search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "darlings"

    • "தென்னிந்தியாவில் இதுபோன்ற படங்களுக்கு அதிக ரசிகர்கள் இல்லை என்பதால் அவற்றை தமிழுக்கு கொண்டு வர அதிக காலம் எடுக்கும்"
    • "ஹீரோவுக்காகவே படங்கள் ஓடும் என்ற நிலை மாறி படத்தின் வெற்றிக்கு பெண்களும் முக்கிய பங்கு வகிக்கும் காலம் வந்துவிட்டது"

    சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராசி கண்ணா ஆகியோர் நடித்த ஹாரர் படமான 'அரண்மனை 4' திரைப்படம் கடந்த மே 3 ஆம் தேதி வெளியாகி கமர்ஷியலாக நல்ல வரவேற்பைப் பெற்று 100 கோடி வரை வசூலித்துள்ளது.

    இந்த படத்தை சுந்தர் சி மற்றும் அவரது மனைவி குஷ்பு -வின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்திருந்தது. அரண்மனை 4 திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு இன்று (மே 31) தியேட்டர்களில் ரிலீசானது. இந்நிலையில் ரிலீஸ் ஆங்கில செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த குஷ்பு, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

     

    அப்போது அவர் பேசுகையில், ஹிந்தியில் வெளியான,பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை முக்கிய கதைகளமாகக் கொண்ட 'டார்லிங்ஸ்', 'பதாய் ஹோ', 'கிரியூவ்' போன்ற படங்களை தமிழில் தயாரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் இதுபோன்ற படங்களுக்கு அதிக ரசிகர்கள் இல்லை என்பதால்  அவற்றை தமிழுக்கு கொண்டு வர அதிக காலம் எடுக்கும் என்று தெரிவித்த அவர், பெண்களை பிரதானமாக கொண்டு எடுக்கப்படும் படங்களைத் தாண்டி கமர்ஷியலான படங்களையும் தயாரிக்க விரும்புவதாக கூறினார்.

    ஹீரோவுக்காகவே படங்கள் ஓடும் என்ற நிலை மாறி படத்தின் வெற்றிக்கு பெண்களும் முக்கிய பங்கு வகிக்கும் காலம் வந்துவிட்டது. படத்திற்கு கதையே கதாநாயகன் என்ற நிலைக்கு நாம் உயர்ந்துள்ளோம் என்று தெரிவித்தார்.

    ஆலியா பட் நடிப்பில் ஹிந்தியில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான 'டார்லிங்ஸ்' திரைப்படம் பெண்கள் மீது நிகழும் குடும்ப வன்முறையைப் பற்றி பேசியிருந்தது. ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'பதாய் ஹோ', கதாநாயகனின் தாய் கருவுற்றதால் அந்த குடும்பம் சந்திக்கும் சிக்கல்களை பேசிய வித்தியாசமான படமாக அமைந்தது. பதாய் ஹோ படம் தமிழில் ஆர்.ஜே பாலாஜி, சத்யராஜ் நடிப்பில் வீட்ல விசேஷம் என்ற பெயரில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது.

     

    மேலும் கரீனா கபூர், தபு, கீர்த்தி சனோன் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கிரியூவ் (Crew) திரைப்படம் விமானப் பணிப்பெண்களின் இன்னல்களை பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியாபட்
    • இவர் விளம்பரத்திற்கு ஒரு கோடி ரூபாய் வாங்குகிறார்.

    பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட். உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் "டார்லிங்ஸ்". இயக்குனர் ஜஸ்மீட் கே ரீன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷேபேலி ஷா, விஜய் வர்மா, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.


    ஆலியாபட்

    பிரபல நடிகைகள் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் சமூகவலைதளப் பக்கத்தில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தனியார் தயாரிப்புகளுக்கும் திரைப்படங்களின் விளம்பரத்திற்கும் இந்த பக்கத்தை பயன்படுத்தி  வருகிறார்கள்.

    இந்நிலையில், நடிகை ஆலியாபட் சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு படத்தை விளம்பரம் செய்ய ஒரு கோடி ரூபாய் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு விளம்பரத்திற்கு ஒரு கோடியா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

    • இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட்.
    • இவர் தற்போது நடித்துள்ள படம் "டார்லிங்ஸ்".

    பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட். உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். அண்மையில் இவர் நடித்த 'கங்குபாய் கத்யாவாடி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    மிகவும் திறமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஆலியாபட் தற்போது நடித்துள்ள படம் "டார்லிங்ஸ்". இயக்குனர் ஜஸ்மீட் கே ரீன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷேபேலி ஷா, விஜய் வர்மா, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    டார்லிங்ஸ்

    இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் கணவரை ஆலியாபட் துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஆலியாபட்டிற்கு எதிராக 'பாய்காட் ஆலியாபட்', 'பாய்காட் டார்லிங்ஸ்' #boycottAliaBhatt #boycottDarlings போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.


    டார்லிங்ஸ்

    மேலும், ரசிகர்கள் பலர் "டார்லிங்ஸ்" படத்தை தடை செய்ய வேண்டும். நடிகர் ஆம்பர் ஹெர்ட்டின் இந்திய வெர்ஷன் தான் ஆலியாபட் போன்ற கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.



    ×