என் மலர்
நீங்கள் தேடியது "De De Pyaar De"
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் இந்தியில் நடித்திருக்கும் படத்தில் மீடூ புகாரில் சிக்கிய நடிகர் அலோக் நாத் நடித்திருப்பதால் ரசிகர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #DeDePyaarDe
ரகுல் பிரீத்தி சிங் தமிழில் சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படத்திலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்தியில் டெ டெ பியார் டெ படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படம் முடிந்து திரைக்கு வரும் நிலையில் உள்ளது. ஆனால் அந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். இது ரகுலை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆனால் ரகுலால் படத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

இதே படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் குணசித்திர நடிகர் அலோக் நாத் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் மீது நடிகை வின்டா நந்தா மீடூ இயக்கம் சார்பாக புகார் கூறினார். தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் தெரிவித்திருந்தார். அலோக் நாத் நடித்த படம் என்பதால் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று இணையதளங்களில் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். #DeDePyaarDe #RakulPreetSingh #AlokNath #MeToo