது இந்த பேஸ்ட்டை கண்களின் கீழ் 10 நிமிடங்கள் தடவவும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையம் பிரச்சனை நீங்கும்.


    வெள்ளரிக்காய்

    இதற்கு முதலில் வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்க வேண்டும். அதன் பிறகு, 10 நிமிடங்கள் கண்களில் வைத்திருக்க வேண்டும். இதனால் கருவளையம் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

    ×