என் மலர்
நீங்கள் தேடியது "Death toll rises"
ரஷியாவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. #RussiaGasExplosion #RussiaApartmentCollapse
மாஸ்கோ:
ரஷியாவின் மாக்னிடோகோர்ஸ்க் நகரில் உள்ள பத்து மாடிகளை கொண்ட குடியிருப்பின் ஒரு வீட்டில் கடந்த திங்கட்கிழமை எரிவாயு கசிவு ஏற்பட்டதால் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அந்த குடியிருப்பில் இருந்த 48 வீடுகள் இடிந்து விழுந்தன.

நேற்று மாலை வரை 21 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அங்கு வசித்தவர்களில் மேலும் 20 பேரை காணவில்லை என உறவினர்கள் குறிப்பிட்டுள்ளதால் தேடுதல் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டனர். அதன்பின்னர் மேலும் 16 சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. #RussiaGasExplosion #RussiaApartmentCollapse

இதையடுத்து மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டன. அப்பகுதியில் நிலவிவரும் கடுமையான பனிமூட்டம் மற்றும் குளிருக்கு இடையில் இருநாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று மாலை வரை 21 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அங்கு வசித்தவர்களில் மேலும் 20 பேரை காணவில்லை என உறவினர்கள் குறிப்பிட்டுள்ளதால் தேடுதல் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டனர். அதன்பின்னர் மேலும் 16 சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. #RussiaGasExplosion #RussiaApartmentCollapse
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். #Indonesialandslide
ஜகார்த்தா:

நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். 20 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 63 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சுகபூமி மாவட்டம் சினாரேஸ்மி கிராமத்தில் மட்டும் 30 வீடுகள் நிலச்சரிவின்போது மண் மற்றும் பாறைகளால் சூழப்பட்டுள்ளன. அந்த வீடுகளில் சிக்கியுள்ளவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. #Indonesialandslide
இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் இடிபாடுகளில் சிக்கி புதையுண்டன. அந்த பகுதிகளில் மீட்புக்குழுவினர் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். 20 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 63 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சுகபூமி மாவட்டம் சினாரேஸ்மி கிராமத்தில் மட்டும் 30 வீடுகள் நிலச்சரிவின்போது மண் மற்றும் பாறைகளால் சூழப்பட்டுள்ளன. அந்த வீடுகளில் சிக்கியுள்ளவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. #Indonesialandslide
மேற்கு வங்காளத்தில் விஷ சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. #Liquor #WestBengal
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள சாந்திப்பூர் என்கிற பகுதியில் வசித்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்த பலர் சமீபத்தில் விஷ சாராயம் குடித்தனர். அடுத்த சில மணி நேரங்களில் அவர்களுக்கு வாந்தி, பேதி போன்ற உபாதைகள் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 60 வயது மூதாட்டி ஒருவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 பேர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, விஷ சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 25 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Liquor #WestBengal
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் பாறை வெடித்து சரிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. #Chinacoalmineaccident #coalmineaccident #Deathtollrises
பீஜிங்:
சீனாவின் பல பகுதிகளில் அனுமதி இல்லாத நிலக்கரிச் சுரங்கங்கள் உரிய பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காமல் இயங்கி வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளில் சிக்கி பல தொழிலாளர்கள் உயிரிழக்க நேரிடுகிறது.
இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாங்டாங் மாகாணத்துக்குட்பட்ட ஒரு நிலக்கரி சுரங்கத்தினுள் கடந்த 20-ம் தேதி மிகப்பெரிய பாறை ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால், அந்த சுரங்கத்துக்குள் செல்லும் இரு நுழைவு வாயில்களும் மூடிக்கொண்டன.

இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இதற்கிடையே, மூடப்பட்ட நுழைவு வாயில்களில் இருந்த இடிபாடுகள் நீக்கப்பட்டு உள்ளே சென்ற மீட்பு படையினர் நேற்று இரு பிரேதங்களை கண்டெடுத்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், இன்று மீட்புப் படையினர் மேலும் ஆறு பிரேதங்களை கண்டெடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, நிலக்கரி சுரங்க விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #Chinacoalmineaccident #coalmineaccident #Deathtollrises
இந்தோனேசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளது. #Indonesiaquaketsunami
ஜகர்த்தா :
இந்தோனேஷியாவின் சுலேவேசியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன.

இந்நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் பலர் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாதிப்புகள் அதிகள் இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. #Indonesiaquaketsunami

இதனிடையே நிலநடுக்கத்தை அடுத்து பல இடங்களில் சுனாமியும் ஏற்பட்டது. பாலு நகரில் 5 அடி உயரத்திற்கு எழும்பிய சுனாமி அலைகள் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் பகுதியை தாக்கியது. இதனால் அந்நகரமே மோசமான சூழ்நிலையை சந்தித்துள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் பலர் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாதிப்புகள் அதிகள் இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. #Indonesiaquaketsunami
தான்சானியா நாட்டில் உள்ள விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 183-ஆக உயர்ந்துள்ளது. #LakeVictoriaFerryAccident
லேக்விக்டோரியா:
தான்சானியா நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான விக்டோரியா ஏரியில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசுப்படகு திடீரென நீரில் மூழ்கியது. இந்த விபத்து குறித்து உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு மீட்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இரண்டு நாட்களுக்கு மேலாக நடைபெறும் மீட்பு பணிகளில் ஒரே ஒரு நபர் மட்டும் இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட அந்த நபர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து ஏற்கனவே படகின் உரிமையாளர் உட்பட விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்யுமாறு தான்சானியா அதிபர் உத்தரவிட்டு இருந்தார். இன்று இதுகுறித்து பேசிய போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு மந்திரி இசாக் கம்வெல்வி கூறுகையில், மீட்பு நடவடிக்கைகளுக்காக அதிநவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அனைவரையும் மீட்கும் வரை மீட்புப்பணிகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார். #LakeVictoriaFerryAccident

இந்த விபத்தில் ஏற்கனவே 136 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 183-ஆக உயர்ந்துள்ளது. படகில் சுமார் 300 பேர் பயணம் செய்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், மீட்பு நடவடிக்கை நடந்துகொண்டே இருக்கிறது.
இந்த விபத்து குறித்து ஏற்கனவே படகின் உரிமையாளர் உட்பட விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்யுமாறு தான்சானியா அதிபர் உத்தரவிட்டு இருந்தார். இன்று இதுகுறித்து பேசிய போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு மந்திரி இசாக் கம்வெல்வி கூறுகையில், மீட்பு நடவடிக்கைகளுக்காக அதிநவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அனைவரையும் மீட்கும் வரை மீட்புப்பணிகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார். #LakeVictoriaFerryAccident
ஆப்கானிஸ்தானில் போராட்டக் களத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. #AfganistanAttack
காபூல்:
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் சமீபகாலமாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த தாக்குதலில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி உயிரிழப்பு 68 ஆக உயர்ந்தது. 128 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகவலை நங்கர்ஹார் பொது சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
இந்த தாக்குதலை தலிபான் அமைப்பு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அனால், தாக்குதல் நடத்தவில்லை என தலிபான் மறுத்துள்ளது. #AfganistanAttack

இந்நிலையில், நேற்று நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள மொமதாரா மாவட்டத்தில் காவல்துறை அதிகாரியான பிலால் பாட்சா என்பவர் அட்டூழியம் செய்வதாகவும், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜலாலாபாத்- டோர்காம் பிரதான சாலையில் போராட்டம் நடைபெற்றபோது, போராட்டக்காரர்களுடன் சென்ற ஒரு பயங்கரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்.

இந்த தாக்குதலில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி உயிரிழப்பு 68 ஆக உயர்ந்தது. 128 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகவலை நங்கர்ஹார் பொது சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
இந்த தாக்குதலை தலிபான் அமைப்பு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அனால், தாக்குதல் நடத்தவில்லை என தலிபான் மறுத்துள்ளது. #AfganistanAttack
ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் புதையுண்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 16 ஆக அதிகரித்தது. #Japanquake #Hokkaidoquake
டோக்கியோ:
ஜப்பான் நாட்டில் கடந்த 4-ந் தேதி ‘ஜெபி’ புயல் தாக்கியது. இந்தப் புயல் காரணமாக கனமழை பெய்தது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. புயல், மழையில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பல்வேறு நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. விமானங்கள், கப்பல்கள், ரெயில் சேவைகள் ரத்தாகி போக்குவரத்து முடங்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

அட்சுமா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. பாலங்கள் பிளவுபட்டன. சாலைகள் பெருத்த சேதம் அடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.
விமான சேவைகள், ரெயில் சேவைகள், புல்லட் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. நியூ சிட்டோஸ் விமான நிலையம் மூடப்பட்டது.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி புதையுண்ட வீடுகளில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்துள்ளார். 26 பேர் காணாமல் போனதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Japanquake #Hokkaidoquake

புயலால் ஏற்பட்ட பாதிப்பு மறைவதற்குள் நேற்று அதிகாலை 3.08 மணிக்கு ஹொக்கைடோ தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை அதிர்வுகள் ஏற்பட்டன.

அட்சுமா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. பாலங்கள் பிளவுபட்டன. சாலைகள் பெருத்த சேதம் அடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.
விமான சேவைகள், ரெயில் சேவைகள், புல்லட் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. நியூ சிட்டோஸ் விமான நிலையம் மூடப்பட்டது.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி புதையுண்ட வீடுகளில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்துள்ளார். 26 பேர் காணாமல் போனதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Japanquake #Hokkaidoquake
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை சார்ந்த விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்று 40 ஆக உயர்ந்துள்ளது. #UPRains #UPRainstoll40
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த இருநாட்களில் மழைசார்ந்த விபத்துகளில் 28 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கோன்டா மற்றும் குஷிநகர் மாவட்டங்களில் தலா 3 பேரும், மிர்ஸாபூர் மாவட்டத்தில் இருவரும், பஹ்ராய்ச், சிதாபூர், மீரட் மற்றும் எட்டா மாவட்டத்தில் தலா ஒருவரும் என நேற்று ஒருநாளில் மட்டும் மின்னல் தாக்கியும், வீடுகள் இடிந்து விழுந்த விபத்துகளில் சிக்கியும் 12 பேர் உயிரிழந்தனர்.
இதனால், கடந்த மூன்று நாட்களில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 40 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #UPRains #UPRainstoll40

கேரளாவில் மழை நிவாரண பணியில் ஈடுபட்ட சமூக சேவகர்கள் 2 பேர் காய்ச்சல் காரணமாக பலியானதையடுத்து எலி காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்து உள்ளது. #KeralaFloods #KeralaRatFever
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழையாக பெய்தது. இதனால் அந்த மாநிலமே பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது.
மழை தற்போது ஓய்ந்து விட்டாலும் மழை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் கேரள மக்கள் முழுமையாக மீண்டு வரவில்லை. பல இடங்களில் வெள்ளம் வடிந்தாலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் கால் நடைகளும் ஆயிரக்கணக்கில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்து கிடக்கிறது.
இதன்மூலம் தொற்று நோய் பரவுவதை தடுக்க கேரள சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் வெள்ள நிவாரணப் பணிகளில் அரசு அதிகாரிகளுடன் சமூக சேவகர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ள பாதிப்பு ஏற்படுத்திய சோகம் மறைவதற்குள் கேரளாவில் எலி காய்ச்சல் பரவி வருகிறது.
கோழிக்கோடு, மலப்புரம், காசர்கோடு, திருச்சூர், பாலக்காடு போன்ற மாவட்டங்களில் எலி காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 10 பேர் எலி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். இவர்களில் 2 பேர் மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட சமூக சேவகர்கள் ஆவர். அவர்களில் ஒருவர் பெயர் குமாரி (வயது 33). கொச்சி பெரும்பாவூர் ஐமுறி பகுதியை சேர்ந்த சமூக சேவகரான இவர் அந்த பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து கொண்டிருந்த போது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனையில் அவர் எலி காய்ச்சலுக்கு பலியானது தெரியவந்தது.
இதேபோல சாலக்குடி பகுதியை சேர்ந்த சமூக சேவகர் சுரேஷ் (36) என்பவர் அந்த பகுதியில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டபோது கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். சாலக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு எலி காய்ச்சல் இருப்பதை கண்டுபிடித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்து விட்டார். இதேபோல நேற்று எலி காய்ச்சலுக்கு மலப்புரத்தில் 4 பேரும், காசர்கோட்டில் 2 பேரும், பாலக்காட்டில் 2 பேரும் இறந்து உள்ளனர். இதன் மூலம் இதுவரை எலி காய்ச்சலுக்கு கடந்த 3 நாட்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்து உள்ளது.
காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஏராளமான பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களது ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டு எலி காய்ச்சல் பாதிப்பு இருந்தால் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது எலி காய்ச்சல் பாதிப்பு காரணமாக 68 பேர் பல்வேறு மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 33 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதனால் எலி காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கேரள சுகாதாரத்துறை மந்திரி சைலஜா கூறும்போது எலி காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், காய்ச்சல் பாதிப்பு இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறும்படியும் கூறி உள்ளார். #KeralaFloods #KeralaRatFever

அமெரிக்காவில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். #USBoatAccident
நியூயார்க்:
அமெரிக்காவின் மிசவுரி மாநிலம், பிரான்சன் அருகே உள்ள சுற்றுலா தலமான டேபிள் ராக் ஏரியில் சுற்றுலாப் பயணிகள் நேற்று படகு சவாரி செய்தனர். 29 பயணிகள், 2 படகோட்டிகளுடன் சென்ற அந்த படகு திடீரென பலத்த காற்று வீசியதால் நிலைதடுமாறி ஏரியில் மூழ்கியது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் தீவிர தேடுதலுக்குப் பிறகு மீதமுள்ள 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். எனவே, படகு விபத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இதற்கிடையே மீட்கப்பட்டவர்களில் 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #USBoatAccident
அமெரிக்காவின் மிசவுரி மாநிலம், பிரான்சன் அருகே உள்ள சுற்றுலா தலமான டேபிள் ராக் ஏரியில் சுற்றுலாப் பயணிகள் நேற்று படகு சவாரி செய்தனர். 29 பயணிகள், 2 படகோட்டிகளுடன் சென்ற அந்த படகு திடீரென பலத்த காற்று வீசியதால் நிலைதடுமாறி ஏரியில் மூழ்கியது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையே மீட்கப்பட்டவர்களில் 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #USBoatAccident
கென்யாவில் அணை உடைந்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. #KenyaDamBurst
நைரோபி:
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் நாகுரு பகுதியில் உள்ள படேல் அணையில் நேற்று முன்தினம் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் அங்குள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள வீடுகள், விளை நிலங்கள் வெள்ளத்தால் மூழ்கின.
முதல் கட்டமாக 41 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பேரிடர் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், கென்யாவில் அணை உடைந்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக பேரிடர் மீட்பு அதிகாரிகள் கூறுகையில், நாகுரு பகுதியில் உள்ள படேல் அணையில் உடைப்பு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் மாயமாகி உள்ளனர் என தெரிவித்தனர். #KenyaDamBurst