search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dark honor"

    இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்கக்கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை செல்லும் தங்கள் நாட்டினர் உஷாராக இருக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது. #SriLankablasts #Colomboblast
    வாஷிங்டன்:

    இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இலங்கைக்கு செல்லும் தனது நாட்டினருக்கு அமெரிக்கா நேற்று எச்சரிக்கை விடுத்தது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இலங்கையில், பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்தோ அல்லது விடுக்காமலோ மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும். சுற்றுலா தலங்கள், போக்குவரத்து வாகனங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்கள், ஓட்டல்கள், கிளப்புகள், உணவு விடுதிகள், வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது.

    எனவே, இலங்கைக்கு செல்லும் அமெரிக்கர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    சுற்றுலா தலங்கள் மற்றும் நெரிசல் மிகுந்த இடங்களில் செல்லும்போது, சுற்றிலும் நடப்பனவற்றில் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றுங்கள். ஊடகங்களில் உடனடி செய்திகளை கவனியுங்கள். அதற்கேற்ப உங்கள் பயண திட்டத்தை மாற்றி அமையுங்கள். அமெரிக்க வெளியுறவுத்துறை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் நடப்பு நிலவரத்தை பார்த்து வாருங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுபோல், கனடாவும் இலங்கை செல்லும் தனது நாட்டினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து கனடா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வெளிநாடுகளில் கனடா மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, கனடா அரசு அவ்வப்போது நம்பகமான தகவல்களை அளித்து வருகிறது. அதற்கேற்ப கனடா நாட்டினர் தங்களது பயண திட்டத்தை வகுத்து கொள்ளலாம்.

    இலங்கைக்கு செல்வது உங்களது விருப்பம். வெளிநாடுகளில் உங்களது தனிப்பட்ட பாதுகாப்புக்கு நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #SriLankablasts #Colomboblast
    இலங்கை குண்டுவெடிப்புக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். #Colomboblast #Obama #SriLankaAttack
    நியூயார்க்:

    இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்கள் என பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் சுமார் 300 பேர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈஸ்டர் பெருநாளில் இலங்கையை உலுக்கி உள்ள இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. மேலும் பல்வேறு தலைவர்கள் இரங்கலும், கண்டனமும் தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.



    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அன்பு, மீட்பு மற்றும் புதுப்பித்தலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான நாளில் நடந்திருக்கும் இந்த தாக்குதல், மனிதநேயத்தின் மேல் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்த குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் பிரார்த்திப்பதுடன், இலங்கை மக்களுக்கு துணையாகவும் நிற்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார். #Colomboblast #Obama #SriLankaAttack
    இலங்கை குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. #SriLankablasts #Colomboblast #EiffelTower
    பாரீஸ்:

    இலங்கையில் நேற்று முன்தினம் ஈஸ்டர் தின கொண்டாட்டத்தின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 200-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

    பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு உலக தலைவர்கள் தங்களின் அனுதாபங்களை தெரிவித்தனர்.



    இந்த நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகள் நேற்று முன்தினம் இரவு அணைக்கப்பட்டன.

    எப்போதும் நள்ளிரவில் மின்விளக்குகளால் ஜொலிக்கும் ஈபிள் கோபுரம் இலங்கை மக்களின் துயரத்தில் பங்கு கொண்டது. இதனால் ஈபிள் கோபுரம் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

    இதற்குமுன் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்காகவும், 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாரீஸ் நகரின் 6 இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் உயிர் இழந்தவர்களுக்காகவும் ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குள் அணைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. #SriLankablasts #Colomboblast #EiffelTower 
    ×