search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death by snake bite"

    • தூங்கிக்கொண்டிருந்த போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சி, மேதலபாடி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 76). இவரது மனைவி ரேவதி(68).

    தம்பதியினருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கண்ணன் கடந்த மாதம் இறந்துவிட்டார்.

    இதனையடுத்து ரேவதி தனது மகன்களுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரேவதி தனது வீட்டின் வாசலில் படுத்து தூங்கினார். நள்ளிரவு ஒரு மணி அளவில் அந்தப் பகுதியாக ஊர்ந்து வந்த நாகப்பாம்பு ரேவதியை கடித்துவிட்டு அருகில் இருந்த புதருக்குள் மறைந்தது.

    வலி தாங்க முடியாமல் ரேவதி கூச்சலிட அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதில் நேற்று முன்தினம் ரேவதியின் வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்த நாயும் பாம்பு கடித்து உயிர் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஷம் உடல் முழுவதும் பரவியதால் இறந்தது
    • சாலை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் கோரிக்கை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி விஜி.

    இவரது மனைவி பிரியா இவர்களின் மகள் தனுஷ்கா (வயது 1½) குழந்தை நேற்று இரவு வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.

    இரவு நேரம் என்பதால் அருகே இருந்த காட்டுப்பகுதியில் இருந்து பாம்பு ஒன்று ஊர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது.

    இதனைப் பார்க்காத குழந்தை அருகே சென்ற உடன் பாம்பு குழந்தையை கடித்தது.

    குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் அவரை பாம்பு கடித்ததை பார்த்துள்ளனர்.

    உடனடியாக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். சாலை வசதி இல்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரம் ஆகியுள்ளது. அப்போது விஷம் உடல் முழுவதும் பரவி குழந்தை செல்லும் வழியிலேயே இறந்தது.

    எனவே சாலை வசதி இல்லாத காரணத்தால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாமல் குழந்தை இறந்து விட்டதாக பெற்றோர் கூறினர்.

    மேலும் தகவலறிந்த அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைக்குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் உடனடியாக அல்லேரி, அத்திமரத்து கொல்லை மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அலட்சியமாக இருந்ததால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த பாலவாய் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). கூலி வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று காலை 11 மணியளவில் அந்த பகுதியில் விறகு வெட் டுவதற்கு சென்றுள்ளார். அப்போது மணிகண்டனை சாரை பாம்பு கடித்துள்ளது. ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லாமல் அலட்சியமாக இருந்துள்ளார். பின்னர், வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார்.

    சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் வாயில் இருந்து நுரை வருவதை கண்ட வீட்டில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாய்க்கு தீவிர சிகிச்சை
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த சிக்கனாங் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் விவசாயி. இவரது மனைவி தவமணி (வயது 40). இவர்களது மகன் ஹரிஹரன் (17).

    நேற்று இரவு ஹரிகரனும், தவமணியும் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தனர். அப்போது அதிகாலை வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு இருவரையும் கடித்துள்ளது. இதில் வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறி துடித்தனர்.

    சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே ஹரிகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தவமணி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து அம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று ஹரிஹரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பலனின்றி பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் பொன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 40). கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவர் புதுப்பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    இவருக்கு லட்சுமி (28) என்ற மனைவியும், பிரியதர்ஷினி (6), மேகவர்ஷினி (2) ஆகிய மகள்களும் உள்ளனர். கடந்த 21ம்தேதி மாலை தனது வீட்டருகே இருந்த போது மோகன்ராஜை விஷப்பாம்பு கடித்தது. அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரும்பு வெட்டிக் கொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர் அருகே பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி. இவரது மகன் அண்ணாதுரை (வயது 40), கூலி தொழிலாளி. அண்ணாதுரை அதே ஊரைச் சேர்ந்த மஞ்சுநாதன் என்பவரின் கரும்பு தோட்டத்தில் கடந்த 1-ந் தேதி கரும்பு வெட்டிக் கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பாம்பு கடித்து விட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர் கள் உடனடியாக அவரை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண் ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து மாரி போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தண்ணீர் பாய்ச்ச நிலத்திற்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர் அருகே எடப்பிறை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் விவசாயி. இவரது மனைவி நதியா (வயது 34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் நதியா கடந்த 18-ந்தேதி நிலத்தில் நெல் நடுவதற்கு, நிலம் உழுவதற்கு தண்ணீர் பாய்ச்ச இரவு 9 மணிக்கு நிலத்தில் வரப்பு மீது நடந்து சென்றார்.

    அப்போது அவரது இடதுகாலில் பாம்பு கடித்தது. உடனடியாக அவரை போளூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நதியா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து போளூர் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாக குற்றச்சாட்டு
    • ஆடி கிருத்திகைக்கு கோவிலுக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே களம்பூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணன் பிரியா தம்பதியினருக்கு திவாகர் (6) உதய அரசு (3) ஆகிய 2மகன்கள் உள்ளனர்.

    நேற்று ஆடி கிருத்திகை தினத்தை முன்னிட்டு வீட்டின் அருகே உள்ள முருகன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.

    இதில் 3 வயது குழந்தை உதயஅரசை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்த பின்னர் திடிரென உதயஅரசுக்கு மயக்க நிலை ஏற்பட்டதால் உடனடியாக களம்பூர் ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு கொண்டு வந்து அனுமதித்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மேல்சிகிச்சைக்கு செல்ல சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காலதாமதாமாக 108 ஆம்புலன்ஸ் வந்ததாக கூறப்படுகிறது.

    ஆரணி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் வராத காரணத்தினால் 3வயது குழந்தை இறந்து விட்டதாக குற்றசாட்டினார்கள்.

    பின்னர் தங்களின் குழந்தையை பிரேத பரிசோதனை கூடத்திற்கு எடுத்து செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறி ஆஸ்பத்திரி வளாகத்தில் கதறி அழுதனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி குழந்தை உடலை ஒப்படைத்தனர்.

    • தூங்கிக் கொண்டிருந்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த கிழவனம் அருகே உள்ள முத்துக் குமரன் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி (வயது 60). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண் டிருந்தார்.

    அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. உடன டியாக அவரை அக்கம்பக்கத்தினர் காமாட்சியை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக் காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென் றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி காமாட்சி பரிதாபமாக உயிரி ழந்தார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×