என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dear"

    • மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே. விவேக் இயக்கியுள்ள திரைப்படம் '13'
    • ராட்சசன்', 'போர் தொழில்' படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இசையைப் போலவே தனது தேர்ந்த கதைத் தேர்வின் மூலமும் சிறந்த நடிகராக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அவரது சமீபத்திய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அடுத்தப் படத்திற்கான டப்பிங் பணியைத் தொடங்கி இருக்கிறார் ஜிவி பிரகாஷ்.

    மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே. விவேக் இயக்கியுள்ள திரைப்படம் '13'. இதன் படப்பிடிப்பு 80 நாட்கள் சென்னை மற்றும் வனப்பகுதிகளில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் பணிகள் தொடங்கியது. இன்று மதியம் 13:13 மணியளவில் ஜிவி பிரகாஷ் டப்பிங் பேசி தொடங்கி வைத்தார்.

    படம் குறித்து இயக்குநர் விவேக் கூறியிருப்பதாவது, "'ராட்சசன்', 'போர் தொழில்' படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானர் படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் வகையில் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக, 13 அன்லக்கி எண் என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையை படம் உடைத்துக் காட்டும். நண்பர்கள் ட்ரிப் செல்லும்போது, ஜாலியாக செய்யும் சில விஷயங்கள் அவர்களுக்கு எதிராக எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. ஜிவி பிரகாஷூடன் வேலை பார்த்திருப்பது என் கனவு நினைவான தருணம். கெளதம் சார் நடிப்பு படத்தை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்".

    நடிகர் ஜிவி பிரகாஷ்குமார், "'13' படம் நிச்சயம் வெற்றி பெறும். அதன் கதைக்களம் புதிதாக இருக்கிறது. 'டார்லிங்' படத்திற்குப் பிறகு நான் நடிக்கும் ஹாரர் படம் இது. நிச்சயம் பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்" என்றார்.

    '13' படத்திற்கு சி.எம். மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், 'கதிர்' படப்புகழ் பவ்யா த்ரிக்கா.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
    • தற்போது இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

    ஜி.வி. பிரகாஷ் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசையமைத்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர், ஜெயில், செல்பி, அடியே படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தன.

    ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி இருவருமே பள்ளி பருவத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். அதற்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.

    தற்போது இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்த 13-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர். இந்நிலையில், யூடியூப் வீடியோக்கள் குறித்து பாடகி சைந்தவி வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

    யூடியூப் சேனல்களில் தங்களுடைய விவாகரத்து குறித்து முனையப்படும் கதைகள் பார்ப்பதற்கு வருத்தம் அளிக்கிறது. தங்களுடைய முடிவுக்கு மதிப்பளிக்க கோரி வேண்டுகோள் வைத்த பிறகும் இதுபோன்று கதைகள் பின்னப்படுவது வேதனையாக உள்ளது. ஒருவரின் குணாதிசயத்தை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சிதைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முடிவு எங்கள் இருவரின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டது. நானும் ஜி.வி பிரகாஷ் குமாரும் பள்ளிப் பருவம் முதலில் நண்பர்களாக இருந்துள்ளோம். 24 வருட நட்பு. அதே நட்புடன் பயணிப்போம் என்று சைந்தவி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஜிவி பிரகாஷ்  இந்த கஷ்டக்காலத்தில் என்னுடன் பயணிக்கும் நபர்களுக்கும், நண்பர்களுக்கும் என் முன்னாள் மனைவி சைந்தவிக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கிங்க்ஸ்டன் படம் ஜி.வி.பிரகாசின் 25-வது படம் ஆகும்.
    • நேர்மையாக உழைத்தால் சினிமா கைவிடாது.

    'வெயில்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ்குமார், அடுத்தடுத்து தொட்ட படங்கள் அனைத்திலும் ஹிட் பாடல்கள் கொடுத்து கவனம் ஈர்த்தார்.

    'டார்லிங்' படம் மூலமாக கதாநாயகன் அவதாரம் எடுத்த ஜி.வி.பிரகாஷ் பல ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் அவருக்கு 'ரெபல்', 'கள்வன்', 'டியர்' என 3 படங்கள் வெளியாகி உள்ளன. விரைவில் திரைக்கு வர உள்ள 'கிங்க்ஸ்டன்' படம் அவரது நடிப்பில் வெளியாகும் 25-வது படம் ஆகும்.

    இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ்குமார் கூறும்போது, "இந்த ஆண்டு எனக்கு ராசியான ஆண்டாகவே அமைந்துள்ளது. விரைவில் 'கிங்க்ஸ்டன்' படமும் வெளிவர இருக்கிறது. எனது திரை பயணத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் இது. இதன் கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே பல கோடிகள் செலவிடப்பட்டுள்ளது.

    என்னை பொறுத்தவரை சினிமாவில் உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும். உழைப்புக்கு ஏற்ற பலன் எதிர்பாராத விதமாக நமக்கு கிடைக்கும். நேர்மையாக உழைத்தால் சினிமா கைவிடாது.

    என் தேடல் அனைத்தும் இப்போது சினிமாவில் மட்டுமே. நடிப்பிலும், இசையிலும் நிறைய சாதிக்க வேண்டும் என்பதே என் இலக்கு" என ஜி.வி.பிரகாஷ்குமார் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×